Friday, February 11, 2022

பொதுமக்களை சங்கடப்படுத்தும் வேலை நிறுத்தங்கள்


 அரச ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் உதாசீனப்படுத்தும்போது  வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும் அரசாங்கம் அதற்கு செவிசாய்ப்பதில்லை. வேலை நிறுத்தம் உச்சக்கட்டத்தை அடையும்போது பேச்சுவார்த்தை நடத்தபடும் எந்த ஒரு வேலை நிறுத்தப் போராட்டமும் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தையில் முடிவு கானப்படுவதில்லை.

காலையில் உடகச் செய்திகலில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பற்றிய செய்திகளே முதலிடம் பிடிக்கின்றன. மின்சார சபை ஊழுயர்கல், வேலை நிறுத்தம், ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்,ஆசிரியர்கள் வெலை நிறுத்தம், போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொடர்ச்சியாக வேலை நிறுத்தச் செய்திகளே முதலிடம் பிடிக்கின்றன. 

கடந்த ஆண்டு அயிரக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் வாழ்க்கை, சமூக நிலைமைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி  வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.  ஆசிரியர்களின்  வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்து ஆசுவாசமாக இருப்பதற்கிடையில் சுகாதாரத்துறைத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால்  நாடெங்கும் உள்ள வைத்திய சாலைகள் முடங்கின.

  சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் திடீர் கடமை அழைப்பு கொடுப்பனவுகள் - 3,000 ரூபாயிலிருந்து ($ஊஸ்15) 10,000 ரூபாயாக – அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் மேலதிக நேர ஊதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பதவி உயர்வு நடைமுறைகளை போன்ற கோரிக்கைகளி முன் வைத்து வேலை நிறுதம் நடைபெறுகிறது. 

கடந்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் சுமார் 30 வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் அதே கோரிக்கைகளை மீண்டும் முன்வைத்து, பின்னர் இந்த நடவடிக்கைகளை ஒத்திவைக்கின்றன.

ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு, கடந்த நவம்பரில் சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்மேளனம் (சு.தொ.வ.ச.) அழைப்பு விடுத்திருந்தது. மாகாண ரீதியான தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 15 தொழிற்சங்கங்களின் கூட்டணியான சு.தொ.வ.ச., பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன்னர் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சுகாதார ஊழியர்களின் காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தப்போவதாக அறிவித்தது.

சுகாதாரத்துறை ,மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றில் வேலை செய்பவர்களீன் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நேரடியாக மக்களைப் பாதிக்கக்கூடியவை. அவர்களின் நியாயமான கோரிக்கைகள் உதாசீனபடுதப்படும்போது பொதுமகள் தான் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அதனால் எந்தபாதிப்பும் இல்லை.

மின்சாரம் தடைப் பட்டால் உடனடியாக இயங்கும் வகையில் பின்  பிறப்பாக்கி இருக்கும். பஸ், ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் அவர்கள் பாதிப்படைவதில்லை. அவர்களிடம் வகை,வகையான வாக்னங்கள் இருக்கும். தும்மல், தடிமல் என்றாலே அரசியல்வாதிகள் தனியார் வைத்தியசாலைகளித்தான் நாடுவார்கள். ஆனால், அப்பாவி ப் பொதுமக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்தைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.வேலை நாட்கள், விடுமுறைகள் போன்றவை அவற்றுள் அடக்கம். ஆனால்,  வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை இலங்கைச் சட்டம் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை, இருப்பினும் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் வேலைநிறுத்த நடவடிக்கையை உள்ளடக்கியது மற்றும் அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தத்தை தடைசெய்கிறது. வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்னதாக, பரிந்துரைக்கப்பட்ட முறையில் மற்றும் படிவத்தில் முதலாளிக்குத் தெரிவிக்கப்பட்டால், சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது.கட்டாயம் மத்தியஸ்தம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் என்று அழைக்கப்படுபவற்றின் நீண்ட பட்டியல் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை கட்டுப்படுத்துகிறது.

தொழிற்சங்கங்கள் ஆணைச் சட்டம் மற்றும் தொழில் தகராறு சட்டம் வேலைநிறுத்தம் என வரையறுக்கிறது, எந்தவொரு வர்த்தகம் அல்லது தொழிற்துறையில் இணைந்து செயல்படும் நபர்களின் குழுவால் வேலை நிறுத்தம், அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட மறுப்பு, அல்லது எந்த எண்ணிக்கையிலான நபர்களின் பொதுவான புரிதலின் கீழ் மறுப்பு , அல்லது அவ்வாறு பணியமர்த்தப்பட்டிருந்தால், தொடர்ந்து வேலை செய்ய அல்லது வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு.

தொழில் தகராறு என்பது முதலாளிகளுக்கும் வேலையாட்களுக்கும் இடையில் அல்லது வேலையாட்களுக்கும் வேலையாட்களுக்கும் இடையேயான வேலை அல்லது வேலையின்மை, அல்லது வேலை விதிமுறைகள், அல்லது தொழிலாளர் நிலைமைகள், ஒரு நபரின் வேலை நிலைமைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய எந்தவொரு சர்ச்சை அல்லது வேறுபாடு ஆகும்.

வேலை நிருத்தம் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை செய்ய் அரசாங்கம் தயாராக இருக்கிறது.வேலை நிறுத்தம் செய்தவர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பிய வரலாறு ஏற்கெனவே இலங்கையில்       பதியப்பட்டுள்ளது.

அரசாங்கங்கள்  மாறினாலும் வேலை நிறுத்தப் போராட்டங்கள்   தொடர்ந்த வண்ணமே உள்ளன. வேலை நிறுதம் செய்பவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கபப்ட வேண்டும். அரசங்கம் இன்று மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. ஆகையல் அரசுக்கு நெருக்கடி கொடுக்காது நியாயமான தீர்வை எட்டுவதர்கு தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும்.

No comments: