திரைப்படங்களில் வரும் அதிர்ச்சியான சம்பவங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது மிகமிகக் குறைவு. அனால், கண்டாவளை பாடசாலையில் மணவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னால் அரசியலும், அதிகாரமும் இருப்பது தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பாடசாலையில்
71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு. ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட
தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்தது.அவர்களை
யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு
அழைப்பு விடுத்திருந்தது. இது வழக்கம் இது
வழக்கமானசெய்திதான். மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும்
கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த
நிறுவனம் கண்ணாடிகளின் விலைகளை பெற்றோர்களிடம்
தெரிவித்தது. இதன் பின்னர்தான் சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை அபப்டியே கடந்துபோகாது கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக
கடமையாற்றும் மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் எடுத்த துரித நடவடிக்கையின் பிரகாரம் மேலதிக பரிசோதனை செய்யப்பட்டபோது 71 மாணவர்களில்
வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில்
எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள்
இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார்.
இதனால் அந்த தனியார் நிறுவனம்
நடத்திய கண் பரிசோதனையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக சோதனை செய்யாது
வருமானத்தை எதிர் நோக்கி சோதனை செய்தது என்பதை அறிய முடிகிறது. கிராமங்களிலும் ,பாடசாகளிலும்
இலவச மருத்துவம் முகாம்களை லயன்ஸ் கிளப், தன்னார்வ நிறுவனங்கள் என்பன நடத்துவது வழமையானது. அங்கே இலவசக் கண்ணாடிகள் வழங்கப்படும். சிறப்பு
மருத்துவசேவை தேவையானவர்களுக்கு உரிய உதவிகள்
இலவசமாக வழங்கப்படும்.
பாடசாலையில் கண் பரிசோதனை
நடத்திய தனியார் நிறுவனமும் இலவசமாக செய்வதாகவே
பலரும் நினைத்தார்கள். கண்ணாடிக்குக் காசு வேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோதுதான் அந்த
நிறுவனத்தின் மோசடி அம்பலத்துக்கு வந்தது.
கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து
மக்களைக் காகும் தெய்வமாக வைத்தியர்கள்
போற்றப்படும் இவ் வேளையில் ஒரு சில வைத்தியர்களின் செய்ற்பாடூ வருத்தமளிக்கிறது. அதனையும் இன்னொரு வைத்தியர் கண்டு பிடித்தது ஆறுதலான
செய்தி. ஆனாலும் அந்த நேர்மையான வைத்தியருக்கு இன்னொரு வைத்தியரும், அரசியல்வாதியும்
அச்சுறுத்தல் விடுவது சினிமாவில் வரும் காட்சிபோல் உள்ளது.
கண்டாவளை சுகாதார வைத்திய
அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்
வகையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஊடக சந்திப்பொன்றை
ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, கண்டாவளை சுகாதார
வைத்திய அதிகாரி கடந்த 26ம் திகதி தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாகவும், பின்னர் வாகனம்
ஒன்றில் வந்த குழுவினரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலும் கிளிநொச்சி
தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளரினால் கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு
வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் கிளிநொச்சி
மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் குறித்த வைத்தியரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும்,
இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தும்
இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கபப்டுபவர்கள்
தண்டிக்கப்படுபடுவார்களா அல்லியா எனப்து விசாரணையின் முடிவில் தெரிய வரும். இந்தச்
சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள், மருத்த்வ
அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் நடைபெறும் சம்பவங்கள்
பல முன்னரும் ஊடகங்களில் முதலிடம் பிடித்தன
அவறின் விசரணைகளின் முடிவு பகிரங்கப்படுத்தப்படவிலை.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல
தனியார் வைத்தியசாலையில் நடைபெற்ற கண் மருத்துவ சிகிச்சியின் பின்னர் பாதிக்கப்பட்ட
நோயாளிகள் மெலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்
பரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அந்தச்
சம்பவம் பற்றி பரபரப்பான செய்திகள் வெளியாகின.
வடமராட்சியில் உள்ள தனியார் வைத்திய் சாலையில் சத்திர சிகிச்சையின் பின்னர் துணி வைத்துத்
தைக்கப்பட்டதால் பெண்மணி ஒருவர் மரணமானதாகச் செய்தி பிரசுரமானது. அந்த சம்பவத்தை
பலரும் மறந்த நிலையில் கண்டாவளை சம்பவம் அரங்கேறியுள்ளது.\\ மருத்துவ மோசடியைக் கண்டு பிடித்த பெண் மருத்துவர் தொடர்ந்து அங்கு கடமையாற்ருவாரா அல்லது இடமாற்றம் எனும் பெயரில் தூக்கி எறியபடுவாரா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment