Saturday, February 19, 2022

ஒற்றுமையைக் காட்டமுயலும் அரசங்கம் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள்

பொருளாதாரம் பின்னடைவு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு,  அந்நிய செலாவனி குறைபாடு, ஏற்றுமதி பாதிப்பு, தொழிற்சங்கப் போராட்டம் என இலங்கை தடுமாரும் வேளையில்  தேர்தல் சிந்தனையில் சில தலைவர்கள் க்னவு காண்கிறார்கள்.

பலமான எதிர்க் கட்சியாக இருக்க வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. அங்கும் சஜித்துக்கு எதிராக உள்ளக அரசியல் நடைபெறுகிறது. ஜே,வி,பி வழமைபோல சக்திமிக்க கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி சஜித்தை முன்னிறுத்தி அரசியல் களத்தில் நிற்கிறது. சம்பிக்க தனது படையணீயுடன்  ஜ்னாதிபதியாக முயற்சி செய்கிறார்.

எதிர்வரும் தேர்தல் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகவே இருக்கும் என்றும், அது பாராளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றும் பசில் ராஜபக்ச ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை, அதைப் பற்றி புதுடில்லிக்கு எழுதவும் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதில் அவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.   உள்ளூராட்சித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும் இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியைக் கண்டுபிடிக்கவோ, கடனை அடைக்கவோ, உரமில்லா உணவுப் பயிரிடவோ உதவப் போவதில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அனுராத புரத்தில் நடத்திய கூட்டத்தில் ஸ்ரீலங்கா  சுட்தந்திரக் கட்சியும் இடதுசரிகள் சிலரும் கலந்துகொள்ளவில்லை.  முன்னணி அமைச்சர்கலின் ட்தலையையும் அங்கு காணவில்லை. அரசங்கத்தின்பலத்தி வெளிக்காட்டுவதர்காக நடத்துப்பட்ட அநுராதபுரக் கூட்டம் எதிர்பார்த்த  பலனைக் கொடுக்கவில்லை.  முக்கியமான அமைச்சர்கள்  உள்ளிருந்து அரசாங்கத்துகுக் குடைச்சல் கொடுக்கின்றனர்.   எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களூக்குப் பதிலளிப்பதை விட  சொந்தக் கட்சிய்யில் உள்ளவர்களின் குடைச்சலைச் சமாளிக்கவே நேரம் போதவில்லை.

புதிய அரசியல் யாப்பு ஒன்றைஉருவாக்கும் முயற்சியில் அரசாங்கள் இறங்கியுள்ளது."ஒரே நாடு.  ஒரேசட்டம்" என்ற ஒலியை தமிழ் மக்களும் , முஸ்லிம் மக்களும் ரசிக்கவில்லை.    அரசியல் அமைப்புச் சட்டத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் வரைபை அமுல் படுத்துவதற்கு தயங்குபவர்களின் புதிய அரசியல் யாப்பு எப்படி இருக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூட்டணி இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது, தமிழர்களினதும், முஸ்லிம்களினது வாக்கு இல்லாமல் இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், தேர்தல் கால பிரசாரத்தின் மூலம் அந்த நிலை மாற்ரி அமைக்கப்பட்ட வரலாரும் இலங்கையில் உள்ளது.

இன்றைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.  அடுத்து வரும் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், புதிய தொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான பலம் எதிர்க் கட்சிகளிடம் இல்லை,  தனி ஒருவனாக ரணில் தலையைக் காட்டுகிறார். ஐக்கிய மக்கள் சக்திக்குள் சஜித், சம்பிக்க எனும்  இரட்டைத் தலைமை இருக்கிறதோ என்ற சந்தேகம் எழூந்துள்ளது. அரசாங்கத்துக்குள் சலசலப்பு இருந்தாலும்  அதன் கட்டுக்கோப்பு  குறையவில்லை. தமிழ் மக்களின் சனத் தொகைக்கு அதிகமான கட்சிகள்  வடக்கு, கிழக்கில் உள்ளன. பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி,  சிரீலங்கா  சுதந்திரக் கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி,  கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்ரின் அங்கத்தவர்களும் வடக்கு கிழக்கில் உள்ளனர். தமிழ் மக்கலின் வாக்குகள் அதிகப் படியாக ஒரே கட்சிக்கு செல்லும் என்பதில் எது வித உத்தரவாதமும் கொடுக்க முடியாது.முஸ்லிம்  கட்சிகளீன் நிலையும் அதேதான்.

ஜே.வி.பியும் சம்பிக்கவும் சிலவேளை இணையலாம்.  அதர்கான சாத்திய கூறுகள்   மிகவும் குறைவாக உள்ளன. மக்களின்மறதிதான் அரசியல்வாதிகளின் மூலதனம். இன்றைய பொருளாதார சிக்கல்கள் அனைத்தையும் ஒப்பேற்றிய பின்னர்தான் தேர்தலை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கும்.

 இலங்கை,அரசியல்,கொழும்பு,கோட்டா,ரணி,மஹிந்த,சஜித் 

No comments: