மூன்றாவது நாள்,
உக்ரைன் தலைநகரின் தென்மேற்கில்
உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன
வாசில்கிவ் நகரில் உள்ள எரிபொருள்
கிடங்கு ரஷ்ய ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதாக அதன் மேயர் கூறினார்.
ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் எரிவாயு குழாய் ஒன்றையும் ரஷ்யா வெடிக்கச்
செய்தது.
விளாடிமிர் புடின் தனது படைகளின்
வெளிப்படையான முன்னேற்றமின்மையால் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் தனது பலத்த
பாதுகாப்புடன் கூடிய ரஷ்ய மலைக் குகையில் புகைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஒரு வினோதமான ஒரேஞ் பிரகாசம் வானத்தை நிரப்பியது, எரிபொருள் கிடங்கு
தாக்கப்பட்டிருக்கலாம் என்று CNN தெரிவிக்கிறது
கியேவின் இரண்டு விமான நிலையங்களில் ஒன்றான போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது
வைத்தியசாலையின் நிலவறையில்
பிரசவம்
சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி தனி நாடாக இருக்கும் உக்ரைனை ரஷ்யாவுட இணைக்கும் முயற்சியை ரஷ்ய ஜனாதிபது புட்டின்
மெற்கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யப்
படைகள் குவிப்பப்பட்ட போது யுத்தம் ஆரம்பமாகப் போகிறதென உகலநாடுகள் எச்சரிக்கை விடுத்தன. அதனை மறுத்த புட்டின் இராணுவப் பயிறசி என்றார். பயிறசியை முடித்துக்கொண்ட இராணுவம் வெளியேறுவதாகப்
போக்குக் காட்டிக்கொண்டு உக்ரைனைத் தாக்க உத்தரவிட்டார்
புட்டின். உக்ரைனில் இருக்கும் ரஷ்ய உளவாலிகள் தாக்குதல்களை வழிப்படுத்துகிறார்கள்.
தரைப்படை, கடல் படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளும் ஒரே நேரத்தில் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. அழகான வண்ணமயமான உக்ரைனின் தலை நகர் கீவ் புகைமண்டலமாகியது. பீரங்கி, ஹெலி, விமானம், ரொக்கெற் லோஞ்சர் ஆகியவற்ரின் தாக்குதல்களால் கீவ் சின்னாபின்னமாகியது.
உக்ரைனில் இருக்கும் ரஷ்ய மொழி
பேசுபவர்களை உக்ரைன் பழிவாங்குகிறது. இன அழிப்பு
செய்கிறது போன்ற குற்றச்சாட்டுகளைச் அள்ளி எறிந்து உக்ரைனுக்குள் படையை நடத்திய புட்டினின் குறி உக்ரைனின்
இராணுவக் கட்டமைப்பு. இராணுவ தளங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியனவற்றின்
மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களின் குடியிருப்புகள் ரஷ்யாவின்
தாக்குதலால் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.
ரஷ்யாவின் படைபலத்துக்கு முன்னால் உக்ரைனின் படைபலம் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் ரஷ்யாவின் அத்துமீறலை தடுப்பதற்கு உக்ரைன் திடமுடன் நிற்கிறது. ரஷ்ய ஜனாதிபது புட்டினின் அரசியல் அனுபவம் உக்ரைனின் ஜனாதிபதி வோலேடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கிடையாது. சோவியத் ஒன்றியமாக ரஷ்யா இருந்தபோது உளவுப் படையின் பிரதானியாக வெளிநாடுகளில் வலம் வந்தவர் புட்டின். ரஷ்யா உருவானபோது அரசியல்வாதியாகி சுமார் 30 வருடங்களாக அசைக்க முடியாத தலைவராக புட்டின் திகழ்கிறார்.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து
உக்ரைன் பிரிந்தபோது அங்கு ரஷ்யாவின் கைப்பொம்மையாக
ஜனாதிபதியாக இருந்தார். தேர்தலில்
புதிய ஜனாதிபதியாக வோலேடிமிர் ஜெலன்ஸ்கி பதவி
ஏற்றார். நகைச்சுவை நடிகரான அவர் ரஷ்யாவின் பிடியில் இருந்து உக்ரைனை மெது மெதுவாக
மீட்டார். இனால் கோபடைந்த அரசியல் எஈதியக உக்ரைன் ஜனாதிபதிக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.
ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்பவர்களுக்கு ரஷ்யா உதவியது.
அமெரிகாவின் தலைமையிலான நேட்டொ
அமைப்பில் உக்ரைன் இணைந்து விடுமோ என்ற அச்சம் புட்டினுக்கு ஏற்பட்டது. இந்த யுத்தம் தொடங்குவதற்கு அதுவே முக்கிய காரணம்.
'நகரங்களை அழிப்பது எங்கள்
நோக்கமல்ல' என ரஷ்யா தெரிவித்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக பத்திரிகையாளர்கள்
தெரிவித்தனர்.தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்த ரஷ்ய படையினருடன் இவான்கிவ் என்ற
இடத்தில் உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக மோதினர்.
இந்த இடம் கீவ் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. ரஷ்டாவின் எல்லையில் உள்ள
நேட்டொ நாடுகளைப் பாதுகாப்பதற்கு நேட்டோ நாடுகள் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதோடு
மட்டுமல்லாமல் இணைய வழி தாக்குதல்களையும் அரங்கேற்றி உள்ளது. உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ
இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதன் அண்டை நாடுகளான லாட்வியா மற்றும் லித்துவேனியாவிலும்
நுாறுக்கும் மேற்பட்ட கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இணைய
வழி தாக்குதலை அரங்கேற்ற ரஷ்யா மூன்று மாதங்களாக திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளது.
ரஷ்யாவில் பாதுகாப்பான இடத்தில் இருந்ஹ படி போரை கண்கானிக்கிறார். புட்டின். உக்ரைன் ஜனாதிபதி வோலேடிமிர் ஜெலன்ஸ்கி இராணுவ கவச உடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளார். துணை ஜனாதிபதியின் மனைவியும் இராணுவ உடை அணிந்தபடி காட்டியளிக்கிறார். உயிரைப் பொருட்படுத்தாத உக்ரைன் மக்கள் ரஷ்ய தாங்கிகளை ஆங்காங்கே தடுக்கின்றனர். பொது மக்களுக்கு துப்பாக்கிகளைக் கொடுத்த உக்ரைன் அரசு போராட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.கருங்கடலில் சென்று கொண்டிருந்த ஜப்பானின் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. தாய்வானுக் கருகில் அமெரிக்காவின் போர்க்கப்பல் செல்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த அத்துமீறலுக்கு ஒரு சில நாடுகள் அங்கீகாரம்
கொடுக்கின்றன. ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதைக்கு
ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படாது. எதிர் காலத்தில் பாரிய சிக்கல் ஏர்படுவதில் இருந்து
ரஷ்யா தப்ப முடியாது. உலகின் பொருளாதாரத் தடையால்
ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்த உலக நாடுகளுக்கு உடனடி பாதிப்புகள் ஏற்படும்.
ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின்
2வது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் நுழைந்தன. ஆயிரத்துகும் அதிகமான ரஷ்ய வீரர்கள்
கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா இதனை மறுத்துள்ளது. குறைந்தது 240 உக்ரைன்
குடிமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.கொல்லப்பட்டவர்களில் செச்சென் ஜெனரல் மாகோமெட் துஷேவ்வும்
அடங்குவர். இவர் உக்ரைன் ஆட்சியில் சக்தி வாய்ந்தவராவார்.ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மக்கள் வீடு வாசல்களை இழந்து
அகதிகளாகியுள்ளனர்.
1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டோர் லியாஸ்கோ தெரிவித்துள்ளார். மக்களை வெளியில் வரவேண்டாம் என அறிவித்த உக்ரைன் அரசு ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தியுள்ளது. இரவு 10:00 மணியில் இருந்து, காலை 7:00 மணி வரையிலான ஊரடங்கு, மாலை 5:00 மணியில் இருந்து காலை 8:00 வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சாலைகளில் இருப்போர், எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'எங்கள் அரசை கவிழ்த்து, தனக்கு ஆதரவான அரசை அமைக்க
புடின் முயற்சிக்கிறார்' என உக்ரைன் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கான இரகசிய நடவடிக்கைகளை ரஷ்ய உளவு அமைப்பு ஏற்படுத்தியிருக்லாம். உக்ரைன் ஆட்சியைக் கைப்பற்றும்படி ரஷ்ய ஜனாதிபது
புட்டின் அறிவித்ததால் இந்தச் சந்தேகம் உலகின் மத்தியில் எழுந்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா மோதல் அதிகரித்து
வருவதையடுத்து இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள்
உக்ரைனுக்கு ஆயுதங்களைக் கொடுத்துதவுகின்றன.
உக்ரைன் நாட்டுக்கு 350 மில்லியன் அமெரிக்கடொடாலர் மதிப்புள்ள இராணுவ போர் கருவிகளை
வழங்க அமெரிக்க ஜ்னாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் செயல்படும் ரஷ்ய வங்கிகள், தொழில் ஸ்தாபனங்கள் உள்ளிட்டவை செயல்பட
அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு குறித்து அமெரிக்க
மாகாண செயலாளர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில் அமெரிக்கா உக்ரைனுடன் தோளோடு தோள் நிற்பதை
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த புதிய உத்தரவு தெளிவுபடுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
ரஷ்ய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பல்வேறு ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ரஷ்யா கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜோ பைடனின் இந்த செயலும் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment