இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டனுமான எம்.எஸ் டோனி அடுத்ததாக கிராஃபிக் நாவலில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாக தோன்றியுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை, தோனி தனது சமூகவலைத்தள பக்கத்தில் நேற்று (2.2.2022) வெளியிட்டிருந்தார். 'பாகுபலி' போன்ற சரித்திர பட நாயகர்கள் கெட்டப்பில் டோனி தோன்றியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இது குறித்து எம்.எஸ் டோனி கூறுகையில்,"இந்த நாவலில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ‘அதர்வா: தி ஆர்ஜின்’ ஆர்வத்தை தூண்டக்கூடிய விறுவிறுப்பான கதைக்களத்தையும், அட்டகாசமான ஓவியங்களை கொண்ட ஒரு கிராஃபிக் நாவல். இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும், எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகரையும் மென்மேலும் படிக்கத் தூண்டும்” எனக் கூறியுள்ளார். இந்த நாவல் பெரும் வெற்றியை தொடர்ந்து திரைப்படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment