Tuesday, April 2, 2019

ராஜஸ்தானின் இலக்கை துரத்து வென்றது ஹைதராபாத்


ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற எட்டாவது ஐபிஎல் போட்டியில் 201 ஓட்டங்கள் அடித்து ஐந்து விக்கெற் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  வெற்ரி பெற்றது. நாணயச்சுழற்சியில்  வெற்றி  பெற்ற ராஜஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடீரண்டு விக்கெற்களை மட்டும் இழந்து 198 ஓட்டங்கள் எடுத்தது. 199 ஓட்ட வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் ஐந்து விக்கெற்களை இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது.

சன் ரைசர்ஸ் அணி கப்டன்  கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்தார். ரகானே, ஜோஸ் படலர் ஜோடி களமிறங்கியது. 3.5 ஓவரில் ரஷீட்கனின் பந்தில் விக்கெற்றை இழந்த ஜோஸ் பட்லர் ஐந்து ஒட்டங்களுடன் வெளியேறினார்.

பட்லர் ஏமாற்றினாலும், ரகானே, சஞ்சு சாம்சன் ஜோடி எதிரணியை அச்சுறுத்தியது. இந்த ஜோடி. முதல் 50 ஓட்டங்களை 8வது ஓவரிலும், 100 ஓட்டங்களை 12வது ஓவரிலும்  எட்டினர்.  இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் 2 ஆவது விக்கெற்றுக்கு 119 ஓட்டங்கள் சேர்த்தபோது நதீமின் பந்தை மணிஸ் பாண்டேயிடம் பிடி கொடுத்து 70 ஓட்டங்களில் ரஹானே ஆட்டமிழந்தார். சஞ்சு சம்சனுடன் பென் ஸ்டோக் இணைந்தார்.  இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்தது. 55 பந்துகளுக்கு முகம் கொடுத்த சஞ்சு சாம்சன் 10 பவுண்டரி நான்கு சிக்ஸருடன் 102 ஓட்டங்கள் எடுத்தார்.  ஒன்பது பந்துகளைச் சந்தித்த  பென் ஸ்டோக் 16 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில்  ராஜஸ்தான் 190 ஓட்டங்கள் எடுத்தது.

199 ஓட்டம் எனும் கடின இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சன் ரைசர்ஸ் ஐந்து விக்கெற்களை இழந்து 201 ஓட்டங்கள் எடுத்து  ஐந்து விக்கெற்களால் வெற்றி பெற்றது. டேவிட் வானர்,பிரிஸ்ரோவ் ஜோடி அதிரடியாகத்ட் துடுப்பெடுத்தாடி  வலுவாக அடித்தளமிட்டது கேன் வில்லியம்ஸன்,விஜய் சங்கர்,யூசுப்பதான் ரஷீட் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற உதவினர். 9.4 ஓவரில் 110 ஓட்டங்கள் எடுத்தபோது வானர் ஆட்டமிழந்தார். 37 பந்துகளுக்கு முகம் கொடுத்த வானர் ஒன்பது பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 69 ஓட்டங்கள் அடித்தார்.

பிரிஸ்டோவ் 45, கேன் வில்லியம்சன் 14,விஜய் சங்கர் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மணிஸ் பாண்டே ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.  15 பந்துகலில் விஜய் சங்கர் அடித்த 35 ஓட்டங்களால் ஹைதராபாத் வெற்றியை நெருங்கியது. யூசுப் பதான்,ரஷீட் கான் அகியோர் ஆட்டமிழக்காது முறையே 26 15 ஓட்டங்கள் எடுத்தனர்.
தோல்வியை வெற்றியாக்கிய ஹைதராபாத் இந்த சீசனில் வெற்றி இலக்கை விரட்டி   200 ஓட்டங்கள் அடித்து சாதனை செய்தது.

Friday, March 29, 2019

பரபரப்பான ஆட்டத்தில் நோபோல் சர்ச்சையுடன் மும்பை வென்றது


மும்பை இந்தியன், ரோயல் சலஞ்ச் பெங்களூர் ஆகியவற்றிக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரபான போட்டியில் ஆறு ஓட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணித்தலைவர் கோஹ்லி, துணைத்தலைவர் ஆகிய இருவரும்  முதல் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தினர். சென்னையிடம் தோல்வியடைந்த பெங்களூரும், டெல்லியிடம் தோல்வியடைந்த மும்பையும் ஐபிஎல்லின் ஏழாவது போட்டியில் சந்தித்தன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணித் தலைவர் கோஹ்லி பந்துவீசைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை எடு விக்கெற்களை இழந்து 187 ஆட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்களிலில் ஐந்து விக்கெற்களை இழந்து ஆறு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எதிரணி நிர்ணயிக்கும் கடினமான இலக்கை விரட்டி அடிக்கும் டிவில்லியஸ் களத்தில் இருந்தும் பெங்களூர்  தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. 15    போட்டிகளை விரட்டி பெங்களூருக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிவில்லியஸ் ஆட்டமிழக்காமல் நின்றபோது  முதன் முதலாக பெங்களூர் தோல்வியடைந்தது.

பென் கட்டிங், ரஷீத் கலாம் ஆகியோர் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆலோசகராக கடமியாற்றிய லசித் மலிங்க, பாயங் மார்க்கண்டே ஆகியோர்   சேர்க்கப்பட்டனர். காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அடம் மைல்னேக்குப் பதிலாக மேற்கு இந்திய வீரர் அசாரி ஜோசப் இணைந்துள்ளார்.

 மும்பை அணி வீரர்கள் டிகொக்,ரோஹித் சர்மா ஜோடி ஆட்டத்தை ஆரம்பித்தது. இருவரும் இணைந்து 54 ஓட்டங்கள் எடுத்தபோது டிகொக் ஆட்டமிழந்தார். ரோஹித்துடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். கடந்த போட்டியில் ஏமாற்றிய சூரியகுமார் யாதவ்,  நிதானமாக விளையாடினார்.48 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

சூரியகுமார் யாதவுடன் இணைந்த யுவராஜ் சிங், சாகலை அச்சுறுத்தினார்.  முதல் இரண்டு ஓவர்களில் 12 ஓட்டங்களை சாகல் கொடுத்தார். எட்டு பந்துகளில்  ஐந்து ஓட்டங்களை யுவராஜ் எடுத்திருந்தபோது 12 ஆவது ஒவரை சாகல் வீசினார்.  அதனை எதிர்கொண்ட யுவராஜ் சிங் முதல் பந்தில்  சிக்ஸர் அடித்தார்.  இரண்டாவது பந்தும் சிக்ஸரானது. ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது. மூன்றாவது பந்தும் சிக்ஸருக்குப் பறந்தது. பெங்களூர் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நான்காவது பந்தும் சிக்ஸரை நோக்கி உயர்ந்தது. முகமட் சிராஜ் அதனைப் பிடிக்க மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பெங்களூர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்த யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார்.

பொலட் ஐந்து  ஓட்டங்களிலும் குருணால் பண்டையாஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கியவர்கள் ஒற்றை எண்ணில் ஆட்டமிழக்க ஹட்ரிக் பண்டையா ஆட்டமிழக்காமல்14 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பைஎட்டு விக்கெற்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது.  38 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெற்களை  வீத்தினார்.
பெங்களூர் வெற்றி பெறுவதற்கு 188 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது பார்த்திவ் பட்டேல், மொயின் அலி ஜோடி களம் இறங்கியது. மொயின் அலி 13 ஓட்டங்களில் வெளியேறினார். பட்டேல்,கோஹ்லி ஜோடி 40 ஓட்டங்கள் எடுத்தது. கோஹ்லியுடன்  டிவில்லியஸ் இணைந்தார்.46 ஓட்டங்கள் எடுத்த ஹோஹ்லி,  பண்டையாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மெயர் ஐந்து ஓட்டங்களுடனும். கிராண்டஹோமன் இரண்டு ஓட்டங்களுடனும் பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

42 பந்துகளில் 75 ஓட்டங்கள் என்ற நிலையில் விக்கெற்கள் வீழ்ந்தாலும்கவலைப்படாமல் டிவில்லியஸ் வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினார்.  11 பந்துகளில் ஏழு ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டிவில்லியஸ்  அதிரடி காட்டத்தொடங்கினார். 29 ஆவது அரைச்சதத்தை அடித்தார் டிவில்லியஸ்.  கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 17 அடிக்கவேண்டும். மலிங்க பந்து வீசினார். முதல் பந்தில் துபே ஆறு ஓட்டங்கள்  அடித்தார். அடுத்த ஐந்து பந்துகளிலும் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. 41 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவில்லியஸ் நான்கு பவுண்டரி ஆறு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 70ஓட்டங்கள் எடுத்தார்.
 ஆறு ஓட்டங்களினால் மும்பை வெற்றி பெற்றது. கடைசிப் பந்து நோபோல் என்பது போட்டி முடிந்தபின்னர்தான் தெரியவந்தது. இது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் அரங்கில் பொலட் 2500 ஓட்டங்கள் அடித்தார். மும்பை அணிக்காக 2500 ஓட்டங்கள் அடித்த இரண்டாவது வீரர் பொலட்  முதலிடத்தில் ரோஹித் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் கோஹ்லி ,5000 ஓட்டங்களைக்  கடந்தார். முதலிடத்தில் ரெய்னா   இருக்கிறார்.

Thursday, March 28, 2019

விதி வலியது அஸ்வின் விதி வலியது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைற் றைடேர்ஸ் ஆகியவற்றுக்கிடையே கொல்கத்தா ஈடன் காடன் மைஅதானத்தில் நடைபெற்ற ஆறாவது போட்டியில் கொல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.ஹைதராபாத்துடனான போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தாவும், ராஜஸ்தானை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற பஞ்சாப்பும் இரண்டாவது  வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்கின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித்தலைவர்  அஸ்வின் கார்த்திக்பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 218 ஓட்டங்கள் எடுத்தது. 219 எனும் இமாலய  வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தானுடனான போட்டியில் எச்சரிக்கை செய்யாமல் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்த அஸ்வின் விதிப்படி என்றார். அதேபோன்ற இன்னொரு விதி.  ரஸல் ஆட்டமிழக்கவில்லை என்றதால் பஞ்சாப் தோல்விடடைந்தது. 30 யார் சுற்று வட்டத்தினுள் நான்கு வீரர்கள் நிற்க வேண்டும்  என்பதுவிதி. ரஸல் ஆட்டமிழந்தப்[ஓது ந்ங்கே மூன்ரு வீரர்கள் தான் நின்றார்கள். அது நோபோல் என அறிவிக்கப்பட்டு ரஸலின் ஆட்டமிழப்பு வாபஸ் பெறப்பட்டது.

கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய அறிமுக வீரர் வருண் சக்கரவர்த்தி மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்தார். முதல் பந்தில் லின் ஒரு ஓட்டம் எடுத்தார். வருன் சக்கரவர்த்தியின் மிகுதி ஐந்து பந்துகளிலும் 6.2.4.6.6 என 24 ஓட்டங்களை நரைன் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரில் 25 ஓட்டங்கள் கொடுத்த மோசமான பதிவை வருன் சக்கரவர்த்தி ஏற்படுத்தினார். முதல் ஓவரில் 25 ஓட்டங்களைக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி அடுத்த இரண்டு ஓவர்களிலும் 10 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெற்றை வீழ்த்தினார்.

 நரேனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். நரேன் அதிக நேரம் நீடிக்கவில்லை 3.3 ஆவது ஓவரில்  ஆட்டமிழந்தார். 9 பந்துகளில் ஒரு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். உத்தப்பாவுடன் ரானா இணைந்தார். இந்த ஜோடி 120 ஓட்டங்கள் எடுத்தது. 34 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த ரானா ஆட்டமிழந்தார்.

உத்தப்பா, ரஸல் ஜோடி பஞ்சாப்புக்கு அதிர்ச்சி கொடுத்தது. 14.3 ஆவது ஓவரில் மூன்று விக்கெற்களை இழந்த டெல்லி 146  ஓட்டங்கள் எடுத்தது. மூன்று ஓட்டங்கள் எடுத்த ரஸல் ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். விதியை மீறியதால் அது நோபோல் என அறிவிக்கப்பட்டு ரஸல் தொடர்ந்து ஆட அனுமதிக்கப்பட்டார். பஞ்சாப் வீரர்களின் பந்துகளை ரஸல் சிதறடித்தார். 17 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த ரஸல் ஆட்டமிழந்தபோது டெல்லி அணி 213 ஓட்டங்கள் எடுத்தது.  20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்த டெல்லி 218 ஓட்டங்கள் எடுத்தது.

214 எனும்   இமாலய இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் நான்கு விக்கெற்களை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.  ராகுல் ஒரு ஓட்டத்துடனும் ,கைல்ஸ் 20, சப்ரஸ்கான் 13  ஓட்ட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மாயங் அகர்வால், டேவிட் மில்லர்  ஜோடி 74 ஓட்டங்கள் எடுத்தது. 34 பந்துகளைச்  சந்தித்த மயங் அகர்வால் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல்59 ஓட்டங்கள் எடுத்தார். ரஸல் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 



Wednesday, March 27, 2019

நிதானமாக விளையாடி இரண்டாவது வெற்றியைப் பெற்றது சென்னை


டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற  ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் ஆறு விக்கெற் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற  சென்னையும், மும்பையுடனான முதல் போட்டியில் வெற்றி பெற்ற டெல்லியும் தமது இரண்டாவது வெற்றிக்காகப் போராடின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

 பிரித்விஷா, ஷிகர் தவான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். 4.1 ஓவர் வரை விளையாடிய இவர்கள் இருவரும் 36 ஓட்டங்கள் எடுத்தனர். தீபக் சகாரின் பந்தை வட்சனிடம் பிடிகொடுத்த பிரித்விஷா 24 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி43 ஓட்டங்கள் எடுத்தது.இம்ரான் தாகீரின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ஓட்டங்கள் எடுத்தார்.தவானுடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் தனது அதிரடி மூலம் வெற்றியைத் தேடிக்கொடுத்த ரிஷாப் பண்டின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த ஜோடி 41 ஓட்டங்கள் எடுத்தபோது பிராவோவால் பிரிக்கப்பட்டது.

பிராவோவின் பந்தை ரிஷாப்பண்ட் தூக்கி அடித்தபோது நீண்ட தூரம் ஓடி அற்புதமாக அதனை சர்துல் தாகூர் பிடித்தார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பண்ட்,இரண்டு சிக்ஸர்கள்,ஒரு பவுண்டரி அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்துக் களம் இறங்கிய இங்ரம் இரண்டு ஓட்டங்களும் கீமோ  பவுல் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.  டெல்லியின் விக்கெற்கள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் தவான் பொறுப்புடன் ஆடி 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்த டெல்லி 147 ஓட்டங்கள் எடுத்தது.
 33 ஓட்டங்களைக் கொடுத்த பிராவோ மூன்று விக்கெற்களை வீழ்த்தினார்.திபக் சாகர் ,ஜடேஜா,இம்ரான் தாகிர் ஆகிடோர் தலா இரு விக்கெற்றை வீழ்த்தினர்.

  வட்சன், ராயுடு ஆகியோர் சென்னை அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். ஐந்து ஓட்டங்களில் ராயுடு ஆட்டமிழந்தார்.  வட்சன் ரெய்னா ஜோடி அச்சுறுத்தியது. இஷாந்த்,ரபாடா,அமித் மிஸ்ரா ஆகியோரின் பந்துகளை இருவரும் விரட்டி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடி 52  ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்ராவின் பந்தை ரிஷாப் பண்டிடம் பிடி கொடுத்து வட்சன் ஆட்டமிழந்தார். 26 பந்துகளைச் சந்தித்த வட்சன் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸார் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.
ரெய்னாவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். இருவரும் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ரெய்னா, கேதார் ஜோடி 25 ஓட்டங்கள் எடுத்தபோது ரெய்னா ஆட்டமிழந்தார். 16 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரெய்னா, 4 பவுண்டரிகள்  ஒரு சிக்ஸர் அடங்கலாக 30 ஓட்டங்கள் அடித்தார்.

ரெய்னா வெளியேற டோனி உள்ளே சென்றார். விரைவாக வெற்றியைக் கொண்டாடலாம் என எதிர்பார்த்த ரசிகர்களை டோனியும் கேதாரும் சோதித்தனர். ஏழு ஓவர்களில் மெதுவாகத் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் மட்டுமே இருவரும் அடித்தனர். சிக்ஸர், பவுண்டரியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 14 ஆவது ஓவரில் கேதார் அடித்த பந்தை தவான் பிடிக்கவில்லை. இந்தப்போட்டியில்  தவான் தவறவிட்ட இரண்டாவது கச் இதுவாகும்.

17  ஆவது ஒவரில் ரபாடா வீசிய முதல் ஐந்து பந்துகளிலும்  டோனியால் ஓட்டம் எதுவும் எடுக்கமுடியவில்லை. கடசி பந்தில் ஒரு ஓட்டம் அடித்தா டோனி.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றி பெறுவதற்கு 11 ஓட்டங்கள்  தேவை. அமித் மிஸ்ரா வீசிய 19 ஆவது ஒவரில் இரண்டாவ்து,மூன்றாவது, நான்காவ்து பந்துகளில் தலா ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. கடசிப் பந்தில் டோனி சிக்ஸர் அடித்து பதற்றத்தைக் குறைத்தார்.

ஐந்து ரபாடா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை அடித்த கேதார் ரிஷாப் பண்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். நாலாவது பந்தை பிராவோ பவுண்டரிக்கு அனுப்ப 150 ஓட்டங்கள் எடுத்த சென்னை ஆறு விக்கெற்களால்  வெற்றி பெற்றது. வட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கடைசி ஓவர் வரை இழுத்தடித்து, பார்வையாளர்களை பதற்றப்படுத்தி  வெற்றி பெறுவது  சென்னையின் எழுதப்படாதவிதி. ஐபிஎல் தொடரில் இதுவரை 44  போட்டிகளை  விரட்டி வெற்றி பெற்றது சென்னை. அவற்றில் 24 போட்டிகளில் 20 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. டெல்லியில் அமித் மிஸ்ரா 50 ஆவது விக்கெற்றைக் கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் ஒருமைதானத்தில் 50 விக்கெற்களை வீழ்த்திய முதல்வீரர் அமித் மிஸ்ரா.

அஸ்வினின் சதியால் வென்றது பஞ்சாப்


கிங்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான்  ரோயல்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஜெய்பூரில் நடைபெற்ற நான்காவது ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரை அஸ்வின் சதிசெய்து ரன் அவுட் ஆக்கியதால்  ராஜஸ்தான் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் பஞ்சாப்பை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்தது. 185 எனும் ஓட்ட எண்ணிக்கையை எதிர்கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் 20ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ராகுல் நான்கு ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்டு வந்த மாயங் அகர்வால் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெற்ரில் இணைந்த கைல்ஸ்,சப்ரஸ்கான் ஜோடி ஏழு ஓவர்களில் 84 ஓட்டங்கள் எடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. புயலாக விளையாடிய கைல்ஸ், பென் ஸ்ரோக்கின் பந்தை ராகுல் திரிபாதியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 47 பந்துகளைச் சந்தித்த கைல்ஸ் எட்டு பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கலாக 79 ஓட்டங்கள் அடித்தார்.
கைல்ஸின் பணியை சப்ரஸ்கான் செய்தார்.  ஆட்டநேர முடிவில் 29 பந்துகளுக்கு முகம் கொடுத்த சப்ரஸ்கான் ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன்  46 ஆட்டங்கள் எடுத்தார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய ராஜஸ்தானுக்கு ரஹானே, ஜோஸ் படலர் ஜோடி நல்லதொரு அடித்தளத்தை இட்டது. 8.1 ஓஒவரில் 22 ஓட்டங்கள் எடுத்த ராஹானேயை அஸ்வின் வெளியேற்றினார். பட்லருடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். ஜோஸ் பட்லரின் அதிரடியால் பஞ்சாப் தோல்வி யடைந்து விடும் நிலை ஏற்பட்டது. 12.5 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 108 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அந்த மோசமான செயலை அஸ்வின் அரங்கேற்றினார். பட்லரைஆடமிழக்கச்செய்ய முடியாத விரக்தியில் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் வெளியேற்றினார்.

மன்கட் முறயில் ஆட்டமிழக்கச் செய்ய முன்னர், எதிரணி வீரருக்கு எச்சரிக்கைவிட வேண்டும். எச்சரிக்கை எதுவும் விடாமல் பட்லரை அஸ்வின் அவுட்டாக்கியது விளையாட்டின் மகத்துவத்தை இல்லாமல் செய்து விட்டது. 43 பந்துகளில் பத்து பவுண்டரி இரண்டு சிக்ஸருடன் 69 ஓட்டங்கள் எடுத்த ஜோஸ் பட்லர் விரக்தியுடன் வெளியேறினார்.

அநியாயமான முறையில் பட்லர் ஆட்டமிழந்ததும் ராஜஸ்தானின் தோல்வி உறுதியாகியது. 19.2 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருது கைல்ஸுக்கு வழங்கப்பட்டது.  

ஐபிஎல்லை அசிங்கப்படுத்திய அஸ்வின்


இந்திய கிரிக்கெற் போட்டிகளின் பிரதான பந்துவீச்சாளராக விளங்கிய அஸ்வின் மோசடியான முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச்செய்து விளையாட்டின் மாண்பை குழி தோண்டி புதைத்துள்ளார். அஸ்வினின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி  184 ஆட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ்  12 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 108  ஓட்டங்கள் எடுத்தது. ஜோஸ் பட்லரை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியதால் தோல்வியடைந்து விடுவோமோ எனப் பயந்த அஸ்வின் 13.5 ஆவது ஓவரில் எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் மன்கட் முறையில் அவரை ஆட்டமிழகச் செய்தார்.

பந்து வீச்சாளர் பந்தை வீசுமுன்னர் அவருக்கு அருகே நிற்கும் துடுப்பாட்ட வீரர்  கிரீஸை விட்டு வெளியேறினால் அவரை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச்செய்வதே மன்கட் அவுட் எனப்படும். இந்த விதியை கிறிக்கெற் உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். 1947 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் சகல துறை வீரரான பில் பிரவுணை எச்சரிக்கை செய்தபின் இந்திய பந்து வீச்சாளரான மன்கட் என்பவர் ஆட்டமிழக்கச்செய்தார். ரன் அவுட் ஆனால் அந்த பந்து கணக்கில் எடுக்கப்படமாட்டாது. ரன் அவுட் இல்லை என்றால்  கணக்கில் சேர்க்கப்படும்.

இதில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அஸ்வினும் ஜோஸ் பட்லரும் இதற்கு முன்னர் இலங்கையில் மன்கட் சர்ச்சியில் சிக்கினார்கள்.  2011 ஆம் ஆண்டு இலங்கை வீரர் திரிமானேயை மன்கட் முறையில் அஸ்வின் ஆட்டமிழக்கச்செய்தார். இன்றைய இந்திய கப்டனான சேவக் மூத்த வீரர்களுடன் கலந்து பேசி அந்த ஆட்டமிழப்பை வாபஸ் வாங்கி திரிமானேயயை விளையாட அனுமதித்தார். எதிரணிக்க் கப்டன் இந்த முடிவை மாற்றலாம். கப்டனான அஸ்வின் முடிவெடுத்தபடியால் எதுவும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இலங்கை வீரர் சுசித்ர செனநாயக்கவினால் மன்கட் முறையில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.

Tuesday, March 26, 2019

முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கெப்பிட்டல்


ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் டெல்லி டேர் டெவில் எனும் பெயருடன் விளையாடிய டெல்லி அணி இந்த ஆண்டு  டெல்லி கெப்பிட்டல் எனும் புதிய பெயருடன் கலம் இறங்கி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை இந்தியன், டெல்லி கெப்பிட்டல் ஆகியவற்றுக்கிடையே மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் டெல்லி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. 214 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது. இந்த சீசனில் முதல் 200 ஓட்டங்களை டெல்லி பதிவு செய்தது.

டெல்லி, மும்பை ஆகிய இரண்டு அணிகளும் க்டந்த 11 வருடங்களில் நடந்த முதல் போட்டியில் நான்கு முறை வெற்றி பெற்றது. ரிக்கி பொண்டிங்கின் பயிற்சியும் கங்குலியின் ஆலோசனையும் முதல் போட்டியில் டெல்லிக்கு ஐந்தாவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. டெல்லி அணியில் இங்ரம்,கோமோ பெளல் ஆகியோருடன் நீண்ட இடைவெளியின் பின்னர் இஷாந்த் சர்மா இணைக்கப்பட்டார். மும்பை அணியில் காஷ்மீர் வீரர் ரஷீக் கலாம் எனும்  இளம் வீரர் அறிமுகமானார். மும்பை முன்னர் அறிமுகப்படுத்திய பும்ரா, ஹர்த்கிக் பாண்டையா, க்ருணாஸ் பண்டையா ஆகியோர் இந்திய அணியில்  முக்கிய வீரர்களாக இருக்கின்றனர்.
 ப்ரித்விஷாவும், தவானும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கலாகக் களமிறங்கினர். அறிமுக வீரரான ரஷீக் கலாம் முதல் ஓவரை வீசினார். முதல் பந்து நோபோலானது. ஆனாலும் முதலாவது ஓவரில் ஆறு ஓட்டங்கள் மட்டும் அடிக்கப்பட்டது. ஸ்ரேயஸ் ஐயர் 16 ஒட்டங்களுடன் வெளியேற இங்ரம் களம் புகுந்தார். மூன்றாவது இணைப்பாட்டத்தில் தவான், இங்ரம் ஜோடி 83 ஓட்டங்கள் அடித்தது. 32 பந்துகளுக்கு முகம் கொடுத்த இங்ரம் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தவானுடன் ரிஷாப் பண்ட் இணைந்தார்.  12.3 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்ததுடெல்லி. தவான் பண்ட ஜோடி ஓட்ட எண்ணிக்கையைஉயர்த்தும் என எதிர் பார்க்கப்பட்டபோது 43 ஓட்டங்கலில் தவான் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த கீமோபோலும் அக்சர் படேலும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.

விக்கெற்க ஒரு பக்கத்தில் வீழ்ந்துகொண்டிருக்க ரிஷாப் பண்ட்  ருத்ரதாண்டவமாடினார். தன்னை எதிர்நோக்கி வந்த பந்துகள் அனைத்தையும் விரட்டினார்.18 பந்துகளில் அரசி சதம் அடித்தார் பண்ட். டெல்லி அணி கடசி ஆறு  ஓவர்களில் 99 ஓட்டங்கள் அடித்தது.27 பந்துகளைச் சந்தித்த ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்காது ஏழு பவுண்டர், ஏழு சிக்ஸர்களுடன் 78 ஓட்டங்கள் அடித்தார். 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்த டெல்லி 213 ஓட்டங்கள் எடுத்தது.

  214 என்ற  இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்து 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ரோகித்சர்மா, குயின் டிகாக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்தனர். ரோகித் 27,சூரியகுமார்2, டிகாக்27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முன்னொரு காலத்தில் அதிரடிகாட்டிய பொலாட்டும் மும்பைக்கு புது முகமான யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்திலிருந்தே பொலாட் அதிரடிகாட்டினார். பொறுமையாக விளையாடிய யுவராஜ் சிங்கும் அதிரடியில் இறங்கினார். மூன்று ஓவர்களில் 40 ஓட்டங்கள் எடுத்து டில்லியை பதறவிட்டனர்.
கீமோ பெளல் இந்த ஜோடியைப் பிரித்தார். கீமோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த பொலாட், 13 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். ஐந்தாவது விக்கெற்றில் இவர்கள் இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். 15 பந்துகளை எதிர்கொணட குருனால் பண்டையா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 35 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங், ஐந்து பவுண்டர்,மூன்று சிக்ஸர் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். நான்கு வருடங்களுக்குப் பின்னர் 31 போட்டிகளில் அசை சதம் கடந்தார் யுவராஜ் சிங். அதன் பின்னர் வந்த வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க 19.2 ஓவரில் மும்பையின் தோல்வி உறுதியாகியது.

டெல்லியிடம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மும்பை தோல்வியடைந்தது. இஷாந் சர்மா, ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ரிஷாப் பண்டுக்கு வழங்கப்பட்டது.