Saturday, June 19, 2021

இங்கிலாந்தை திணறடித்த ஸ்கொட்லாந்து

யூரோ 2020 கிண்ண  குரூப் டி போட்டியில் இங்கிலாந்தைத்  திணறடித்த ஸ்கொட்லாந்து  கோல் எதுவும்  இல்லாது ஆட்டத்தை  சமப்ப‌டுத்தியது.

 பலமான  அணி என  வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்தால் ஸ்கொட்லாந்தின்  தடுப்பணையை  உடைக்க முடியவில்லை.  கோல் அடிப்பதற்கு ஸ்கொட்லாந்துக்கு  அதிக  சந்தர்ப்பம்  கிடைத்தது.அனைத்தும்  வீணாகிவிட்டது. 

இங்கிலாந்து வீரர்கள்  பதற்றமாகவே ஆடினர். ஆனால் ஸ்காட்லாந்துக்கும் அதிர்ஷ்டம் இருந்தது. இங்கிலாந்தின் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில்  பட்டது. 

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஸ்காட்லாந்துக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆண்டி ராபர்ட்ஸனிடமிருந்து பந்தை டியர்னி பெற்றார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸைக் கடந்து பந்தை ஸ்காட் வீரர் ஓடனலுக்கு கொடுத்தார். ஓடனலும் அருமையாக கோலை நோக்கி அடித்தார், ஆனால் அங்கு கோல் கீப்பர் வலது புறம் தாழ்வாக விழுந்து கோல் விழாமல் தடுத்தார். தடுத்த பந்து மீண்டும் வந்த போது சே ஆடம்ஸ் அதனை கோலாக மாற்றத் தவறினார்.

 

5  நிமிடங்களில்  2  கோல்கள்

புகாரெஸ்ட்டில்  நடைபெற்ற யூரோ  கிண்ண‌ பிரிவு சி ஆட்டத்தில் வடக்கு மசடேனியாவுக்கு  எதிராக  விளையாடிய குரோஷியா  2 - 1 கோல்  கணக்கில்  வெற்றி  பெற்றது.

நெதர்லாந்துடனான   முதலாவது  போட்டியில்  தோல்வியடைந்தாலும்  உக்ரேனின் ஆட்டம்  அச்சுறுத்தலாகவே   இருந்தது.உக்ரைன் வீரர்கள் ஆந்த்ரீ யார்மலெங்கோ, ரோமன் யரேம்சுக் ஆகியோர் முறையே 29 மற்றும் 34வது நிமிடங்களில் இடைவேளைக்கு முன்னரே அடித்த  இரன்டு கோல்கள் உக்ரைனுக்கு வெற்றி பெற்று கொடுத்தன.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில், பெரும்பகுதி உக்ரைன் வயிற்றில் மோட்டார் ஓட வைத்த நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி ஒரே கோலை அடித்தார். 

வடக்கு  மசடோனியா வீரர் அவ்ரமோவ்ஸ்கியின் கையில் பந்து பட்டதையடுத்து உக்ரைனுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஸ்லன் மலினோவ்ஸ்கி அடித்தபோது  , வ்டக்கு  மசடோனியா கோல் கீப்பர் அபாரமாகக் கணித்து பிடித்தார்.

வடக்கு  மசடோனியா டோனியா அடித்த ஒரே கோலுமே பெனால்டி கிக் மூலம் வந்ததுதான், ஆனால் உக்ரைன் கோல் கீப்பர் கிரிகரி புஷ்சன் தடுக்க அதனை மீண்டும் நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி கோலுக்குள் தள்ளினார்.

வடக்கு  மசடோனியா அபாரமான‌ ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பயனில்லாமல் போனது. இன்னும் புள்ளிகள் பெறவில்லை. பிரிவு சியில் நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க உக்ரைன் 3 புள்ளிகள் பெற்று 2ம் இடத்திலும் ஆஸ்திரியா 3 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.

இரத்தம்  சொட்ட  சொட்ட  அடிக்கப்பட்ட  கோல்

யூரோ கிண்ண தொடரின் குரூப் டி-யின்    செக். குடியரசு,  குரேஷியா ஆகியனவற்றுக்கிடையேயான   போட்டி  1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. ஆனால் 4 புள்ளிகளுடன் செக். குடியரசு அணி இந்தப் பிரிவில் முதலிடம் வகித்து நாக் அவுட் சுற்று தகுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

 பாட்ரிக் ஷிக் அற்புதமாக ஆடினார், அதனால் அவரை குரேஷிய வீரர்க‌ள் குறிவைத்து முரட்டுத் தனமாக ஆடினர். ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் குரேஷியாவின் கோல் பகுதியில் வலது புறம் மேலே வந்த பந்தைப் பெறுவதில் குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென், செக். வீரர் பாட்ரிக் ஷிக் இருவருமே எம்பினர். அப்போது குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென் உடைய  முழங்கை பாட்ரிக் ஷிக்கின் மூக்கில் பட்டது. இதனால் பாட்ரிக் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

இந்தத் தாக்குதலை குரேஷிய வீரர் வேண்டுமென்றே செய்தார் என‌ பாட்ரிக் ஷிக்  முறையிட்டார். ரீப்ளேயில் லவ்ரென் எம்பி பந்தை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில் முஷ்டியை கொண்டு வந்ததாகவே தெரிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது முழங்கையின் மீது ஷிக் தான் தன் முகத்தைக் கொண்டு சென்று அடி வாங்கியது போல் தெரிந்தது.

ஆனால் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்போது ஸ்பானிய ரெஃப்ரி கார்லோஸ் டெல் செரோ   தொலைக்காட்சி ரீப்ளே முடிவை கேட்டார். உடனே ஸ்பாட் கிக், அதாவது பெனால்டி கிக்கை செக். குடியரசுக்குச் சாதகமாக்கினார்.

பெனால்டி கிக்கையும் ஷிக்தான் அடித்தார். மூக்கில் கொட்டிய ரத்தத்துடன் அவர் பெனால்டி ஷாட்டை இடது காலால் கோலுக்குள் திணித்தார். செக். அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

 இடைவேளையின் போது செக். குடியரசு அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பிறகு குரேஷியா வீரர்கள்  ஆக்ரோசமாக  விளையாடினார்கள்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு 2 நிமிடங்களில் அதாவது 47வது நிமிடத்தில் குரேஷிய வீரர் பெரிசிச் இடது ஓரம் பந்தை எடுத்துக் கொண்டு வேகம் காட்டினார். பிறகு வலதுகாலால் வெட்டி உள்ளுக்குள் நுழைந்தார். அவரை குறிவைத்து தடுக்க நிறுத்தியிருந்த செக். வீரருக்குப் போக்குக் காட்டி அதிவேக ஷாட் ஒன்றை அடித்தார். டாப் கார்னரில் கோல் வலையில் பந்து சிக்கியது. 1-1 என்று ஆட்டம் சமன் ஆனது.

கடந்த 2 உலகக் கிண்ண  போட்டிகள், யூரோ 2016, இப்போது 2021 யூரோ கோப்பை என்று 4 பெரிய  தொடர்களில் கோல்களை அடித்து சாதனை புரிந்தார் குரேஷிய நட்சத்திர வீரர் பெரிசிச்.

மூக்கில் ரத்தம் வர கோல் அடித்த ஷிக் தனது 3வது கோலை இந்த தொடரில் அடித்து முன்னிலையில் உள்ளார். ஷிக் தனது 12 சர்வதேச ஆட்டங்களில் 9 கோல்களை அடித்துள்ளார்.

Thursday, June 17, 2021

யூரோகிண்ண அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி


 யூரோ2020  கிண்ணப்  போட்டியில்  விளையாடிய  இரண்டு  போட்டிகளிலும்   வெற்றி  பெற்றதால் அடுத்த  சுற்றுக்கு  முதல்  அணியாக  தெரிவானது  இத்தாலி.

 குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்ஸ‌ர்லாந்து, இத்தாலி ஆகியவற்ருக்கிடையே  நடைபெற்ற  போட்டியில்  3  0  எனும்  கோல்  கனக்கில்  இத்தாலி  வெற்றி  பெற்றது. ஆட்டத்தின் 26  ஆவது, 52 ஆவது நிமிடங்களில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் சிரோ இம்மோபைல்  ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்ஸ‌ர்லாந்தை, இத்தாலி அணி எளிதாக வீழ்த்தியது.

யூரோ2020  தொடரில்   6  கோல்களை  டித்து  அதிக  கோல் அடித்த  அணியாக  இத்தாலி  விளங்குகிறது.  இத்தாலிக்கு  எதிராக ஒரு  கோல்கூட  அடிக்கப்ப‌டவில்லை. இத்தாலி  தொடர்ச்சியாக 29  ஆவது  வெற்றி. 31  கோல்கள் அடித்துள்ள‌து. எதிரனிகள்  இதுவரை  கோல்  அடிக்கவில்லை.

இத்தாலி அணியின் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய  நடிகை சப்ரினா பெரிலி  நீச்சல் உடையில்  தோன்றி ரசிகர்களை பார்த்து கொடியசைத்தார். யூரோ2020  சம்பியன் கிண்னத்தை  இத்தாலி  வென்றால்   நடிகை  சப்ரினா பெரிலி  நிர்வாணமாக தோன்றுவதாக   உறுதி அளித்து உள்ளதாக  இத்தாலியின்  உதைபந்தாட்ட  ஜாம்பவான் பிரான்செஸ்கோ டோட்டி  கூறியுள்ளார்.

 மற்றொரு ஆட்டத்தில்,   ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி அணியும், வேல்ஸ் அணியும் மோதின. துருக்கி அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காத நிலையில், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே,  கன்னார் ராபர்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது.

வேல்ஸ் 4 புள்ளிகளுடனும்,சுவிட்ஸர்லாந்து  1 புள்ளியுடனும்  உள்ளன. பலம்  வாய்ந்த  இத்தாலியுடன்  வேல்ஸ்  மோதுகிறது.

இரண்டு  போட்டிகளிலும்  தோல்வியடைந்த  துருக்கியுடன்   சுவிட்ஸர்லாந்து மோதுகிறது. இரண்டு  போட்டிகளின்  வெற்றி  தோல்விக்குப்  பின்னரே அந்தப்  பிரிவில்  அடுத்த  சுற்றுக்குத் தெரிவாகும்  அணி  எது  என்பது  தெரிய  வரும்.

  பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, பின்லாந்து ஆகியவற்றுக்கிடையே  நடைபெற்ற  விறுவிறுப்பான  போட்டியில்    45 ஆவது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் முதலாவது கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி ரஷ்யா அணி வெற்றிபெற்றது. பின்லாந்து  தோல்வியடைந்தாலும்  ரஷ்யாவுக்கு  சவால்  விட்டு  விளையாடியது.

Wednesday, June 16, 2021

ரொனால்டோவின் புதிய சாதனை


 யூரோ  கிண்ணப்  போட்டியில் அதிக  கோல்  அடித்து  ரொனால்டோ  புதிய  சாதனை  படைத்துள்ளார்.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

  புடாபெஸ்ட் நகரில்   நடந்த  எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் மோதின‌. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடவில்லை.

பிற்பாதியில் கடைசி கட்டத்தில் போர்ச்சுகல் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்தது. 84-வது நிமிடத்தில் ரபெல் குயரிரோ கோல் அடித்தார். 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய ரொனால்டோ, கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். பிரமிக்க வைத்தார்.

முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ யூரோ  கிண்ண உதைபந்தாட்ட  வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில்ஜேர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. உள்ளூர் ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜெர்மனி அணியில் வீரர்கள் சோபிக்க தவறினர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின்  பின்கள  வீரர் மாட்ஸ்  ஹம்மல்ஸ் கோல் போவதைத் தடுக்க  முயற்சி  செய்தபோது  அது  கோலாகியது.

Monday, June 14, 2021

நிலை குலைந்த வீரர் கண் கலங்கிய ரசிகர்கள்

ஐரோப்பிய  நாடுகளின்  உதைபந்தாட்ட  அணிகளுக்கிடையே  நடைபெறும்  யூரோ2020   தொடரில்  நேற்று  இரவு  டென்மார்க்   தலைநகரான    கோபன்கேஹனில் டென்மார்க்பின்லாந்து  ஆகியவற்றுக்கிடையே  நடைபெற்ற  போட்டியின் போது  டென்மார்க்கின்  நட்சத்திர  வீரரான கிறிஸ்டியன்  எரிக்சன்  திடீரென  நிலை  தடுமாறி  விழுந்ததால் உதைபந்தாட்ட  ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பலம்  வாய்ந்த  டென்மார்க்குக்கு  எதிராக  யூரோ  கிண்ண உதைபந்தாட்ட  அரங்கில்   முதன்  முதலாக   பின்லாந்து  களம்  இறங்கியது. இடைவேளைக்கு  இரண்டு  நிமிடங்களுக்கு  முன்பு   முன்பு  சகவீரரின்   மைதானத்துக்கு  வெளியே  சென்ற  பந்தை   சக  வீரரிடம்  இருந்து  பெற  ஓடியபோது  கிறிஸ்டியன்  எரிக்சன்   நிலை  தடுமாறி  விழுந்தார். அருகிலே  யாரும்  இல்லாதபோது  விழுந்த  எரிக்சன்  உடனடியாக  எழும்பவில்லை. இதனைக்  கவனித்த  நடுவர் அந்தோனி  டெய்லர்  போட்டியை  இடைநிறுத்தி  மருத்துவகுழுவை  அழைத்தார்.

மைதானத்துக்கு  விரைந்த  மருத்துவகுழு  அவருக்கு  அவர்  ஆபத்தான  கட்டத்தில்  இருப்பதை  அறிந்து  இதயத்தை   துடிக்கச்செய்யும்  சிகிச்சையளித்தனர். சகவீரர்கள்  கண்ணீர்  விட்டு  அழுதனர். சந்தோசமாக  ஆரவாரம்  செய்த  ரசிகர்கள்  அதிர்ச்சியில்  உறைந்தனர். தொலைக் காட்சியில்  ரசித்துகொண்டிருந்த  கோடிக்கணக்கான ரசிகர்கள் செய்வதறியாது  திகைத்தனர். எரிக்சன்   விழுவதைப்  பார்த்துக்கொண்டிருந்த  மனைவி  தடுப்பு   சுவர்களைத்தாண்டி   அழுதுகொன்டு  ஓடினார். சகவீரர்கள்  விரைந்து சென்று  அவரைக்  கட்டிப்பிடித்து  தேற்றினர். எரிக்சனுக்கு  முதல்  உதவி  செய்த  மருத்துவர்கள்  மேலதிக  சிகிச்சைக்காக   அவரை  மருத்துவமனைக்குக்  கொண்டு   சென்றனர்.

 போட்டி  இடைநிறுத்தப்பட்டது. மைதானத்தில் திரண்டிருந்த  ரசிகர்கள்  அனைவரும்  எரிக்சனுக்காகப்  பிரார்த்தனை  செய்தனர். 29  வயதான எரிக்சன் டென்மார்க்கின்   மத்தியகள  வீரராவார். டென்மார்க்இன்ரமிலான் ஆகிய  உதைபந்தாட்ட  அனிகளின் நம்பிக்கைக்குரிய  நட்சத்திர  வீரரான கிறிஸ்ரியன் டெனிமான்  எரிக்சனுக்காக உலகில்  உள்ள  ரசிகர்கள் அனைஅவ்ரும்  பிரார்த்தனை செய்தார்கள். 108  போட்டிகளில்  விளையாடிய  எரிக்சன்  36  கோல்கள்  அடித்துளார்.

தீவிர  சிகிச்சையின்  பின்னர்  கிறிஸ்ரியன்  எரிக்சன்  ஆபத்தான  கட்டத்தை  தாண்டி  வைத்தியர்களுடன்  அளவளாவும்  செய்தி  கிடைத்ததும்  மைதானத்தில்  கூடி  இருந்த ரசிகர்கள்   அனைவரும் கைதட்டி  ஆன்ந்தக்கண்ணீவிட்டு  தமது  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். இடை  நிறுத்தப்பட்ட  போட்டி  மீண்டும்  ஆரம்பமாகியது.

பலம்  வாய்ந்த  டென்மார்க்  அணிக்கு  ஈடு  கொடுத்து   பின்லாந்து  விளையாடவில்லை. டென்மார்க்   வீரர்கள்  ஆறுமுறை  கோல்கம்பத்தை  நோக்கி  பந்தை  அடித்தனர். அவை  எல்லாம்  தடுக்கப்பட்டனபின்லாந்து  அணி  ஒரே  ஒருமுறை  மட்டும்  கோல்கம்பத்தை  நோக்கி  பந்தை  செலுத்தியது   அது  கோலாகிவிட்டது.  1   0  என்ற  கோல்  கணக்கில்  பின்லாந்து   வெற்றி  பெற்றது.


வேல்ஸ்,   சுவிட்சர்லாந்து  ஆகியவற்ருக்கிடையேயான   போட்டி  1  1  எனும்  கோல்  கணக்கில்  சமநிலையில்  முடிந்தது.ரஷ்யாவை  எதிர்த்து  விளையாடிய   பெல்ஜியம்  3   0    என்ற   கோல்  கணக்கில்  வெற்றி   பெற்றது.



 

 

 

Saturday, June 12, 2021

அபார வெற்றி பெற்றது இத்தாலி

ரோமில்  நடைபெற்ற  யூரோ 2020   கிண்ண  முதலாவது  போட்டியில் துருக்கிக்கு  எதிராக  விளையாடிய  இத்தாலி  3  - 0 என்ற  கோல்கணக்கில்  வெற்றி  பெற்றதுஇடைவேளை வரை  கோல்  எதுவும் அடிக்கப்படவில்லை.  தொடர்ச்சியாக 27   போட்டிகளில்  வெற்றி  பெற்ற  இத்தாலி  தனது  தொடர்  வெற்றியைத்  தக்கவைத்துள்ளது.

  போட்டி  முழுவதும் இத்தாலியின்  கட்டுப்பாட்டிலேயே இருந்தது.இடைவேளைக்குப் பின்னர் 53 ஆவது  நிமிடத்தில்  இத்தாலி  வீரரிடம்  இருந்து  பந்தை நெஞ்சால்  தடுக்க  துருக்கி  வீரர் மெரி  டெமிரால்  முயற்சி  செய்தபோது பந்து  கோல்  கம்பத்தினுள்  சென்றதால் இத்தாலிக்கு  ஒரு  கோல் கிடைத்தது.  

66 வது  நிமிடத்தில் சிரோ  இம்மொபைலும் 79வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னியும் கோல்களை அடிக்க இத்தாலி முதல் முறையாக யூரோவில் 3-0 என்று வெற்றி பெற்றது. துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


இத்தாலி அணி  வீரர்கள்  64%  பந்தை  தமது  கட்டிப்பாட்டில்  வைத்திருந்தனர். இரு  அணி  வீரர்களும் பந்தை  துல்லியமாக சக  வீரர்களுக்குக்  கொடுத்தனர். துருக்கி  வீரர்கள்  10  முறையும்இத்தாலி  வீரர்கள் 8 முறையும்  விதி மீறினர். துருக்கி வீரர்களுக்கு   எதிராக  இரண்டு  முறை  மஞ்சள்  அட்டை  காட்டப்பட்டது. துருக்கி   வீரர்கள்  3  முறை   கோல்  அடிக்க  முயற்சி  செய்தனர்  எவையும்   கோல்  கம்பத் தை  நோக்கிச்  செல்லவில்லை. இத்தாலி வீரர்கள்  24  முறை  கோல்  அடிகக்  முயற்சித்தனர். 8   முறை  கோல்  கம்பத்தை  நோக்கிச்  சென்ற  பந்து  தடுக்கப்பட்டது.

இன்றைய   போட்டிகள்

வேல்ஸ்-சுவிட்ஸர்லாந்து ( பிரிவு)

இடம்: பாகுஇரவு 6.30 மணி

பிரிவில் இடம் பெற்றுள்ள இரண்டு  அணிகளுக்கும்  ஒரு  வெற்றி  தேவைப்படுகிறது.இத்தாலி, துருக்கி ஆகிய பலமான அணிகளும் இருப்பதால் நாக்-அவுட் சுற்றை எட்டுவது எளிதான விஷயம் அல்ல. 2016‍ஆம் ஆண்டு யூரோ சாம்பியன்ஷிப்பில் அரைஇறுதிவரை முன்னேறி வியப்பூட்டிய வேல்ஸ் அணியில் முந்தைய சாம்பியன்ஷிப்பில் ஆடிய 8 வீரர்கள் இப்போதும் நீடிக்கிறார்கள். ஆனால் காரெத் பாலே, ஆரோன் ராம்சி, ஜோ ஆலென், டேனியல் ஜேம்ஸ் ஆகியோர்  முன்னரைப்போல  துடிப்பாக  விளையாடாதது சற்று  பின்னடைவாக 


உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சுவிட்ஸர்லாந்து கடைசியாக ஆடிய 6 சர்வதேச போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறது. வலுவான ஸ்பெய்னுக்கு எதிரான போட்டி  ஒன்றை  சமநிலைஅயில்  முடித்ததுகிரானிட் ஷாகா, ஹெர்டான் ஷாகிரி, டெனிஸ் ஜகாரியா, ரெமோ பிரெலர் நம்பிக்கை தருகிறார்கள். ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடையுடன் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

டென்மார்க்-பின்லாந்து (பி பிரிவு)

இடம்: கோபன்ஹேகன், இரவு 9.30 மணி

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு பின்லாந்து அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கிறது. சிமோன் கிஜார் தலைமையிலான டென்மார்க் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்

பின்லாந்தை பொறுத்தவரை எதிர்பார்ப்பும் ஏதும் கிடையாது. ஆனால் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதி சுற்று போட்டிகளில் 10 கோல்கள் அடித்த டீமு புக்கி, பிரெட்ரிக் ஜென்சன் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர்.

பெல்ஜியம்ரஷ்யா (பி பிரிவு)

இடம்: சென்.பீட்டர்ஸ் பர்க், நள்ளிரவு 12.30 மணி

சம்பியனாகும்  வாய்ப்பு  உள்ள அணிகளில் ஒன்றான பெல்ஜியம் உலகின்நம்பர் ஒன்அணியாக திகழ்கிறது. ரோம்லு லுகாகு அவர்களின் ஆணிவேராக இருக்கிறார். கிளப் போட்டியில் ஆடிய போது முகத்தில் காயமடைந்த முன்னணி வீரர் கெவின் டி புருனே இன்று  விலையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காயத்தால் அவதிப்படும் ஈடன் ஹசார்ட்டும்   சந்தேகம் தான். ஆனாலும் பெல்ஜியம் அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை.

உலக தரவரிசையில் 38‍ ஆவது இடம் வகிக்கும் ரஷ்யாவுக்கு உள்ளூர் சூழல் அனுகூலமாக அமையும். ஆனால் வலுமிக்க பெல்ஜியத்தை மிரட்ட வேண்டும் என்றால் அலெக்சாண்டர் கோலோவின், ஆர்டெம் ஜியூபா போன்ற ரஷ்ய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.