போத்துகல் உதைப்ந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸுக்குப் பதிலாக ஜோர்ஜ் ஜீசஸ் நியமிக்கப்படுவார் என ஏ போலா' ஊடகம் தெரிவித்துள்ளது .
உலகக் கிண்ண
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெய்னிடம்
1-0 என்ற கோல் கணக்கில் போத்துகல் தோல்வியடைந்த , சில நிமிடங்களிலேயே மார்டினெஸ் இராஜினாமாச் செய்தார்.
71
வயதான ஜீசஸுக்கும், போத்துகல் உதைபந்தாட்ட கூட்டமைப்பின் தலைவரான பெட்ரோ புரோயென்காவுக்கும்
இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏ போலா செய்தி வெளியிட்டுள்ளது.
போத்துகல்
கப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றிருந்த சவுதி புரோ லீக் அணியான அல் நஸ்ரை,ஜீசஸ்
கடந்த சீசனில் லீக் பட்டத்திற்கு வழிநடத்தினார்.
போத்துகலின் பென்ஃபிகா, ஸ்போர்டிங் லிஸ்பன் ,துருக்கியின் ஃபெனர்பாச்சே
ஆகிய அணிகளுக்கு ஜீஸஸ் பயிற்சியளித்துள்ளார்.
அமோராவுடன் தனது பயிற்சியாளர் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, ஜீசஸ் 1973 முதல்
1990 வரை தொழில்முறை வீரராக விளையாடினார்.

No comments:
Post a Comment