Saturday, July 18, 2026

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் குருவை எதிர்த்து நிற்கும் சிஷ்யன்

உதைபந்தாட்ட்டத்தின் மிகப்பெரிய விருதைப் பெறுவதற்காக ஆர்ஜென்ரீனாவின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கனோனியும் ,  அவரது முன்னாள் குருவான ஸ்பெயினின்  பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூண்டேவும் எதிரெதிராகத் தனது அணியை  களம் இறங்க உள்ளனர்.

அவர்களின் உறவு 2017 ஆம் ஆண்டு ஆரம்பமானது. அப்போது, ​​விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றிருந்த  லியோனல் ஸ்கலோனி, லாஸ் ரோசாஸில் உள்ள ஸ்பானிய உதைப்ந்தாட்ட  கூட்டமைப்பின் அக்டமியில் தனது UEFA புரோ பயிற்சியாளர் உரிமத்திற்காகப் பதிவு செய்திருந்தார். அந்தப் பயிற்சிக்கு வழிகாட்டிய பயிற்சியாளர்களில் ஒருவர் டி லா ஃபியூண்டே. அவர் அப்போது ஸ்பெயினின் மிகவும் மதிக்கப்பட்ட பயிற்சியாளர் கல்வியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இருவரும் சர்வதேச உதைபந்தாட்டத்தின்  உச்சியைத் தொட்டுள்ளனர்.

  உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக முதன்முறையாக நடைபெற்ற பீபா   நிகழ்வுகளில், ரசிகர்களின் முன்னிலையில் ஒரு சிறிய கலந்துரையாடல் நடைபெற்றது. ஆர்ஜென்ரீனா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, மேடையைக் கடந்து சென்று தனது முன்னாள் ஆசிரியரான லூயிஸ் டி லா ஃபுவென்டேவை இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.  புகைப்படக் கருவிகள் எதிர்பார்த்ததை விட அந்த அணைப்பு நீண்ட நேரம் நீடித்தது.

 ஆயிரக்கணக்கானோரின் உற்று நோக்கும் கண்களுக்கு முன்னால், வழிகாட்டியும் மாணவரும்  தனிப்பட்ட தருணத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

90 நிமிடங்களுக்கு, லாஸ் ரோசாஸில் உள்ள ஒரு வகுப்பறையில் உருவான நட்பு தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆசிரியரும் அவரது முன்னாள் மாணவரும் ஒரே கோப்பைக்காகப் போட்டியிடுவார்கள். ஆனால், ஆட்டம் முடிந்தவுடன் அந்த நட்புறவும் அரவணைப்பும் மீண்டும் திரும்பும் என நம்பலாம்.

 

 

No comments: