Thursday, July 30, 2026

468 குழந்தைகளுக்கு ஹலண்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது


 உதைபந்தாட்ட ஜூரம் அதிகரித்த வேளையில்  பெருவில்  468 குழந்தைகளுக்கு நேர்வேயின் நட்சத்திர வீரர்  கலண்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெருவின்   அடையாளப் பதிவேட்டின்படி, தற்போது 468 பச்சிளம் குழந்தைகளுக்கு ஹலண்டின் குடும்பப்பெயர் சூட்டப்பட்டுள்ளது, மேலும் 91 குழந்தைகள் எர்லிங் ஹலண்ட் என்ற முழுப்பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி சன்   செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிடும்போது, பெருவியன் பெற்றோர்களுக்கு உதைப்ந்தாட்ட நட்சத்திரங்கள்  உத்வேகம் அளிக்கிறார்கள் என்று பதிவேட்டின் செய்தித் தொடர்பாளர் இவான் டோரஸ் கூறினார்.

" பெருவியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு   பெயர்களைச் சூட்டுவதற்கு பல்வேறு  உதைபந்தாட்ட  நட்சத்திரங்கள்,  உத்வேகமாக விளங்குகிறார்கள்," என்று டோரஸ் பனாமெரிக்கானா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

உலகக்  கிண்ணப் போட்டி தொடங்கிய பின்னரே ஹலண்டின் பெயரிடப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் பதிவு செய்யப்பட்டன என்றும், நோர்வே காலிறுதிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

பதிவுத் தரவுகளின்படி, 3,402 பெருவியர்கள் மெஸ்ஸி என்ற பெயரைக் கொண்டுள்ளனர், அவர்களில் 292 பேர் லியோனல் மெஸ்ஸி என்ற முழுப் பெயரைக் கொண்டுள்ளனர்.

போத்துகல் கப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரைக் கொண்ட 1,185 பேர் நாட்டில் உள்ளனர், அதே நேரத்தில் ஸ்பெயினின் இளம் நட்சத்திரமான லமின் யமாலின் நினைவாக 1,241 பேர் யமால் என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

பிறேஸி முன்கள வீரர் நெய்மர் மிகவும் பிரபலமான கால்பந்து தொடர்பான பெயராகத் திகழ்கிறார், 33,809 பெருவியர்கள் அவரது பெயரைக் கொண்டுள்ளனர்.

 

No comments: