இங்கிலாந்து ஆண்கள் கிறிக்கெற் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங் நியமிக்கப்பட உள்ளதாக இங் கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் வைட் போல் பயிற்சியாளராகத் தொடரவிருக்கும் மெக்கல்லம், கடந்த 12 மாதங்களில் தொடர்ச்சியாக மோசமான முடிவுகளைப் பெற்றதைத் தொடர்ந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தியன்
பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) தலைமைப் பயிற்சியாளராக
16 சீசன்கள் வெற்றிகரமாகப் பணியாற்றிய ஃபிளெமிங், இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா,
தென்னாப்பிரிக்கா ,அமெரிக்காவில் உள்ள சூப்பர் கிங்ஸின் மூன்று தலைமைப் பயிற்சியாளர்
பதவிகளிலிருந்தும் விலகினார்.
53
வயதான ஃபிளெமிங், 2008-ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 111 டெஸ்ட் போட்டிகளிலும் 280 ஒருநாள்
போட்டிகளிலும் விளையாடி, நியூசிலாந்தின் மிகவும் வெற்றிகரமான கப்டன்களில் ஒருவராகத்
திகழ்ந்தார்.
அடுத்த
மாதம் தொடங்கும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும்
நிலையில், ஃபிளெமிங் தென்னாப்பிரிக்காவின் குளிர்கால சுற்றுப்பயணத்தில் தனது கடமைகளைத்
தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment