Wednesday, April 10, 2019

சென்னை வீரர்களின் சுழலில் சிக்கிய கொல்கத்தா


 
கொல்கத்தாவுக்கு எதிராக சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  எழு விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது. கொகத்தா,சென்னை ஆகிய இரண்டு அணிகளும் நான்கு வெற்றி ஒரு தோல்வியுடன் இருந்தமையால் முதலிடத்துக்கான போட்டியாகவே இது கருதப்பட்டது. கடசி ஓவர்களில் அதிரடியாக ஓட்டங்கள் குவித்து கொல்கத்டாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ரஸல் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். டோனியின் வியூகமும் களத்தடுப்பும் சென்னையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்  என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை சென்னை ரசிகர்கள்கொண்டிருந்தனர்.


சென்னைக்கு சவால் விட்டு கொல்கத்தா டுவிட்டரில் பதிவு செய்தது போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஸலை எப்படி சமாளிக்கப்போகிரீர்கள் என சென்னையில் பயிற்சியாளரிடம் கேட்டபோது, ரஸலைப்பற்றி நாம் கவலைப்படவில்லை  அவர் பாட்டில் அவர் விளையாடட்டும். மற்றைவர்களைத்தான்  நாம் கட்டுப்படுத்துவோம் என்றார். அதேபோல்தான் ரஸல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

நாணயச் ழுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 108 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை 17.2 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து 111 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

கொல்கத்தாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரகளான க்ரிஷ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். தீபக்  சஹாரின் ஐந்து பந்துகளில் ஓட்டம் எடுக்காத லின் ஆறாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஹர்பஜனின் இரண்டாவது ஓவரில்   ஆறு ஓட்டங்கள் எடுத்த நரேன், சஹாரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ஓட்டமெடுக்காத ரானா, சஹாரின் பந்தி ராயுடுவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். நான்காவது  ஓவரில் உத்தப்பா 11 ஓடங்கள் எடுத்த நிலையில்  சஹாரின் பந்தை கேதார் ஜாதவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்  பிளேயில் அதிக விக்கெற்களை எடுத்த இஅணியாக சென்னை விளங்கிகுறது.  கார்த்திக் 19 சுபர் மான்கில் ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 10. 1ஓவரில் ஆறு விக்கெற்களை இழந்து  47 ஓட்டங்கள் எடுத்தது. சவ்லா 8 ஓட்டங்களிலும் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர்  ஓட்டம் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ரஸல் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்கள் எடுத்தார். சஹார் மூன்று விக்கெற்களும், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களும் ஜடேஜா ஒரு விக்கெற்றும் வீழ்த்தினர்.

சென்னையின் வீரரான வட்சன் அதிரடியாக விளையாடி 17  ஓட்டங்களும், ரெய்னா 14, ஓட்டங்களும் ராயுடு 21 ஓட்டங்களும் எடுத்தனர்.   ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கிய டுபிளிசி  ஆட்டமிழக்காது 45 ஓட்டங்கள் எடுத்தார் கேதார் யாதவ் ஆட்டமிழக்காமல்  எட்டு ஓட்டங்கள் எடுத்தார் 17.2 ஓவர்களில் சென்னை 11 ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.  

Sunday, April 7, 2019

ரொம்ப தெளிவா இருக்காங்க


இந்திய நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான பரப்புரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. யாருக்காகப் பிரசாரம் செய்கிறோம். யாருக்காக வாக்குக் கேட்கிறோம் எனத்தெரியாமல் பல தலைவர்கள் தடுமாறுகிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணித் தலைவர்களின் நாக்கில் சனி வாசம் செய்கிறான்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா: புஸ்வாமா தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தவர் பிரதமர் மோடி.
[பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கம் புஸ்வாமா தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.]
ராமதாஸ்:  அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வாக்களிக்காதீர்கள். {சுதாகரித்துக்கொண்டு] திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்.

[ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருக்கிறார். உலகுள்ளவரை கடலுள்ள வரை அதிமுகவுடனும் திமுகவுடனும் கூட்டணி சேரமாட்டேன் என சபதம் செய்தவர்.]

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: பாமகவின் ஆபிள் சின்னத்துக்கு வாக்களித்து  [மக்கள் முறுக்கிட்டு மாம்பழம் என சத்தம் போட்டனர். தலையில் அடித்துக்கொண்டு } மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
முதலமைச்சர் எடப்பாடி தேனியில் பிரசாரம் செய்யும் போது ரவிச்சந்திரகுமாருக்கு வாக்களியுங்கள் என்றார்.தானி வேட்பாளரின் பெயர் ரவீந்திரநாத் குமார்.ராஜ்நாத்குமார் என அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார்.
பாரதப்பிரதமர் அப்துல் கலாம் என அமைச்சர் சரோஜா பிரசாரம் செய்தார்.


Saturday, April 6, 2019

டெல்லியை வென்றது ஹைதராபாத்


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி  கெப்பிற்றல் ஆகியவற்றுக்கிடையேடெல்லியில் நடைபெற்ற 16 ஆவது ஐபிஎல் போட்டியில் ஐந்து விக்கெற்களினால் ஹைதராபாத் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதரபாத் அணித் தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி எட்டு விக்கெற்களை இழந்து129  ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய  ஹைதராபாத் ஐந்து விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெற்களால் வெற்றி பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பிருத்விஷா 11 ஓட்டங்களுடனும் தவான் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.  கடந்த போட்டிகளில் கைகொடுத்த ரிஷாப் பண்ட், ராகுல் திவேரியா, இங்க்ராம் ஆகியோர்  ஐந்து ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 13.3 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை இழந்த டெல்லி 75 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.  கிறிஸ் மொரிஸ் 17 ஓட்டங்களும்,  அக்‌ஷர் படேல் அதிக பட்சமாக 13 பந்துகளில் 23 ஓட்டங்கள் அடித்தனர்.

புவனேஷ்வர் குமார்,மொஹமட் நபி,சித்திக் கெளவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர். முதல் மூன்று போட்டிகளில் விக்கெற் வீழ்த்தாத இந்திய நட்சத்திர பந்து வீச்சாளரான புவனேச்வர் குமார் இந்த ஐபிஎல் சீசனில் தனது முதலாவது விக்கெற்றை வீழ்த்தினார்.

ஹைதராபாத் அணிவீரர்களான வானர், பேஸ்ரோவ் ஜோடி சிறந்த ஆரம்பத்தைக் கொடுட்தது. 6.5 ஓவர்களில் 64 ஓட்டங்கள் எடுத்தபோது அதிரடியாக விளையாடிய பேஸ்ரோவ்  28பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  வானர் 10 ,விஜய் சங்கர் 16 மனிஷ் பாண்டே 10, தீபக்கோடா 10  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் மொஹமட் நபி ஜோடி ஹைதராபாத்துக்கு வெற்றியைத் தேடிகொடுத்தது. 20 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை இழந்த ஹைதராபாத் 131  ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெற்களால் வெற்றி பெற்றது.

Thursday, April 4, 2019

சென்னையை வீழத்திய கடைசி இரண்டு ஓவர்கள்


மும்பை இந்தியன், சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  15 ஆவது ஐபிஎல் போட்டியில் 37 ஓட்டங்களில்  மும்பை வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிராக சென்னை வீரர்கள் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் அதிகளவான ஓட்டங்களை மும்பை வீரர்கள் அடித்ததால்சென்னை தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுட்தாடிய மும்பை ஐந்து விக்கெற்களை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.

டிகொக்4,ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.சென்னை வீரர்கலின் பந்து வீச்சில் விக்கெற்கள் வீழ்ந்தபோது சூரியகுமார் யாதவ் அடித்தாடினார். சூரையகுமார் யாதவுடம் க்ருனால் பாண்டையா இணைந்தா இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். சூரையகுமார் 59 ஓட்டங்களிலும் க்ருனால் 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 18 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டு ஓவர்கள் மட்டுமே இருப்பதால் 140 ஓட்டங்களுக்குள்  மும்பை அடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. பண்டையா, பொலட் ஜோடி கடைசி இரண்டு  ஓவர்களில் 45 ஓட்டங்கள் அடித்து சென்னைக்கு அதிர்ச்சியளித்தது.

எட்டு பந்துகளில் பண்டையா 25  ஓட்டங்களும், ஏழு பந்துகளில் பொலட் 17 ஓட்டங்களும் அடித்தனர். ஷர்துர் தர்கூரின் 19 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களியும் பிராவோவின் 20 ஆவது ஓவரில் 20 ஓட்டங்களையும் மும்பை வீரர்கள் அடித்தனர். க்ருனாலில் இலகுவான கச் ஒன்றை மோகித் சர்மா தவறவிட்டார். க்ருனாலை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ஷ்ர்துர் தாக்கூர் தவறவிட்டார். 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்த மும்பை 170 ஓட்டங்கள் எடுத்தது.


பலமான துடுப்பாட்ட வீரர்கலைக்கொண்ட சென்னை வெற்றி பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பை   மும்பை வீரர்கள் தகர்த்தனர். மும்பையின் பந்து வீச்சும் களத்தடுப்பும் சென்னையை அசையவிடவில்லை. வட்சன் தூக்கி அடித்த பந்தை இலகுவாக ஒற்றைக் கையினால் பிடித்த  பொலாட், சிக்ஸரை நோக்கி ரெய்னா அடித்த பந்தை அந்தர்த்தில் எழும்பி ஒற்றைக் கையினால் பிடித்து குத்துக்கரணம் அடித்து வெற்றியைக் கொண்டாடினார்.
ராயுடு ஓட்டம் எதுவும் எடுக்காஅலும் வட்சன் ஐந்து ஓட்டங்களுடனும் ரெய்னா  16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்த சென்னை 33 ஓட்டங்கள் எடுத்தது.  டோனி 12 ஓட்டங்களிடனும் ஜடேஜா ஒரு ஒட்டத்துடனும் வெளியேறினர்.  கேதார் ஜாதவ் அதிக அப்ட்சமாக   58 ஓட்டங்கள் எடுத்தார்.ஆட்ட நாயகன் விருதை பண்டையா பெற்றார்.

Wednesday, April 3, 2019

முதல் வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான் ரோயல்ஸ்


ராஜஸ்தான் ரோயல்ஸ்,ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ஏழு விக்கெற்களினால் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை விளையாடிய  மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தன. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் மோதின.

பெங்களூர் அணியில்  ஷிவம் துபே, ராய் பர்மான், கிரான்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஷ்தீப் நாத், நவ்தீப் சைனி, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பாகிஸ்தான் தொடரை முடித்துகொண்டு பெங்களூர் அணியுடன் இணைந்த பிறகு இந்த சீசனில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும்.

ராஜஸ்தான் அணியில் காயமடைந்த சஞ்சு சாம்சன்,  ஜெய்தேவ் உனட்கட் ஆகியோருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன்  ஆகியோர் இடம் பிடித்தனர். தொடர்ந்து 4-வது முறையாக நாணயச்சுழற்சியில்  ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி - பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி. 16 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தனர்.

 மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - மொயீன் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 27 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.   சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான 231 ஓட்டங்கலை விரட்ட பார்தீவ் பட்டேல் - ஹெட்மையர் ஜோடியை களம் இறக்கியது. இந்த ஜோ 13 ஓட்டங்கள்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேலும், விராட் கோலியும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.  ராஜஸ்தானின் ஓட்ட எண்ணிக்கை 49 ஆக இருக்கும்போது கோலி 23 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டமிழந்தார். கோலியின் பரீட்சார்த்த முயற்சி ஆரம்பத்திலேயே அடிவாங்கியது. ஐபிஎல்லிலும் சர்வதேசப் போட்டிகளிலும் லெக் ஸ்பின்னரிடம் விக்கெற்றை இழப்பது கோலிக்கு வாடிக்கையாகிறது.

டிவில்லியஸ் 13 ஓட்டங்களிலும் ஹெட்மெயர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். ஸ்டொனிஸ், மொயின் அலி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே  31, 18  ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்த பெங்களூர்  158 ஓட்டங்கள் எடுத்தது. கோலி,டிவில்லியஸ், ஹெட்மெயர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்ரேயாஸ் கோபால்  நான்கு ஓவர்களில் 12 ஓட்டங்களைக் கொடுத்தார்.

ரஹானே,ஜோஸ் பட்லர் ஜோடி 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது. 22 ஓட்டங்கலில் ரஹானே ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களிலும்  ஸ்மித் 38 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். திரிபாதி ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்ளும், மென் ஸ்ரொக் ஆட்டமிழக்காமல் ஒரு ஓட்டமும் எடுத்தனர். 19.5 ஓவர்களில் 164 ஓட்டங்கள் எடுத்து ந்ந்ழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.

Tuesday, April 2, 2019

சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வென்றது டெல்லி


டெல்லி கேப்பிடல்,கொல்கத்தா நைற் ரைடேர்ஸ் ஆகியவற்றுக்கிடையேடெல்லியில் நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர் கார்த்திக் பந்து வீச முடிவு செய்தார். காயம் காரணமாக நரேன் கொல்கத்தா அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. அவருக்குப் பதிலாக நாயக் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் ரபாடாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் டெல்லி நான்கு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கொல்கத்தா வீரர்களான நாயக் 7,   உத்தப்பா20, லின்11 , நிதிஷ் ரானா1  , கில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க 9.1 ஓவரில் ஆறு விக்கெற்களை இழந்து 61 ஓட்டங்கலை டெல்லி எடுத்தது. ஆறாவது விக்கெற்றில் இணைந்த கார்த்திக், ரஸல் ஜோடி 95 ஓட்டங்கள் அடித்து அணியை மீட்டது.  28 பந்துகலில் 62 ஓட்டங்கள் எடுத்த ரஸல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 36 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்த கார்த்திக் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது கொல்கத்தா.

186 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி அணி வீரர்களான தவான், 16 ஓட்டங்களிலும் ரிஷாப் பண்ட் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெற்றில்   பிரித்விஷாவுடன் இணைந்த அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர்  ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் இருவரும் இணைந்து 99 ஓட்டங்கள் அடித்தனர்.  வெற்றியை நோக்கி டேல்லியை அழைத்துச்சென்ற பிரித்விஷா ஃபேர்குசனின் பந்தை கார்த்திக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.18.3 ஓவர்களில்  55 பந்துகளில் 99 ஓட்டங்கள் எடுத்த பிருத்விஷா ஆட்டமிழக்கும்போது டெல்லி அணி 174 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் கொல்கத்தா வெற்ரி பெற்று  விடும். 20 ஆவது ஓவரை குல்தீப் வீசினார்.  முதல் பந்தில் வஹாரி ஒரு ஓட்டமும், இரண்டாவது பந்தில் இங்ராம் இரண்டு ஈட்டங்களும் எடுத்தனர். மூன்றாவது பந்தில் ஓட்டம் இல்லை. நான்காவது பந்தில் இங்ராம் ஒரு ஓட்டம் எடுத்தார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்த வஹாரி, சாவ்லாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.  கடைசிப் பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வேண்டும். இங்ராம் அடித்துவிட்டு ஒரு இலகுவாக எடுத்துவிட்டு இரண்டாவது ஓட்டத்துக்கு ஓடும் போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

சூப்பர் ஓவரில்  டெல்லி அணி சார்பில் ஸ்ரேயாஸ் அய்யரும் ரிஷப் பண்டும் களம் இறங்கினர்.பிரசித் கிருஷ்ஆ வந்து வீசினார். முதல் பந்தில் ரிஷப் பண்ட்  ஒரு ஓட்டமும் இரண்டாவது பந்தில் ச்ய்யர் பவுண்டரியும் அடித்தனர்.மூன்றாவது பந்தை தூக்கி அடித்த அய்யர், சாவ்லாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.   சூப்பர் ஓவரில் டெல்லி 10 ஓட்டங்கள் சேர்த்தது.
கொல்கத்தாவின் சார்பில் ரஸல், கார்த்திக்  ஆகியோர் களம் இறங்கினர். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரஸல் இரண்டாவது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் விக்கெற்றை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா  ஒரு ஓட்டம் எடுத்தார்.  கடைசி இரண்டு பந்துகளிலும் கார்த்திக்கால் ஓட்டம் எதுவும் எடுக்க முடியவில்லை. சூப்பர் ஹீரோ  ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பஞ்சாப்பிடம் வீழ்ந்த மும்பை


கிங்ஸ் லெவன் பஞ்சாப்,மும்பை இந்தியன் ஆகியவற்றுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் எட்டு விக்கெற்களினால் பஞ்சாப் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்ற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை ஏழு விக்கெற்களை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது. 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெற்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது.

ரோஹித், டிகொக் ஜோடி போட்டியை ஆரம்பித்தது. 32 ஓட்டங்களில் ரோஹித் வெளியேற களம் புகுந்த சூரியகுமார் யாதவ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டிகொக் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 39 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிகொக் ஆறு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார். யுவராஜ் 18 ஓட்டங்களிலு, பொலட் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 19 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட ஹர்த்திக் பண்டையா  31 ஓட்டங்கள் எடுத்தார்.20 ஓவர்களில்  ஏழு விக்கெற்களை இழந்த பஞ்சாப் 176 ஓட்டங்கள் எடுத்தது.

ராகுல், கைல்ஸ் ஆகியோர் பஞ்சாப்பின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் புகுந்தனர். கைல்ஸின் அதிரடியில் பஞ்சாப்பின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 7.2 ஓவர்களில் பஞ்சாப் 53 ஓட்டங்கள் எடுத்தபோது 24 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த கைல் ஆட்டமிழந்தார். கல்ஸ் வெளியேற உள்ளே வந்த மயங் அகர்வால்தன் பங்குக்கு பஞ்சாப்பின் பந்து வீச்சாளர்களை சோதித்தார். 21 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்த பயங் அகர்வாலை குருனால் பண்டையா வெளியேற்றியதால் மும்பை ஆறுதலடைந்தது.

18.4 ஓவர்களில் 177 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப் வெற்றி பெற்றது. 57 பந்துகளில் ராகுல் 70 ஓட்டங்களும் 10 பந்துகளில் டேவிட் மில்லர் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தனர்.