Thursday, November 25, 2021

இங்கிலாந்து பயிற்சியாளராக 2024 வரை கரேத் சவுத்கேட் பணியாற்றுவார்


 இங்கிலாந்து உதைபந்தாட்ட பயிற்சியாளரான கரேத் சவுத்கேட் 2024 ஆம் ஆன்டு டிசம்பர் வரை பணியாற்றுவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

சவுத்கேட்டின் முந்தைய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு டிசம்பரில் கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணஇறுதிப் போட்டியின் முடிவில் காலாவதியாக இருந்தது, சவுத்கேட்டும்,  அவரது உதவியாளர் ஸ்டீவ் ஹாலண்ட்டும் டிசம்பர் 2024 வரை இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக தொடர்வார்கள்.

இந்த ஒப்பந்தம் சவுத்கேட் பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இங்கிலாந்து பயிற்சியாலர் ஒப்பந்தம் முடிவுற்ற பின்னர் கிளப் அணிகளில் ஒன்றுக்கு கரேத் சவுத்கேட் பயிற்சியாளராகப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

"இந்த அணியை வழிநடத்துவது நம்பமுடியாத பாக்கியமாக உள்ளது. மார்க் (புல்லிங்ஹாம், தலைமை நிர்வாகி), ஜான் (மெக்டெர்மாட், தொழில்நுட்ப இயக்குனர்) மற்றும் அவர்களின் ஆதரவுக்காக வாரியத்திற்கும் - நிச்சயமாக வீரர்கள் மற்றும் ஆதரவு அணிக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். அவர்களின் கடின உழைப்புக்கு

"எங்களுக்கு முன்னால் ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது, மேலும் இந்த அணி எதிர்காலத்தில் என்ன சாதிக்க முடியும் என்பதில் அவர்களும் ரசிகர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்" என சவுத்கேட் தெரிவித்துள்ளார்.

சவுத்கேட் 2016 இல் இங்கிலாந்து பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து பல  போட்டிகளில் தோல்வியடைந்தது.

 இங்கிலாந்தில் நடந்த  யூரோ 2020 இறுதிப் போட்டியில் சவுத்கேட்டின் வழிகாட்டலில் இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து பெனால்ரியில் தோல்வியடைந்தது.

உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் எட்டு வெற்றிகள் , இரண்டு டிராக்களைக் கொண்ட ஒரு தோற்கடிக்கப்படாத அணியாக  இங்கிலாந்து கட்டாருக்குச் செல்கிறது. இது சவுத்கேட்டின் பயிற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

No comments: