Tuesday, November 2, 2021

சதம் அடித்தார் பட்லர்: வென்றது இங்கிலாந்து


 பரபரப்பான க‌டைசிப் பந்தில் சிக்ஸர் மூலம் சதம் அடித்தார் பட்லர். சதம் பட்லரின் அட்டகாசமான சதம், மோர்கனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில்   நடந்த ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கப்டன் இங்கிலாந்தை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். முதலில் துடுப்பெடுத்தாடும் அணி   தோல்வியடைந்த போட்டிகள் அதிகமான‌தால்  இல‌ங்கை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தன‌ர். இங்கிலாந்து ரசிகர்கள் சோகமாகினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து  அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது. 164 ஓட்டங்க‌ள் அடித்தால்  வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து  26 ஓட்டங்ளில்  தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.


இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் இருப்பதால், போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறிவிட்டது. இன்னும் ஒரு ஆட்டம் இருந்தாலும் அதில் வென்றாலும் இலங்கை அணியால் அரையிறுதிக்குள் செல்வது கடினம்.

இங்கிலாந்து அணி 3 விக்கெற்களை இழந்து  35 ஓட்டங்கள் எடுத்துத் தடுமாறியது. இலங்கையின் கை ஓங்கியது.   4-வது விக்கெட்டுக்கு  இணைந்த பட்லர், ப்டன் மோர்கன் ஜோடி நிலைத்துநின்று இலங்கை வீரர்களின் பந்து வீச்சை துணிச்சலுடன் எதிர்கொண்டது.

  ஜோஸ் பட்லர்  முதல் பாதியில் மிகவும் நிதானமாக விளையாடினார்.15 ஓவர்களுக்குப்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்த பட்லர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.அரைசதம் அடிக்க 45 பந்துகளை எடுத்துக்கொண்ட பட்லர் அடுத்த 22 பந்துகளில் 50 ஓட்டங்களை அடித்து சதத்தை எட்டினார்.

அதிரடியாக ஆடிய பட்லர் 67 பந்துகளில் 101 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட்லரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் பட்லர் அடித்த முதல் சதம் மற்றும், ரி20 போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் சார்பில் சதம் அடித்த 4-வது வீரர் எனும் பெருமையை பட்லர் பெற்றார்.

இந்தப் போட்டியில் பட்லர் அடித்த 6 சிக்ஸர்களுமே ஸ்குயர் லெக் திசையில்அடிக்கப்பட்டவை. ஒவ்வொரு சிக்ஸரும், இலங்கை வீரர்கள் பிடிக்க முடியாத அளவுக்கு உயரத்தில் அடிக்கப்பட்டன. ஷார்ஜா மைதானம் சிறியது என்பது அதிலும் லெக் திசையில் சிக்ஸர் அடிக்கும் தொலைவு குறைவு என்பதைப் புரிந்த பட்லர் கடைசி 5 ஓவர்களை வெளுத்துக்கட்டினார்.

20 ஆஅவ்து  ஓவரின் கடைசிப் பந்தை பட்லர் எதிர் நோக்கியபோது 95 ஓட்டங்கள் எடுத்திருந்தார். சிக்ஸர் அடித்தால் மட்டுமே சதம் அடிக்கலாம் என்ர நிலையில் லாவகமாக சிக்ஸர் அடித்து சதம் கண்டார். டெஸ்ட்,ஒருநாள் , ரி20 ஆகிய  மூன்றிலும் சதம் அடித்த இங்கிலாந்து வீரரானார் பட்லர்.

மூன்று வித கிறிக்கெற்றிலும் சதம் அடித்த மூன்றாவது கிக்கெற் கீப்பரானார் பட்லர்.  முன்னதாக நியூஸிலாந்து விக்கெற் கீப்பர்  பிரண்டன் மக்கலம், பாகிஸ்தான் விக்கெர் கீப்பர் முகமது றிஸ்வான் ஆகியோர் மூன்று வித கிறிக்கெற் போட்டிகளிலும் சதம் அடித்துள்ளனர்.


உலகக்கிண்ண ரி20 யில்சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் பட்லர் . இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹோல்ஸ் 2014 ஆம் ஆண்டு இலங்கைகு எதிராக சதம் [116 ஆட்டம் இழக்கவில்லை] அடித்தார்.

 ஐபிஎல் தொடரில் மிகமோசமாக விளையாடிய  மோர்கன், ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் கைகொடுப்பாரா என்றகேள்வி எழுந்தது.  ஆனால், மோர்கன் . நிதானமாக ஆடிய   40 ஓட்டங்களை் சேர்த்து அணியின்  ஓட்ட எண்ணிக்கை உயர்வுக்கு முக்கியப் பங்காற்றினார்.

மோர்கன் 36 பந்துகளில் 40 ஓட்டங்கள் சேர்த்து(3சிக்ஸர்,ஒருபவுண்டரி) ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 58 ஓட்டங்கள் சேர்த்தது.

ரி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ப்டன் என்ற பெருமையை மோர்கன் பெற்றார். இதுவரை 43 வெற்றிகளுடன், ஆப்கனின் முன்னாள் ப்டன் அஸ்கர் ஆப்கன்(42) டோனி(41)  ஆகியோரின் சாதனையை மோர்கன் முறியடித்துவிட்டார்.

பவர்ப்ளேயில் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்கள் அதன்பின் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டனர்.

தொடக்க வீரர் நிசாங்கா(1),பெரேரா(7),பெர்னான்டோ(13) மூவரும் நிலைக்கவில்லை. இதில் பெரேரா, பெர்னான்டோ இருவருமே சூப்பர்-12 சுற்றில் இதுவரை நல்ல ஸ்கோரை அடிக்கவில்லை.  நடுவரிசையில் ராஜபக்ச(26), ஹசரங்கா(34), சனகா(26) ஆகிய மூவர்  மட்டுமே ஓரளவுக்கு ஓட்டங்களைச்  சேர்த்தனர்.  ராஜபக்ச, ஹசரங்கா இருவரும்சேர்ந்து 53 ஓட்டங்கள் அடித்தனர்.

கடைசி வரிசை வீரர்கள் கருணாரத்னே(0), சமீரா(4),தீக்சனா(2) ஆகியோர் ஒற்றை இலக்கரன்னில் ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்துதரப்பில் மொயின் அலி, ஜோர்டன், ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

No comments: