Wednesday, November 10, 2021

3 மணி நேரத்துக்கு நட்பெல்லாம் கிடையாது: நாங்கள் எதிரிகள் - ஜஸ்டின் லாங்கர்


   உலகக் கிண்ண ரி20 போட்டியில்  பாகிஸ்தான், அவுஸ்திரேலியா  ஆகியன  அரையிறுதியில் நாளை  வியாழனன்று மோதுகின்றன. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் த்யூ ஹெய்டன், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். இருவரும் சிறந்த நண்பர்கள்.   முன்னாள் அவுஸ்திரேலிய  அனியின் தொடக்க வீரர்கள். இப்போது எதிரெதிர் முகாம்களில் உள்ளனர்.

எனவே வியாழக்கிழமையன்று தனக்கும் மத்யூ ஹெய்டனுக்குமான நட்பு என்பது 3 மணி நேரத்திற்கு அதாவது அரையிறுதி போட்டி நடைபெறும் வரை ஆஃபில் இருக்கும் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தோல்வியடையாத அணியாக அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் ஒரு கால ஆதிக்க அணியில் மத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர் இணை வேகப்பந்து வீச்சாளர்களைப் பின்னி எடுத்தது.  ஒரு காலத்தில் மேற்கு இந்திய வீரர்களான  ராய் பிரெட்ரிக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், விவ் ரிச்சர்ட்ஸ்  ஆகிய முதல் மூன்று வீரர்கள் இறங்கி உலகபந்து வீச்சாளர்களை நடுங்கச் செய்தனரோ அதே போல்  அவுஸ்திரேலிய அனியின் லாங்கர், ஹெய்டன், பொண்டிங் ஆகியோர்  பெரிய அச்சுறுத்தலாக  திகழ்ந்தனர்.

  முன்னாள்  ஜாம்பவான்களான ஹெய்டன், லாங்கர்  ஆகியோர் எதிரெதிர் முகாம்களில் பயிற்சித் திறனில் இருப்பது பாகிஸ்தான், அவுஸ்திரேலியபோட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

இது தொடர்பாக ஜஸ்டின் லாங்கர் கூறும்போது,

 நானும் ஹெய்டனும் சிறந்த நண்பர்கள், இப்போது எதிரெதிர் முகாம்களில் போட்டியை அந்தந்த அணிக்காக பார்த்துக் கொண்டிருக்கி்றோம். ஹெய்டன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

நாங்கள் இருவரும் மாறி மாறி இந்த   தொடரில் மேசேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். பெரிய ஆலோசனைகளெல்லாம் இல்லை, இருவருமே பணியில் தீவிரமாக இருக்கிறோம். நான் ஹெய்டனை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், நான் நீண்ட காலம் அவரை சந்திக்கவே இல்லை. கிரிக்கெட்டில் நிறைய எனக்கும் அவருக்கும் உறவின் பாலமாக இருக்கிறது.


வியாழக்கிழமை பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியில் அந்த 3 மணி நேரம் எங்கள் நட்புறவை கொஞ்சம் ஆஃப் செய்து விடுவேன். கிரிக்கெட் தான் முக்கியம்என்றார் ஜஸ்டின் லாங்கர்.

No comments: