Monday, November 22, 2021

``தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளை டோனி" - ஸ்டாலின்

ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் , இந்திய அணியின் முன்னாள் க‌ப்டன் கபில் தேவ், ஜெய்ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் க‌ப்டன் டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

விழாவில் பேசிய டோனினி, " சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. மற்ற அணியின் வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் அவர்களது சிறப்பியல்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக செயல்படாதபோதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். சென்னையில்தான் எனது கடைசி ரி20 ஆட்டத்தை விளையாடுவேன்" என்றார் 

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " டோனியின் ரசிகனாக இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். என் தந்தை கலைஞரும் டோனியின் ரசிகர்தான். சென்னை என்றாலே சூப்பர்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நான் இந்த விழாவில் இருந்தாலும் கடந்த 10 நாள்களாக பெய்துவரும் மழை பற்றிதான் சிந்தனை இருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் சற்று இளைப்பாறத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். தமிழகத்தின் செல்லப்பிள்ளை டோனி.


தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால் டோனி மஞ்சள் தமிழர். சாதாரண பின்புலத்திலிருந்து வந்து உச்சம் தொட்ட தோனி அனைத்து தமிழர்கள் மனதிலும் இருக்கிறார். டியர் டோனி இன்னும் பல சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீங்கள் தலைமையேற்று வழிநடத்த வேண்டும். " என பாராட்டினார்.


 

No comments: