Monday, November 8, 2021

ராகுல் ட்ராவிட்டின் முன்னுள்ள சவால்கள்


 இந்திய அணி தற்போது உலகக் கிண்ண ரி20 போட்டியில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகாமல் வெளியேறியுள்ளது. வலுவான அணீகளான பாகிஸ்தான்,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் மிக மோசமாகத் தோல்வியுற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பரீட்சாத்தமாக வீரர்களை  மாற்றி விளையாடியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

 உலகக் கிண்ண‌ போட்டிகள் முடிந்தவுடன்   இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது.ரவிசாஸ்திரி,கோலி கூட்டணியால் ஐசிசியின்   போட்டிகலில் சம்பியனாக முடியவில்லை. டெஸ்ட் சம்பியன்ஷிபில் நியூஸிலாந்திடம் வீழ்ந்தது.

 உலககிண்ண ரி20  போட்டிகள் முடிந்தவுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ராவிட் பொறுப்பேற்க உள்ளார்.  பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் ட்ராவிட்டின் முன் பல சவால்கள் காத்திருக்கின்றன.  ரவிசாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய போட்டிகளில் இந்திய அணி வென்று இருந்தாலும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை.  இது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ,க‌ப்டன் கோலிக்கு மிகப் பெரும் பின்னடைவாக உள்ளது.

  க‌ப்டன் விராட் கோலியும் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளார். இந்திய அணிக்கு புதிய தலைவர் தேர்வு செல்லப்படலாம். கோலியின்  செயற்பாட்டால் முன்னைய பயிற்சியாள‌ர் அனில் கும்ளே  பதவி விலகினார். ரீகித் சர்மா,கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் ட்ராவிட்டின் பார்வையில் உள்ளனர்.

  பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தலைமையில் இந்திய அணி ஐசிசி கிண்ணப் போட்டிகளில்  விளையாட உள்ளது. 2022 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணப் போட்டி, 2021 - 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கிண்ணப்பை போட்டி என மூன்று முக்கிய போட்டியை இந்திய அணி சந்திக்க உள்ளது.

19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் ட்ராவிட்டின் வழிகாட்டலால் இந்திய அணி சம்பியனாகியது.இளம் வீரர்கள் பல‌ருக்கு பயிற்சியளித்து கிரிக்கெற் உலகில் தடம் பதிக்க வைத்தவ‌ர் ட்ராவிட்.

 2011ஆம் ஆண்டு 50வது உலககிண்ணம், 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணம்  ஆகியவற்ரில் சம்பியனான‌ இந்திய அணி.  அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி தவிர தற்போது வரை எந்த ஒரு போட்டியிலும் சம்பியனாகவில்லை.கோப்பையும் இந்திய அணி வெல்லவில்லை.  ட்ராவிட்டின் பயிற்சியில் ஏதாவது ஒரு ஐசிசி போட்டியில் இந்தியா சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்  உள்ளது.

 

No comments: