Friday, November 19, 2021

இத்தாலியை காக்க வைத்த சுவிட்ஸர்லாந்து


 

  பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவிட்ஸர்லாந்து ஐரோப்பிய உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குரூப் சி  குழுவில்  முதலிடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்திற்கு எதிராக  கோல் எதுவும் இன்றி  சமன் செய்த  இத்தாலி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி  பிளே ஓஃப்களுக்குச் செல்கிறது.

போட்டிகளுக்கு முன்னர், சுவிஸும்,இத்தாலியும்  தலா 15 புள்ளிகளுடன் C குழுவில் முன்னிலை வகிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தன, மேலும் இத்தாலி குழுவில் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்தை விட இரண்டு கோல்களால்  முன்னிலையிலும் இருந்தன‌.இத்தாலியை பின்னுக்குத்தள்ளிய சுவிஸ் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட  நேரடியாக தகுதி பெற்றுள்ளது,

சுவிஸ் தொடர்ச்சியாக‌ கடந்த நான்கு உலகக்  கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. இப்போது ஐந்தாவது போட்டியில் விளையாடத்தயாராகிவிட்டது.  2006, 2014, 2018  ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் கடைசி 16 ஐ எட்டினர், ஆனால் 2010 இல் குழு நிலையிலேயே வெளியேற்றப்பட்டது சுவிஸ்.

1934, 1938, 1982 ,2006 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை உலகக் கிண்ண‌ சாம்பியனான இத்தாலி, ரஷ்யாவில் நடந்த  2018 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியதால் உதைபந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மீண்டெழுந்த இத்தாலி யூரோ சம்பியனாகி தன்னை நிரூபித்தது. ஆனால், உலகக்கிண்ணத் தகுதிப் போட்டி இத்தாலிக்குச் சவாலாக உள்ளது. சுவிட்ஸர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இத்தாலி பெனால்டியை கோலாக்கத் தவறியது.

 கடந்த‌ திங்கட்கிழமை  நடைபெற்ற  ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளின் முடிவுகள்.

ஸ்காட்லாந்து-டென்மார்க்: 2-0

சுவிட்சர்லாந்து-பல்கேரியா: 4-0

சான் மரினோ-இங்கிலாந்து: 0-10

வடக்கு அயர்லாந்து-இத்தாலி: 0-0

இஸ்ரேல்-ஃபாரோ தீவுகள்: 3-2

ஆஸ்திரியா-மால்டோவா: 4-1

அல்பேனியா-அன்டோரா: 1-0

போலந்து-ஹங்கேரி: 1-2

No comments: