Thursday, November 4, 2021

நடைமுறையை மீறியதால் தடைசெய்ய‌ப்பட்ட மத்தியஸ்தர்


 

 உலகக்கிண்ண ரி20 போட்டியில் சர்வதேச  கிறிக்கெற் சபை வகுத்த நடைமுறையை மீறியதால் மத்தியஸ்தரான மைக்கல் ஹோக், தொடர்ந்தும் பங்குபற்றுவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

 41 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர்  மைக்கல் ஹொக் இந்த தொடரில் நடுவராக பணியாற்றி வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான அமத்தியஸ்த‌ர்களில் ஒருவராகத் திகழும் அவர் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த தொடரில்   பணிபுரிந்து வந்தார்.

  ஆனால், இதனையும் மீறி பயோ பபுளை விட்டு அவர் வெளியே சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் வெளி இடத்திற்கு சென்று மீண்டும் பணிக்குத் திரும்பியதன் காரணமாக அவர் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக தற்போது தடை செய்யப்பட்டு உள்ளார்.

 உலகக் கிண்ண‌ தொடரின் மீதியுள்ள போட்டிகளில் அவர் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதோடு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில்  இருக்குமாறும் அவருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. மேலும் எஞ்சியுள்ள இந்த தொடரில் உள்ள ஆட்டங்களில் அவர்  பணியாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments: