Sunday, November 7, 2021

நெதர்லாந்திடம் இருமுறை தோற்ற இங்கிலாந்து

2007 ஆம் ஆன்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஸிம்பாபவேயிடம் அவுஸ்திரேலியா தோற்றது என்றால் நம்ப முடிகிறதா? அதே போல் ரி20 உலகக் கிண்ண‌ தொடர்களின்  5 அதிர்ச்சித் தோல்விகளின் விவரங்கள் வருமாறு.

1983 உலகக் கிண்ணப் போட்டியில்  எப்படி ஸிம்பாப்வே அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது அதிர்ச்சியோ அதே போல்தான் 2007‍ல் ஸிம்பாப்வே ரி20 உலகக் கிண்ண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதும். ஸிம்பாப்வேயின் சிறந்த துடுப்பட வீரர் பிரெண்டன் டெய்லர் 45 பந்துகளில் 60  ஓட்டங்கள் விளாசினார். முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் வலுவான டாப் ஆர்டர், மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், மைக் ஹஸ்சி ஆகியோர் 50 ஓட்டங்க‌ளுக்குள்   திரும்பினர். பிராட் ஹாட்ஜ் 22 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்ததனால் அவுஸ்திரேலியா 138/9 எடுத்தது. இந்த இலக்கை விரட்டும் போது ஸிம்பாப்வே போராடி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்க இலக்கைக் கடந்து அதிர்ச்சி வெற்றி பெற்றது.

           நெதர்லாந்திடம் மண்ணைக்கவ்விய இங்கிலாந்து:

மார்ச் 31, 2014 அன்று இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளை 24 ஓட்டங்க‌ளுக்கு வீழ்த்தினாலும் ஸிம்பாப்வே 134 ஓட்டங்கள்  என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. சட்டோகிராமில் நடந்த இந்தப் போட்டியில் இலக்கை விரட்டிய இங்கிலாந்து 88 ஓட்டங்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி கண்டது. நெதர்லாந்தின் முடாசர் புகாரி, லோகன் வான் பீக் இருவரும் இங்கிலாந்தை தோற்கடித்தனர்.

இங்கிலாந்தின் ரவி பொபாரா மட்டுமே அதிகபட்சமாக 18 ஓட்டங்களை எடுத்தார். 8 இங்கிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் காலியாகினர்.

              பங்களாதேஷை வீழ்த்திய ஹொங்காங்

மார்ச் 20, 2014 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் சட்டோகிராம் பிட்ச் பங்களாதேஷை  போட்டுப்பார்க்க அந்த அணி 108 ஓட்டங்களுக்கு மடிந்தது. ஹாங்காங் ஸ்பின்னர்கள் நதீம் அகமட், நிசாகட் கான்  ஆகியோர் பங்களா தேஷைச்  சுருட்டினர். அகமட் 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, நிசாகட் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 7 வீரர்கள் 3 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தன‌ர்.

இலக்கை விரட்டிய போது ஹொங்காங் தடுமாறியது, ஆனால்    2 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது. ஹொங்காங் கொண்டாட்டத்தில் மூழ்கியது.

               நெதர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து

2009-ல் இங்கிலாந்தின் கோட்டையான லார்ட்ஸிலேயே நெதர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த முறை இங்கிலாந்து 162 ஓட்டங்களை எடுத்தது, ஆனால் நெதர்லாந்து வீரர் டாம் டி குரூத் 30 பந்துகளில் 49 ஓட்டங்களை விளாசினார். இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் ரவி பொபாரா, லூக் ரைட் 101 ஓட்டங்க‌ளை தொடக்கத்தில் சேர்த்தனர்.

இலக்கை விரட்டிய போது டி குரூத் 30 பந்தில் 49 எடுத்த பிறகு ஆட்டம் கடைசி ஓவருக்குச் சென்ற போது 6 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை. கிரீசில் எட்கர் ஷிபர்லி இருந்தார். மறுமுனையில் ரியான் டென் டஸ்சொதே இருந்தார். இருவரும் இரண்டு சிங்கிள்களை எடுக்க கடைசியில் பிராட் ஒரு ஓவர் த்ரோ போட நெதர்லாந்து வென்றது.

           மேற்கு இந்தியாவை  வீழ்த்திய ஆப்கானிஸ்தான்


 

2016 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கு இந்தியா  சம்பியனாகியது.  இப்போது வரை அவர்கள்தான் உலக சாம்பியன். ஆனால் 2016‍ல் மேற்கு இந்தியாவின்  ஒரே தோல்வி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வந்ததே. மார்ச் 27ம் தேதி நாக்பூரில் பந்துகள் திரும்பும் பிட்சில்  மேற்கு இந்தியா  தோற்றது.

ஆப்கானிஸ்தான் அடித்ததோ வெறும் 124 ஓட்டங்கள்தான், ஆனால் ஸ்பின்னர்கள் மூலம்  மேற்கு இந்தியாவை  117 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி அதிர்ச்சி வெற்றி பெற்றது. ஆப்கானின் நஜிபுல்லா ஸத்ரான் 40 பந்துகளில் 48  ஓட்டங்கள் அடித்ததற்காக இந்தப் பிட்சில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

No comments: