Saturday, November 13, 2021

உத்தரப் பிரதேசத்தில் களம் இறங்கும் பிரியங்கா காந்தி


 இந்திய அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாது  இரண்டறக் கலந்த காங்கிரஸ் கட்சி   தேர்தல்களில்  வெற்றி பெற முடியாது  தவிக்கிறதுகங்கிரஸ் கட்சியில் இருந்த பல வாய்ந்த தலைவர்கள் வெளியேறி புதிய கட்சிகளை ஆரம்பித்ததால் காங்கிரஸ் கட்சி பலவீனமானதுராஜீவ் காந்திக்குப் பின்னர் நேரு குடும்பத்தில் இருந்து சக்தி வாய்ந்த தலைவர் எவரும் உருவாகாததும் காங்கிரஸின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களில்  ஒன்று.

சோனியா காந்தி காங்கிரஸுக்கு  தலைமை ஏற்ற போது காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடம் ஏறியது. ராகுல் கந்தியின் தலைமையில் காங்கிரஸால் எழுச்சி பெற முடியவில்லை.  மோடிக்கு இணையாக அரசியல் செய்வதற்கு ராகுலால் முடியவில்லை. இந்த நிலையில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களம் இறக்கி உள்ளது.

அரசியலுக்கு வந்த கையுடன் பிரியங்காவை உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கச் செய்து, அம்மாநிலத்தில் கட்சியை நிர்வகிக்கத் தயார்ப்படுத்தினார் சோனியா காந்தி. முழுநேர அரசியலில் இறங்கிய பிரியங்கா, விமர்சன அரசியலைத்தாண்டி களத்தில் இறங்கி மக்கள் ஆதரவைச் சம்பாதிக்கத் தொடங்கினார். பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தால்  பாரதீய ஜனதா தடுமாறுகிறது. பிரியங்கா காந்தியின் செல்வாக்கு காங்கிரஸை ஆட்சி பீடத்தில்  ஏற்றிவிடுமோ என்ற அச்சம் பாரதீய ஜனதாத் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற் றில் ஆறு மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆளும் கட்சியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும் சட்ட மன்றத் தேர்தல்களைக்  குறிவைத்து காங்கிஸ் திட்டம் வகுக்கத் தொடங்கி உள்ளது. அதனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி சுற்றுப் பயணம் செய்யத் தொடங்கி உள்ளார்.

   பெப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை பலகட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாபையும் சேர்த்து அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற முனைப்புக் காட்டி வருகிறது பாரதீய ஜனதாக் கட்சி. மறுபக்கம், பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் அக்னிப் பரீட்சை என்பதால் அக்கட்சியினர் பாஜகவை வீழ்த்த அதிரடியான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகின்றனர்.

ஏழு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது என்றாலும், அனைவரின் பார்வையும் உத்தரப்பிரதேசம் என்ற ஒற்றை மாநிலத்தின் மீதுதான் குவிந்திருக்கிறது. அதற்கு, காரணம், அங்கு பாஜக எனும் மாபெரும் கட்சியை எதிர்த்துக் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திதான். பாஜகவுக்கு எதிர்வினையாற்றுவதில் அண்ணன் ராகுலை விடவும் அதிக தீவிரம் காட்டி வரும் பிரியங்கா காந்தி, பாஜக-வின் யோகி ஆதித்யநாத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பிரியங்கா காந்திக்கு இடைஞ்சல் கொடுக்கும் வேலையை பாடதீயஜனத  கனகச்சிதமாகதொடங்கி விட்டது. லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

76 வயதாகும் ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரி  குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரியங்கா சென்றிருக்கிறார். ஆனால், அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காரிலிருந்து இறங்கி அவர் நடக்க ஆரம்பித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.

இந்த காணொளிக்கு மேலே அவர், "உத்திர பிரதேச மாநில காவல் துறையினர் என்ன செய்கிறார்கள்? இப்போது நாங்கள் எங்கேயும் சென்று வருவதுகூட தடை செய்யப்படுகிறது. நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சமூக சேவகர் தாராபுரியின் வீட்டுக்குச் சென்றேன். உத்திர பிரதேச மாநில காவல்துறையினர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியதற்காக அவரை கைது செய்தனர். இப்போது ஒரு பெண் காவல்துறை அதிகாரி என் கழுத்தைப் பிடிக்கிறார். ஆனால் என்னுடைய லட்சியம் திடமானது. காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான அனைத்து குடிமக்களுடனும் நான் நிற்கிறேன். " எனப் பதிவிட்டுள்ளார்.


பிரியங்கா காந்தியை பொலிஸார் கைது செய்தபோது தடுப்புகாவலில் இருந்த அறையை அவர் சுத்தம் செய்த கானொலி வைரலானது. பிரியங்கா காந்தியின் இமேஜை பாரதீய ஜனதாக் கட்சியில் செயற்பாடு உயர்த்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த பெண் காவலர் மேலதிகாரிகளுக்கு கொடுத்துள்ள விளக்கக் கடிதத்தில், பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

"காங்கிரஸார் அனுமதி வாங்கிய பாதையில் செல்லாமல், வேறு பாதையில் சென்றனர். அதனால் அவர்களை தடுக்க வேண்டியதாகிவிட்டது." என்று விளக்கம் அளித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டை தொடர்ந்து, லக்னோ பொலிஸார் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோ வருவதாக தகவல் கிடைத்து. அதிகாரி அர்சனா சிங் அங்கு பணியில் இருந்தார், அப்போது பிரியங்கா காந்தி, தான் அனுமதி வாங்கிய பாதையில் செல்லாமல், வேறு பாதையில் சென்றதாக எனக்கு கடிதம் அளித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு கருதி, அவரது கான்வாய் நிறுத்தப்பட்டு, எந்த வழியாக செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ஆனால், அவரது கட்சிக்காரர்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை. பிரியங்காவின் கழுத்தை நெருக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது" என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 இந்தியாவிலேயே அதிக  சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். அங்கு, ஒருகாலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது வெறும் ஏழு சட்ட மன்ற உறுப்பினர்கள்   மட்டுமே இருக்கின்றனர். உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவானது 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால் காங்கிரஸ் தன்னை உத்தரப் பிரதேசத்தில் வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

1985-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் .பி-யில் 269 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸால் 2017 தேர்தலில் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது டெல்லி மேலிடத்தை பெரும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியது. தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை அம்மாநிலத்தில் கட்சியை மீண்டும் வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை 2017-ளிலேயே தொடங்கிவிட்டது.  அன்று ராகுலாலால்  செய்ய முடியாததை  பிரியங்கா காந்தி செய்வார் என காங்கிரஸார் நம்புகின்றனர்.

2017 தோல்விக்குப் பிறகு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளுக்கு இணையாக பிராமணர்களின் வாக்குகளையும் பெற வேண்டும் என்ற முடிவினை கையிலெடுத்தது. அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்றால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று திட்டம் தீட்டினார் பிரியங்கா. அதற்கான வேலைகளை மாநில பொறுப்பிற்கு வந்த உடனே செய்யத் தொடங்கிவிட்டார்.

விமர்சன அரசியலில் அதீத முனைப்புகாட்டி வரும் பிரியங்கா, .பி-யில் யோகி தலைமையிலான பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விவசாயிகள் பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் தலித் பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக-விற்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். உன்னாவ் பாலியல் வழக்கு, லக்கிம்பூர் கலவரம் போன்ற அசம்பாவிதங்களின்போது மக்களுடன் பங்கெடுக்க பிரியங்கா காந்தி ஆர்வம் காட்டுகிறார். அந்த சமயத்தில், அவரைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் யோகி அரசு முனைப்புக் காட்டியது. அதை வைத்தே தனக்கான ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார் பிரியங்கா.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், ஓடிஸாவில் பிஜு ஜனதா தளம் கட்சியும் பெண்களுக்கு அதிகளவில் தேர்தலில் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கென கிட்டத்தட்ட 50% இடங்களை ஒதுக்கி, மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 17 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார். அதே போல், ஒடிசாவிலும் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் நவீன் பட்நாயக் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதியில் 7 தொகுதிகளில் பெண்களை நிறுத்தினார். இந்த இருகட்சிகளும் பெண்களை முன்னிறுத்தி எதிர்கொண்ட தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்தன. எனவே, பிரியங்காவின் இந்த 40% அறிவிப்பும் மேற்கு வங்க மாடலின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது என்கின்றனர்.

சில அரசியல் கட்சியினர் பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் மற்றும் சிலிண்டர் கொடுத்துவிட்டால் போதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பெண்ணின் போராட்டம் என்பது மிக நீண்டது, மிகவும் ஆழமானது" எனக் கூறிய  பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஒரு பெண்ணாக கூட  இருக்கலாம் என்று கூறினார்.

 ``தேர்தலில் நிச்சயம் ஒருநாள் போட்டியிடுவேன்" என்று  பிரியங்கா காந்தி கூறியதால் காங்கிரஸ் தொண்டர்கள்  உற்சாகமாக உள்ளனர்.

No comments: