Monday, November 22, 2021

வலதுகை துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் அஸ்வின்

ரி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பிய பிறகு அஸ்வின் வலது கை துடுப்பாட்ட வீரர்கலுக்கு  71 பந்துகள் வீசியிருக்கிறார், இதில் 51 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்துள்ளார்,   முக்கியமாக பவுண்டரியே கொடுக்கவில்லை என்பதுதான் முக்கிய அம்சம்.

 2017-க்குப் பிறகு அஸ்வினை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஒதுக்கினார். டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினை உட்கார வைத்தார். ஆனால் மீண்டும் ரி20 அணிக்குள் தேர்ந்தெடுத்த அஸ்வினைமீண்டும்   உலகக் கிண்ணத்  தொடரில் முக்கியமான, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் உட்கார வைத்து  கோலி தன் வன்மத்தைக் காட்டினார்  என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் ரோகித் சர்மா ரி20 உலகக் கிண்ண‌ 2வது வார்ம் அப் போட்டிக்கு தலைமை வகித்த  போது அஸ்வினை கொண்டு வந்து தொடக்கத்தில் வீச வைத்தார்,    வார்னர், மிட்செல் மார்ஷ்  ஆகியோரின் விக்கெட்டை  கைப்பற்றினார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 23  ஓட்டங்களையே விட்டுக்கொடுத்திருந்தார், இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களி வீசிய அஸ்வின்  19 ஓட்டங்களைக் கொடுத்து 1  விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 

 பந்து வீச்சு பற்றி பற்றி மார்டின் கப்டில் கூறிய போது, ‘அவரை அடித்து ஆடுவது கடினம், அத்தனை தினுசான பந்துகளை வீசுகிறார், லைன் லெந்தில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை, மேலும் அஸ்வின் பெரிய அளவில் மோசமாக வீசி நான் பார்த்ததில்லை என்றார்.

No comments: