ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணி நிர்ணயித்த 152 ஓட்டங்களை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி எவ்வளவு பலமான அணி என்பதை தொடரின் தொடக்கத்திலேயே காண்பிப்த்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து தற்போது 3 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தான் அணியானது கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது பாகிஸ்தான் அணி கப்டன் பாபர் அசாமின் தாயார் மருத்துவமனையில் இக்கட்டான நிலையில் வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக அவரது தந்தை ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். -
இதுகுறித்து அவர்
பேசுகையில்
: "பாபர் அசாம் இந்திய அணிக்கு
எதிராக
விளையாடியது
மகிழ்ச்சியாக
இருந்தது.
அவர்
என்னதான்
களத்தில்
மகிழ்ச்சியாக
செயல்பட்டு
இருந்தாலும்
அவரது
உள்ளம்
வலியில்
இருப்பது
யாருக்கும்
தெரியாது.
ஏனெனில்
பாபர்
அசாம்
இந்தியாவுக்கு
எதிராக
விளையாடிக்
கொண்டிருக்கும்
போது
அவருடைய
அம்மா
வென்டிலேட்டர்
சிகிச்சையில்
இருந்தார்.
கடந்த
சில
வருடங்களாகவே
அவர்
உடல்நிலை
சரியில்லாமல்
இருந்து
வருகிறார்.
இருப்பினும்
அதை
நினைத்து
பாபர்
பலவீனம்
அடைய
கூடாது
என்பதற்காகவே
நான்
மைதானத்திற்கு
வந்து
அவரது
ஆட்டத்தை
பார்த்தேன்.
கடந்த
சில
வருடங்களாகவே
தனது
தாயின்
நிலையை
நினைத்து
மன
உளைச்சலுக்கு
மத்தியில்தான்
விளையாடி
வருகிறார்"
என்று
அவரது
தந்தை
உருக்கம்
கருத்தினை
பகிர்ந்தார்.
தாயார் தீவிர சிகிச்சையில் இருந்தாலும் தனது நாட்டிற்காக திறம்பட செயல்பட்டு வரும் பாபர் அசாம்-க்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment