Friday, November 19, 2021

ட்ராவிட் ராகுல், ரோஹித் சர்மா கூட்டணிக்கு முதல் வெற்றி

  இந்திய  அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், ரி20 அணியின் புதிய கப்டன் ரோஹித் சர்மா கூட்டணி முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போது  ஐந்து விக்கெற்களால்  இந்தியா வெற்றி பெற்றது.

ரி20 உலகக் கிண்ணத்  தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் சௌத்தி தலைமையில் நியூசிலாந்து இந்தத் தொடரில் விளையாடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்தில், ரேர்ல் மிட்செல் களமிறங்கினர்முதல் ஓவரில் மிட்செல் ஓட்டம் எதுவும் எடுக்காமல் புவனேஷ்வரின் பந்துவீச்சில்   ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, மார்க் சாப்மேன் களமிறங்கினார். கப்தில், சாப்மன் இணை இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அதன் பிற்பாடு போட்டி நியூஸிலாந்தின் பக்கம் சென்றது.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவருரின் இணைப்பாட்டம் 100 ஓட்டங்களைக் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மன் 50 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ்  ஓட்டம்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க மறுபுறம் கப்தில் அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 164 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 165 என்ர இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இணை 50 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், சான்ட்னர் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்கலில்  ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யாகுமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித் சர்மா, சூர்யா குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 36 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சூர்யாகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 40 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் சூர்யாகுமார் யாதவ் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் இறுதி ஓவரில் 10 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்  களம் இறங்கிய  வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். டார்லி மிட்செல் வீசிய முதல் பந்து வைட்டானது.   இரண்டாவது பந்தில் வெங்கடேஷ் அய்யர் பவுண்டரி அடித்தார். வெங்கடேஷ் அய்ய்ர்  போட்டியை முடித்து வைப்பார் என எதிர் பார்த்த  போது அடுத்த பந்தை தேவையற்றவிதத்தில் அடித்து ஆட்டமிழந்தார்.

அக்சர் படேல் களத்துக்கு வந்தார். அடுத்த  பந்தும் வைட். வெற்றிக்கு நான்கு ஓட்டங்கள் தேவை அடுத்த பந்தில் அக்ஸர் படேல்  ஒரு ஓட்டம் எடுத்தார். பண்ட் பவுண்டரி அடித்து  வெற்றியை உறுதி செய்தார்.

No comments: