Tuesday, November 23, 2021

தமிழ் சினிமவை மிரட்டும் அரசியல்வாதிகள்


 தமிழக அரசியலும் சினிமாவும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்றை விட்டு இன்னொன்றைப் பிரிக்க முடியாது. நாடகம், கூத்து, கதாப்பிரசங்கம் ஆகியவற்றல் தமிழக அரசியலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படது. கால மாற்றத்தால் அரசியல் பிரசாரங்கள்  சினிமாக்குள் புகுத்தப்பட்டன. இன்றுவரை தமிழக அரசியல் பிரசாரத்துக்காக சினிமா முன்னிலைப்படுத்தப்படுகிறது.

திராவிடர் கழகம் சினிமாவில் அதிக அக்கறை காட்டியதால் அன்றைய காங்கிரஸ் அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

எம்.ஜி.ஆர், சிவாஜி,எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமல் ,ரஜனி,விஜய்,சூர்யா ஆகிய நடிகர்கள் அரசியல் வாதிகளால் பழிவாங்கப்பட்டனர். சமூகச் சீஎக்ர்ர்டுகளை வெளிப்படையாகப் பேசும் சூர்யா இப்போது குறி வைக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு கட்சியினரால்  கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்போது ஜெய்பீம் எனும் உணமைக் கதையால் பாட்டாளி மக்கள் கட்சியால் மிரட்டப்படுகிறார்.

தமிழ் சினிமா கதாநாயகர்கள் புகைக்கும், மது அருந்தும் காட்சிகளில் நடித்தால் பாட்டாளி மக்கள் கட்சி கிளர்ந்து எழுந்துவிடும். ஆங்கில, ஹிந்தி படங்களில் வரும் காட்சிகள அக் கட்சி கண்டுகொள்வதில்லை. "பாபா" படத்தில் ரஜினி புகை பிடித்ததால் தியேட்டர்களை அடித்து நொறுக்கி  படப்பெட்டிகளைக் கைப்பற்றினார்கள். இபோது சூர்யாவைக் குறி வைத்து மிரட்டுகிறார்கள்.

 காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு வெளிவந்த ஜெய்பீம் என்ற படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார்.நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், நடிகை லிஜோமோல் என பலரது நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த வாரம் (நவம்பர் 2) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஒடுக்குமுறையை செலுத்துகிறது, அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எபடி எதிர்கொள்கிறார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக 'ஜெய்பீம்' தயாரிக்கப்பட்டது.

படத்தில் வரும் ஐஜி பெருமாள்சாமி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இதில் வழக்கு விசாரணையின் சம்பந்தப்பட்ட வட இந்தியாவை சேர்ந்த நபரிடம் விசாரிக்கும்போது அதில் இருந்து தப்பிப்பதற்காக இருவருக்கும் தெரிந்த மொழியான தமிழில் பேசாமல் அவர் இந்தியில் பேசுவார்.

அதற்கு பிரகாஷ்ராஜ் அவரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேச நிர்பந்திப்பார். இந்த காட்சிக்கு இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

கதாபாத்திரத்தின் தன்மை, அவர் வழக்கை திசை திருப்பும் நோக்கில் பேசியதற்காக மட்டுமே அப்படி காட்சிப்படுத்தி இருந்தோமோ தவிர இந்தி ஆதரவாளர்களை கோபப்படுத்தும் நோக்கில் இல்லை என இந்த காட்சியின் நோக்கம் குறித்து சமீபத்தில் இயக்குநர் ஞானவேல் பிபிசி தமிழுக்கு அளித்திருந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கதையில் இடம்பெறும் இன்னொரு பொலிஸ் கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரை அந்தோணி சாமி என்றில்லாமல் குருசாமி என மாற்றியதும் ஒரு காட்சியில் அவர் வீட்டின் நாட்காட்டியில் குறிப்பிட்ட சாதி அடையாளத்தோடு கூடிய படம் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. இதனை அடுத்து படத்தில் அந்த 'கலண்டர் காட்சி'யில் திருத்தம் செய்யப்பட்டது.

சர்ச்சைகள் அனைத்தையும் கருத்தில் எடுத்து  படக்குழு மாற்ரம் செய்தது. அப்படி இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சி இதனை விடுவதாகை இல் லை.

இதனையடுத்து இந்த சர்ச்சைகளுக்கு அன்புமணி சூர்யாவை நோக்கி கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, 'பெயர் அரசியலுக்குள் பெயரை சுருக்கி படத்தின் கருவை நீர்த்து போக செய்ய வேண்டாம்' என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.தமிழக அரசியல்வாதிகலும், சினிமாவில் உள்ள பிரபலங்களும் சூர்யாவின் பக்கம் அணி வகுத்து நிற்கிறார்கள்.

வன்னியர் சமூகத்தை சூர்யா அவமானப்படுத்திவிட்டார். நஷ்ட ஈடாக 5 கோடி ரூபா தரவேண்டும் என  அரசியல் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியானது. 5 கோடி ரூபா கொடுத்தால் அவமானம் போய்விடுமா என கேள்வி எழுப்பப்பட்டபோது,பாதிக்கபட்ட மக்களுக்கு கொடுக்க என அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் சமீபத்தில் பாராட்டிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் 'ஜெய்பீம்' படத்தை பாராட்டியதோடு நடிகர் சூர்யாவுக்கு கோரிக்கையுடன் கூடிய கடிதம் ஒன்றையும் அனுப்பி அதை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த கடிதத்தில், உண்மை சம்பவத்தை நீர்த்துப் போகாமல் படமாக்கியுள்ளதாக இயக்கிநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.மார்க்கிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்திய சட்டப்போராட்டம் காரணமாகவே ராஜாக்கண்ணு வழக்கில் நீதியும் நிவாரணமும் கிடைத்தது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

விமர்சனங்களை தாண்டி படத்தின் கரு மக்களிடையே போய் சேர்ந்திருப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளவர் கடிதத்தின் இறுதியில் பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் இருக்கும் பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கபட்ட மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 

பாலகிருஷ்ணனின் இந்த கோரிக்கைக்கு தற்போது நடிகர் சூர்யா தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் பகிர்ந்துள்ள கடிதத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்களிப்பை இயன்றவரையில் முதன்மைப்படுத்தி இருப்பதாக குறிப்பிடும் சூர்யா, பார்வதி அம்மாளுக்கு முதுமை காலத்தில் உதவும் வகையில், பத்து லட்சம் தொகை வைப்புச் செய்யப்போவதாகஅறிவித்து இருக்கிறார்.

அதில் இருந்து வரும் வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவருக்கு பின் அவரது வாரிசுகள் பெற்று கொள்ளவும் முடியும் எனவும் அதில் கூறியுள்ளார்.

மேலும், குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்பிற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, ராஜாகண்ணுவுக்கு நேர்ந்த கொடுமைகளை படத்தில் பார்த்த பிறகு அதிர்ச்சியும் வலியுயும் அடைந்ததாக கூறிய நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது மனைவி பார்வதிக்கு வீடு நிச்சயம் வழங்குவேன் என்று கூறி தமது சமூக ஊடக பக்கத்திலும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஜெய்பீம் படத்திற்கு பிறகு இருளர் சமூகத்தினருக்கு அரசு தேடி தேடி உதவிகளை செய்து வருகிறது. இதனாலும் இந்த படம் பேசப்படுகிறது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக சில கட்சிகள் இது போல் சூர்யாவை குறை கூறி வருவதாக அவரது ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். எனினும் அவர்களை கோபப்படக் கூடாது என சூர்யா அறிவுறுத்தியுள்ளார். ராமசுகந்தன் கேள்வி இந்த நிலையில் பாமகவின் நஷ்ட ஈடு குறித்து வாழப்பாடி ராமசுகந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் வன்னியர் சங்கத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தால் கலங்கம் தீர்ந்துவிடுமா @draramadoss? 21 வன்னியர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்றும் உங்களுடைய மீற்றர் ஓடிக் கொண்டிருக்கிறது ! அந்தக் குடும்பத்தினருக்கு வன்னியர் சங்கமும் பாமகவும் என்ன செய்தது ? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையரங்கு ஒன்றில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற பாமகவினர், வேல் திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த திரையரங்கில் வேல் திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அப்போது சூர்யாவின் போஸ்டர்களையும் பாமகவினர் கிழித்து முழக்கமிட்டனர்.

 செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரைத் தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். இந்த மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்றார். அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு வழங்குவோம் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியிருந்தார். தற்போது பாமக செயலாளர் பகிரங்கமாக நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு என அறிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

மயிலாடுதுறை பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளரின் மிரட்டலுக்கு கட்சித் தலைமை  மெளனமாக அங்கீகாரம் கொடுத்துள்ளது. பொலிஸார் அவரைக்  கைது செய்துள்ளனர். ருத்திர தாண்டவம், திரெளபதி போன்ற படங்களில் திருமாவளவனை  கடுமையாக விபர்ச்சித்திருந்தார்கள்.அதனை அவர் பெரிதாக எடுக்கவில்லை.

படைப்புச் சுதந்திரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல.

வர்மா

No comments: