Wednesday, November 24, 2021

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் பாதுகாப்பாக இருக்கிறார்


  சீனாவின் உயர் அரச அதலைவர் மீது  பாலியல் புகார்  தெரிவித்த சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் எங்கே  இருக்கிறார் எனத் தெரியாமல் குழப்ப நிலை  ஏற்பட்டது. பீஜிங்கில் இருந்து ஐஓசி அதிகாரிகளுடன் 30 நிமிட வீடியோ அழைப்பில் பங்கேற்ற அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் ஒலிம்பிக் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது பெங் குறித்த உலகளாவிய எச்சரிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த அழைப்பு வந்தது.

சீனாவில், 2013 முதல் 2018 வரை   உயரிய பதவியை வகித்தவர்ஜென் ஜெயலாய். இப்போது அவருக்கு வயது 75. சீனாவில் ஒரு அரசியல் பிரமுகர்மீது அதுவும் சீனாவில் ஒரு பெரிய வகித்தவர் மீது குற்றம் சுமத்துவது எப்படியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஷூவே அறிந்திருக்கிறார்ஆனாலும் தனக்கு நடந்த கொடுமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

இந்தப் பதிவு சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிவிட்டர் போன்ற வலைதளமான வெய்போவிலிருந்து அடுத்த 20 நிமிடங்களிலேயே அந்தப் பதிவு அகற்றப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டதால், அது மேலும் அதிகம் பகிரப்பட்டது. சீனாவில் சமூக வலைதளங்களை அரசு கட்டுப்படுத்துவதால், பங் ஷூவேவின் பெயர், டென்னிஸ் என்ற வார்த்தைகள்கூட  இணையத்தில் முடக்கம் செய்யப்பட்டன.

  சீன அரசியல் பிரமுகர் ஒருவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டு எழுவது அங்கு சாதாரணமாக நிகழும் விஷயம் இல்லை. இரும்புக்கரம் கொண்ட அரசு அதற்குத் துளியும் இடம் கொடுப்பதில்லை. ஷூவே ஒரு பிரபல டென்னிஸ் வீராங்கனை என்பதால் இந்த விஷயம் உலக ஊடகங்களின்  கண்களில் பட்டுவிட்டது.

ஷூவேவின் பிரச்னை குறித்து பல விளையாட்டு நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ், நயோமி ஒசாகா போன்ற டென்னிஸ் வீரர்கள் மட்டுமல்லாது, பார்சிலோனா உதைபந்தாட்ட  வீரர் ஜெரார்ட் பீக்கே போன்றவர்களும் ஷூவேவின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியிருக்கின்றனர். Where is Peng Sheuai இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது.

No comments: