Friday, November 26, 2021

உதைபந்தாட்ட ஜாம்பவான் மீது மரடோனா மீது பாலியல் புகார்

உதைபந்தாட்ட  உலகின் முன்னணி வீரரான மரடோனாவுக்கு உலகெங்ம் கோடிக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விளையாட்டு உலகின் பல சாதனைகளைப் படைதவர் மரடோனா.  சாதனைகளால் புகழ் பெற்ற மரடோனா பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.  போதை மருந்து பயன்படுத்தியதா பல வழக்குகளை எதிர் நோக்கியவர்.

உதைபந்து  உலகையே கட்டி ஆண்ட மரடோனா, கடந்த ஆண்டு தலையில் ரத்தம் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் திக‌தி காலமானார். இந்த நிலையில், அவரது முதலாம் ஆண்டு அஞ்சலியை அனுசரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரக  பாலியல்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  கியூபாவை சேர்ந்த அல்வாரெஸ் என்ற பெண். மரடோனா தன்னை கடத்தி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார். தன‌க்கு போதை மருந்துகளை வழங்கி, ஒரு இடத்தில் அடைத்து வைத்து தினமும் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

   கடந்த 2001ஆம் ஆண்டு தாம் 16 வயது பெண்ணாக இருந்த போது விமான பயணம் ஒன்றில் மரடோனாவை சந்தித்து தனது மனதை பறிக்கொடுத்ததாக அல்வாரெஸ் கூறியுள்ளார். முதலில் இரண்டு மாதங்கள் அவருடன் நன்றாக இருந்தேன். ஆனால், பிறகு அவர் நடத்தையில் மாற்றம் தெரிந்து. ஒரு சைகோ போல் மரடோனா நடந்து கொண்டார். என் விருப்பத்தையும் மீறி என்னை அடைத்துவைத்து காலை, மாலை என எப்போதும் என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தார். என் அனுமதியையும் மீறி எனக்கு மார்பக மாற்று அறுவை சிகிச்சையை மரடோனா செய்து வைத்தார் என அந்தப் பெண் பரபரப்பு குற்றஞ்சாட்டினார்


மரடோனா உயிருடன் இருக்கும் வரை இந்த புகாரை ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்த பெண், எனக்கு நடந்த கொடுமை, வேறு யாருக்கும் நடக்க கூடாது என்பதால் தான் இதனை கூறகிறேன். மரடோனாவை நான் காதலிக்கிறேன், அதே நேரம் அவரை நான் வெறுக்கிறேன் என அந்த பெண் பதில் அளித்துள்ளார். இதனிடையே, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மரடோனாவின்  குடும்பம், அல்வாரெஸ் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்போது மியாமியில் வசிக்கும் மேவிஸ் அல்வாரெஸ் ரெகோ, 16 வயதில் மரடோனாவைச் சந்தித்தது எப்படி என்று புவெனஸ் அயர்ஸில் உள்ள பத்திரிகையாளர்களிடம் கூறினார், அப்போது பரடோனா கியூபாவில் வசித்து வந்தார், அங்கு அவர் போதை மருந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். "நான் அவரை நேசித்தேன், ஆனால் நான் அவரை வெறுத்தேன், நான் தற்கொலை பற்றி கூட நினைத்தேன்," என்று அவர் கூறினார்.

15 மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான அல்வாரெஸ் ரெகோ, மரடோனாவுடனான தனது உறவு "நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு இடையில்" நீடித்ததாகவும் தெரிவித்தார்.

அல்வாரெஸ் ரெகோ   புகாரைப் பதிவு செய்யவில்லை, ஆனால் ஆர்ஜென்ரீனா அரசு சாரா நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட புகார் தொடர்பாக ஆர்ஜென்ரீனா வழக்கறிஞரிடம் இந்த வாரம் பியூனஸ் அயர்ஸில் சாட்சியம் அளித்துள்ளார்.

 "அமைதிக்கான அறக்கட்டளை" என்று அழைக்கப்படும் அமைப்பு, சமீபத்திய வாரங்களில் அமெரிக்க ஊடகங்களில் அவரது வாக்குமூலங்களைப் பார்த்த பிறகு புகாரைப் பதிவு செய்தது.

குறிப்பாக மனித கடத்தல், சுதந்திரத்தை பறித்தல், கட்டாய அடிமைத்தனம், தாக்குதல் மற்றும் பேட்டர் தொடர்பான புகார்களுக்கு அந்த நிறுவனம்  நடவடிக்கை எடுக்கும்.

2001 இல் மரடோனாவுடன் ப்யூனஸ் அயர்ஸுக்கு ஒரு பயணத்தின் போது, மரடோனாவின் உதவியாளர்களால் ஒரு ஹோட்டலில் பல வாரங்கள் தன் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டதாகவும், தனியாக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட மரடோனாவின் உதவியாள‌ர்களில் ஐந்து பேர்  தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு எதிராக அவதூறாக எதிர் புகார் அளித்துள்ளனர்.

No comments: