Saturday, November 6, 2021

கோலியின் கப்டன் பதவிக்கு ஆபத்து


 

உலகக்கிண்ண ரி20 போட்டியின் பின்னர் கோலியிடமிருந்து கப்டன் பதவி பறிக்கப்ப‌டும் நிலை உருவாகியுள்ளது

உலகக்கிண்ண ரி20 போச்சியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா மிக  மோசமாகத் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விகள் அனைத்துக்கும் கோலியின் மீது பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

ரி20 உலகக்  கிண்ணத்தொடருக்குப் பின்னர்  க‌ப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார்.  இந்த தொடர் முடிந்து அவர் அணியின் க‌ப்டன் பதவியை துறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 முதல் விளையாடிய இரண்டு போட்டிக ளிலும்  இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வீரர்களின் துடுப்பாட்ட  வரிசை, வீரர்களின் தேர்வு என அடுத்தடுத்து கோலி செய்த தவறே அதிகளவு சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது பிசிசிஐ அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. ஒருநாள்  அனி க‌ப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : இப்போது பிசிசிஐ விராட் கோலியின் செயல்பாடு மீது மகிழ்ச்சியாக இல்லை. அவரது கேப்டன்ஷிப் மீது அதிருப்தி நிலவுகிறது. ‍    இந்திய அணி இந்த ரி20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால் நிச்சயம் விராட் கோலியிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான க‌ப்டன் பதவியும் பறிக்கப்படும் என்று தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒருநாள், ரி20, டெஸ்ட் ஆகிய மூன்றுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments: