Saturday, October 29, 2022

போராட்டங்களைக் கண்டு கொள்ளாத அரசாங்கம்


 அரசாங்கத்துக்கு எதிராக  உலக நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுவது வழமையான ஒன்று. அந்தப் போராட்டங்களுக்கான காரணங்களைக் கண்டு அவற்றைத் தடுப்பதற்கு பல அரசாங்கங்கள்  முன் வருவதில்லை. போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதில் அதிக அக்கறை காட்டப்படுவதால்  போராட்டங்கள் நீட்சி பெறுகின்றன.   காலிமுகத் திடலில்  நடைபெற்ற தொடர் போராட்டத்தினால் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது.அரசியல் லைமையில் மாற்றம் ஏஎற்பட்டதே தவிர அரசியலில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. மறை முகமாக  ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பல்கலைக் கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள்  கொழும்பில் போராட்டங்களை நடத்துகின்றன. அரசாங்கம் அவற்றை அடக்கி ஒடுக்குவதில் ஆர்வமாக  இருக்கிறது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , சிவில் செயற்பாட்டாளர்கள் இன்று கூட்டாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில்  கலந்துகொண்டனர்.

 

 

போராட்டங்களில்  இருந்து சிறுவர்களையும், குழந்தைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று  அரசாங்கம் அறிவித்துள்ளது. குழந்தைகளுடனும், சிறுவர்களுடனும் பொராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பொலிஸார் வன்முரி பிரயோகித்ததால் அதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC), சிவில் அமைப்புகள், ஆசிரியர்கள், அதிபர்கள்  , தனியார், தோட்ட மற்றும் பிற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கவாதிகளின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (27)    "அடக்குமுறையை நிறுத்து" மற்றும் "மக்களின் குரலுக்கு இடம் கொடு" என்ற தொனிப்பொருளில், அதிவேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் நடைபெற்றது.

   பொதுமக்களின் போராட்டம் நடத்தும் உரிமையை நசுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக  பேரணி நடத்தப்படும் என தெரிவித்தார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக அனைத்து அரச, அரை அரச, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு வாழ்வாதார கொடுப்பனவை வழங்குமாறு TUCC அழைப்பாளர் வசந்த சமரசிங்க,  கருத்துத் தெரிவித்தார்.

எமது அடிப்படையான கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது. இந்த அரசு பல விதிகளை அமல்படுத்துவதன் மூலம் மக்களின் கருத்தை தடுக்க திட்டமிட்டுள்ளது . கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது பணவீக்கம் 82% ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் வாழ்க்கைச் செலவுகள் வேகமாக அதிகரித்து வருவதால், அனைத்து மாநில மற்றும் அரச சார்பற்ற துறை ஊழியர்களுக்கும் வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்என சமரசிங்க கூறினார்.

  துறைமுக அதிகாரசபை ஊழியர்கள், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் , வங்கி ஊழியர்கள், இலங்கை மின்சாரசபை ஊழியர்கள்  இணைந்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்

அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால்,அரசாங்கம் அவற்றைக் கணக்கில் எடுக்காது. அரசியல் செய்கிறது. அரசியல்வாதிகள் மக்களிடன் செல்ல வேண்டிய காலம் வரும் அப்போது மக்கள் பதிலடிகொடுப்பார்கள்.

 


No comments: