Saturday, October 15, 2022

ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் உடன் பிறப்புகள்

தமிழக முதல்வராக ஸ்டாலின் தெரிவான  பின்னர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி வீறுகொண்டெழுந்தது. இப்படி ஒரு முதலமைச்சரா என வடநாட்டு ஊடகங்கள் திரும்பிப் பார்த்தன. ஆனால், ஸ்டாலின்  போல் அவரது அமைச்சர்கள் சிலர்  இல்லை எனப்தை  பொது வெளியில் அவர்கள் நடத்திகள் வெளிப்படுத்துகின்றன.

ஸ்டாலினை எதிர்த்து எடப்பாடியும், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுக் அரிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்து மத எதிர்ப்பை சாலினுக்கு எதிரான துருப்பாக பாரதீய ஜனதா முன் வைக்கிரது. மதத்துக்கு எதிரி அல்ல என ஸ்டாலின் சத்தியம் செய்யாத குறையாக  பேசுகிறார்.

இந்தி திணிப்புக்கு எதிராக ஸ்டாலினும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் மிகவும் ஆக்ரோஷமாகப் போரடுகிறார்கள். இந்தியத் திணிக்கவில்லை எனக் கூறிக்கொண்டு   பாரதீய ஜனதா மூர்க்கமாகச் செயற்படுகிறது.

 குறைந்த சாதி மக்களை ஒதுக்கும் அமைச்சர். ஓசி  பயணம் என நக்கலடிக்கும் அமைச்சர்  போன்ரவர்களால் ஸ்டாலினுக்கு  பெரும் தலையிடி. இதனை பொதுக்குழுவில் வெளிப்படையாக ஸ்டாலின் அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல், பாஜக, அதிமுக, திமுக அமைச்சர்களின் பேச்சு உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக பொதுக் குழு கூட்டத்தில் மு..ஸ்டாலின் பேசினார்.

திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு..ஸ்டாலின் பேசுகையில்" உங்களில் ஒருவனான என்னை திமுக தலைவராக தேர்வு செய்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது அண்ணா அமர்ந்த இடம். கருணாநிதி கோலோச்சிய இடம். நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல. தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன்.

நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அன்று முதல் நமக்கு ஏறுமுகம் தான். அன்று முதல் வெற்றி செய்தியை தவிர்த்து ஏதுவும் காதுகளுக்கு கேட்டகவில்லை. 2வது முறையும் உங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். இது நீங்கள் எனக்கு இட்டுள்ள கட்டளை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி தேர்தலை நடத்தி வருகிறோம். பொறுப்புகள் தகுதியானவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே கல் எறிகிறார்கள். திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை. வீசப்பட்ட கல்லை வைத்து கோட்டை கட்டுபவர்கள் திமுகவினர்.

புதிய நிர்வாகிகள் பலர் பொறுப்புக்கு வந்துள்ளார்கள். பழைய நிர்வாகிகள் பலர் இருப்பீர்கள். கடமையை செய்ய காலம் ஒரு கொடையாக இந்த பொறுப்பை உங்களுக்கு வழங்கி உள்ளது. பொறுப்பும், கடமையும் மிக மிக பெரியது. அதை மறந்து விடாதீர்கள். பொறுப்புகளை நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்துதான் உங்களின் பொறுப்புகள் தொடரும். புதிய நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். உங்கள் அனைவரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது.

உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம்.இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இது தான் அடித்தளம்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலுக்கும் போவாங்க. மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக.திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே துவங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும்." இவ்வாறு மு..ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலினின் வெளிப்படையான  பேச்சு எதிர்க் கட்சிகளைச் சீண்டியுள்ளது. ஸ்டாலினை தூங்க விடுங்கள் என்கிறார் அண்ணாமலை..ஸ்டாலினுக்கு  முதிர்ச்சி இல்லை என்கிறார்  எடப்பாடி. அரசை குறை சொல்பவர்களை பற்றி கேட்க நேரமில்லை என்ற ஸ்டாலினின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம் என மதுரையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கனிமொழியை ஸ்டாலின் ஒதுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு  உள்ளது. கட்சியில் அவருகு முக்கையமான பதவி எதுவும்  கொடுக்கபடடவில்லை. உதயநிதிக்குக் கொடுக்கும் முக்கையத்துவாம் கனிமொழிக்கு இல்லை என்ற விமர்சனமும்  உள்ளது. அந்தக் குறை இப்போது தீர்க்கப்பட்டு  விட்டது. துணைப் பொதுச் செயலாளராக  கனிமொழி நியமிக்கப்பட்டார். இதனால் விமர்சனங்களுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினின்  பேச்சை ஆளாளுக்கு ஒவ்வொருமாதிரி  விளக்கம் கொடுக்கிறார்கள்சகல அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கிறது. அவை சந்திக்கு வருவதில்லை. ஜெயலலிதா துணிச்சலுடன் தூக்கி எறிந்து விடுவார். பொறுபுகளைக் குறைத்து கட்டம் கட்டுவார்கள். ஸ்டாலின்  பகிரங்கமாக அறிவித்தார். அது அவர் தனது கட்சிக்காரர்களுக்கு விடுத்த எச்சரிக்கை. ஆனால், எதிர்க் கட்சிகளின் பிரசாரம் ஸ்டாலினை தரம் தாழ்த்துவதாக உள்ளது. எச்சரிக்கை மீறப்பட்டால் சாட்டை சுழற்றப்படும் என ஸ்டாலின்  கோடி காட்டியுள்ளார்.

No comments: