ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலையில் இடி விழுந்துள்ளது.பொல்லுக் கொடுத்து அடி வாங்கிய கதையாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்த இரண்டு ஆணையங்களின் அறிக்கைகளும் அந்தக் கழகத்தின் தலைவர்களின் மீது குற்றம் சுமத்தியுள்ளன.
ஜெயலலிதாவின்
மரணத்தில் நிலவியதாகக் கருதப்பட்ட மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்காக
ஓ.பன்னீர்ச்செல்வத்தின் தர்மயுத்தத்தில் எதிரொலியாக ஆறுமுகசாமி ஆணையம்
அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகம் பார்த்தவர்களைப் பதற வைத்தது.
அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்டபோது தொலைக் காட்சியைப் பார்த்துத்
தெரிந்துகொண்டேன் என அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி
சிரித்துக் கொண்டு பதிலளித்தார். ஆனால், அண்றைய சம்பவம் அனைத்தும்
விலாவாரியாக அவருக்குத் தெரிவிக்கபப்ட்டதாக ஆணைய அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரண மர்மம் பற்றிய ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதா மரணம் பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்கவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவும் சசிகலா தடையாக இருந்ததாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முடிவுகளை சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும், அப்பல்லோ மருத்துவமனை முழுவதும், சுகாதாரத்துறையும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் 10 அறைகளை சசிகலா தரப்பினர் ஆக்கிரமித்திருந்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை முக்கிய குற்றவாளியாக முன்னிறுத்தி இருக்கிறது ஆணையம். இந்த அறிக்கை மூலம், சசிகலாவின் அரசியல் பயணத்துக்கு கடுமையான செக் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த ஓ.பன்னீர்செல்வம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது.
எதைக் கேட்டாலும்,
தெரியாது என்ற பதிலையே ஓபிஎஸ் சொன்னதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா
மறைவுக்கு பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக்
கொள்ளத் தயார் நிலையில் இருந்தது, தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை, அதிகார
மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் கிடைத்த பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை
என்ற ஏமாற்றத்தினால் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியல் லாபத்திற்காக தர்மயுத்தம்
தொடங்கினார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆணையத்தை அமைக்கும் படி
கோரிக்கை விட்டுத்தவர் இடையில் தடம் புரண்டு சசிகலாவின் மேல் சந்தேகபடவில்லை எனத்
தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின்
பெயர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெறவில்லை என்றாலும், அவரது ஆதரவாளராக
இருக்கும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் முக்கிய குற்றவாளியாக
கருதுகிறது ஆறுமுகசாமி ஆணையம்சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை
அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4
பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில்
கூறப்பட்டு உள்ளது
முன்னாள் நீதிபதி
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி
உள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலை
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உலுக்கி போட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்
தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவுகும்,
சசிகலாவுகுமான உறவு சுமுகமாக இல்லை, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி
வெளியான செய்திகள் பொய்யானவை, இட்டலி சாம்ம்பிட்டார், சிரிட்தார், கை
அசைத்தார் என அன்றைய அமைச்சர்கள் கூறிய அனைத்தும் வடிகட்டிய பொய்
என்பதை ஆறுமுக சாமி ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு சரியாக ஆஞ்சியோ
சிகிச்சைஅளிக்கப்படாததும், அவருக்கான வெஜிடேஷன் தொற்று அகற்றப்படாததும் அவரின்
மரணத்திற்கு முக்கிய காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜெயலலிதா
இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்
ஒரு நாள் முன்னதாக இறந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெயலலிதாவுகும், சசிகலாவுகுமான உறவு சுமுகமாக இல்லை, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியான செய்திகள் பொய்யானவை, இட்டலி சாம்ம்பிட்டார், சிரிட்தார், கை அசைத்தார் என அன்றைய அமைச்சர்கள் கூறிய அனைத்தும் வடிகட்டிய பொய் என்பதை ஆறுமுக சாமி ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு சரியாக ஆஞ்சியோ சிகிச்சைஅளிக்கப்படாததும், அவருக்கான வெஜிடேஷன் தொற்று அகற்றப்படாததும் அவரின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர் ஒரு நாள் முன்னதாக இறந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
தூத்துக்குடி
துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை முழுக்க முழுக்க, காவல்துறை
அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர், தலைமை செயலர் போன்ற அதிகாரிகளைக்
குற்றம்சாட்டுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பொலிஸார் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கியுள்ளது.
இதன்மூலம், காவல்துறைக்கு பொறுப்பான அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி
வளையத்தில் சிக்கியுள்ளார். அன்றைய அரசும்,அதிகாரிகளும், பொலிஸும்
தூத்துகுடி மக்களுக்கு எதிராகச் செயற்பட்டது அறிக்கையின் மூலம் தெளிவாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் அரச
அம்புலன்ஸ் அந்தக் கொரூரநாளில் சேவை செய்யவில்லை. தனியார் வைத்தியசாலை
அம்புலன்ஸும், முஸ்லின் மத அம்புலன்ஸும்பலரின் உயிரைக் காத்தன. கோப்பிறேட்
முதலாளிக்காக அரசு இயந்திரம் பொது மக்கள் மீது கண்ணை மூடிக்கொண்டு
சுட்டது. , ஜெயலலிதா மரணம் பற்றியும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றியும்
விசாரணை ஆணையங்கள் முன்வைக்கும் கருத்துகளை அவர்களை நோக்கி கேள்வியாக எழுப்ப
முடியும். இதனால், அதிமுகவினரின் விமர்சனங்கள் மக்களிடையே எந்த தாக்கத்தையும்
ஏற்படுத்தாது. ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளே பிரதானமாக
நிற்கும்.
தேர்தல் கால ஸ்டாலினின்
வாக்குறுதிகளில் இந்த இரண்டு சம்பவங்களும் முக்கியமானாதாகக்
கருதப்பட்டன.
சட்ட நிபுணர்களுடன்
முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளார். என்ன
மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம். பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டால், வழக்கு
தொடுத்து விசாரணை நடத்தலாமா. அல்லது வெறுமனே அறிக்கையை அடிப்படையாக வைத்து விசாரணை
நடத்தலாமா என்று ஆலோசனை செய்துள்ளார்.
ஸ்டாலினின் அரசியல்
பழிவாங்கல் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சொல்கிறார்கள். அவற்றைக்
கேட்பதர்கு அக்கட்சித் தொண்டர்களே தயாராக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் க்கழகத்தின் எதிர்கால ஆணையங்களின் அரிக்கைகளில் முடங்கிப் போயுள்ளது.
No comments:
Post a Comment