கல்வியை புகட்டும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிரது. கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.
ஆண்டும் ஒக்டோபர் 5ம் திகதி "உலக ஆசிரியர்கள் தினம்" கொண்டாடப்படுகிறது. மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி கொண்டு தான் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வையும் தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் பல ஆசிரியர்கள்.
எனவே ஆசிரியர்களின் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் மதிப்பை பெருமைப்படுத்தும் வகையில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கும் கல்வியை வழங்கி தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர் உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள். இந்தியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா , பிலிப்பைன்ஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச ஆசிரியர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கல்வி பணிகளில் ஆசிரியர்களின் பங்களிப்புகள், சாதனைகள் மற்றும்
சமூகம் மீதான ஆசிரியர்களின் அக்கறை உள்ளிட்டவற்றை கவுரவிக்கும் வகையில் உலக ஆசிரியர்
தினத்தை கொண்டாடுவதற்கான பரிந்துரையை அடுத்து கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம்
ஒக்டோபர் 5ம் திக்தி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும்
கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது. அக்டோபர் 5ம் தேதி உலகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களை
பெருமைப்படுத்த சர்வதேச தினமாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால்,
1966ம் ஆண்டில், ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் போது ஆசிரியர்களின்
நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டதே.
செப்டம்பர் 5ல் இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவதை
போல சீனாவில் செப்டம்பர் 10, ஈராக்கில் மார்ச் 1, மலேசியாவில் மே 16, சிங்கப்பூரில்
செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஸ்பெயினில் நவம்பர் 27 ஆசிரியர்கள் தினம்
தனிப்பட்ட முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான நாடுகள்
1994ல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஒக்டோபர் 5ஐ உலக ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றன.
இலங்கையில் செப்ரெம்பர் 6 ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களின் சேவை மற்றும் கல்வி பணியில்
அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறது. போதுமான வகையில் ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புதல், பயிற்சி மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் காணப்படும் ஆசிரியர் தொழில் தொடர்பான
சவால்களை கருத்தில் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது. ஆசிரியர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சனைகளைத் தீர்க்க மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அங்கீகரிக்க
இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களின் பணி நிலைமைகள்
மற்றும் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறது.
2022ஆம் ஆண்டு உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள் “கல்வியின் மாற்றம்
ஆசிரியர்களிடம் இருந்து தொடங்குகிறது” (
“Tகெ ட்ரன்ச்fஒர்மடிஒன் ஒf எடுcஅடிஒன் பெகின்ச் நித் டெஅசெர்ச்”.) என்பதாகும். இந்த
கருப்பொருள் கோவிட் ௧9 தொற்று போன்ற இடர்பாடுகளின் போது கூட மாணவர்களுக்கு கற்பிக்க
தொடர்ந்து உழைத்த மற்றும் உழைத்து வரும் ஆசிரியர்களை அங்கீகரிக்கிறது.தவிர இந்த ஆண்டு
உலக ஆசிரியர் தினம் இந்த கருப்பொருளின் கீழ் CஓVஈD௧9 தொற்றுநோயிலிருந்து மீட்பு செயல்முறைக்கு
ஆசிரியர்கள் முழுமையாக பங்களிக்க வேண்டிய ஆதரவில் கவனம் செலுத்தும். இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள
ஊணேஸ்Cஓ அமைப்பு, 5 நாள் உலகளாவிய மற்றும் பிராந்திய தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளதாகவும், இவை ஆசிரியர் தொழிலில் கோவிட்19 ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தும்
என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
மாதா,பிதா,குரு , தெய்வம் என போற்றப்படும் வரிசையில் குரு அனும் ஆசிரியர் வைக்கப்பட்டுள்ளார். சில பாடசாலைகளில் நடைபெறும் ஆசிரியர் தின வைபவங்கள் முகம் சுழுக்கும் வகையில் உள்ளன. ஆசிரியருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆசிரியர் தினம் என்பது சில பெற்றோரின் வருமானத்தை மீறிய செலவாக உள்ளது.அன்பினால் மாணவர்களைக் கவர வேண்டிய ஆசிரியர்கள் அன்பளிப்பை எதிர் பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பூமாலை, சந்தனமாலை, அன்பளிப்புகள்[ சேலை,சேட்] என பெறுமதி மிக்க பொருட்கள் கைநிறைய கொடுக்கப்படுகின்றன.
ஆசிரியர் தினத்தின் தாற்பரியம் புரியாத பிஞ்சுக் குழந்தைகள் ஆசிரியருக்கு பெறுமதியான
பொருட்களைக் கொடுக்க வேண்டும் என அடம் பிடிக்கின்றன.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச்
சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம்
ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன்
மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி
தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும்
மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு
இருக்கிறது.
அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். ஆசிரியர்தின் அன்பளிப்புக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இதனை முற்று முழுதாக இல்லாமல் செய்யும் வல்லமை நல்லாசிரியரின் கைகளிலே தான் உள்ளது. வர்மா
No comments:
Post a Comment