Friday, October 21, 2022

இங்கிலாந்து பிரதமருக்கு எதிராக எழும் அரசியல் அலை

  புதிய பிரதமரான லிஸ் ட்ரஸ்ஸை பதவி நீக்கம் செய்துவிட்டு, ரிஷி சுனக்கை பிரதமாக்க வேண்டுமென கன்சர் வேட்டி கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. ஆனால், அமெரிக்க டொலருக்கு எதிரான பிரிட்டனின் பணமான  பவுண்ட் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

சரியான பொருளாதார ஆலோசனைகளை வழங்கவில்லை என்று நிதி அமைச்சர் கவாசி கவார்தெங்கை, சமீபத்தில் லிஸ் ட்ரஸ் நீக்கினார். புதிய நிதி அமைச்சராக, வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார்.நிதியமைச்சராக பதவியேற்ற ஹண்ட், பிரதமர் லிஸ் டிரஸ், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டோரை கடந்த சில நாட்களாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளும் திரும்பப் பெறுவதாக அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார். நாட்டின் புதிய பட்ஜெட்டை, வரும், 30ம் திகதி தாக்கல் செய்யும்போது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறும் போது, நான் எனது கடமைகளை முழு பொறுப்புடன் ஏற்று கொள்ள நினைக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். நமது பொருளாதாரத்தை சரி செய்வதில் நான் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும், தலைவராக தொடர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன். இவ்வாறு லிஸ் ட்ரஸ்கூறினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை , லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதில் பிரதமராக்க எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பெரும்பாலான கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் லிஸ் ட்ரஸ் இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்கள்.  அவர்கள்  வாக்களித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு  முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவருக்குப் பதிலாக யார் சிறந்தவர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என , ஒரு புதிய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. டோரி உறுப்பினர்களின்  கருத்துக்கணிப்பில் 55% பேர் இப்போது ட்ரஸிடம் தோற்ற ரிஷி சுனக்கிற்கு வாக்களிப்பார்கள், அவர்கள் மீண்டும் வாக்களிக்க முடிந்தால், 25% பேர்  ட்ரஸுக்கு வாக்களிப்பார்கள்.

கருத்துக்கணிப்பில் 55% உறுப்பினர்கள் அவர் இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள், 38% பேர் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.

பெரும்பான்மையானவர்கள் (63%) முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு நல்ல மாற்றாக இருப்பார் என்று நினைக்கிறார்கள், 32% பேர் அவரைத் தங்கள் முதல் வேட்பாளராக நிறுத்துகிறார்கள், அதைத் தொடர்ந்து   சுனக்கை23% பேர் ஆதரிக்கிறார்கள். அவர்கள்   சுனக்கை மாற்றாக ஆதரிப்பார்கள், 60% பேர் இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறார்கள், அதே நேரத்தில் 47%  ஜெர்மி ஹன்ட் ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

  லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராகத் தெரிவு செய்த அவரது கட்சி உறுப்பினர்களே,  மிகக் குறுகிய காலத்தினுள் அவர வேண்டாமெனப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தவறு செய்ததை லிஸ் ட்ரஸ்  ஒப்புக்கொண்டதை அவரது சகபாடிகள்  பெரிதாக நினைக்கவில்லை. லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக  இன்னொருவரை    பிரதமராக்க வேண்டும் என்பதில்  கட்சித் தலைவர்கள்  உறுதியாக  இருக்கிறர்கள்.

முன்னாள் தலைமை வேட்பாளரான பென்னி மோர்டான்ட்டுக்கும் நிறைய ஆதரவு உள்ளது, 54% பேர் அவர் ஒரு நல்ல மாற்றாக இருப்பார் என்று நினைக்கிறார்கள், அதே நேரத்தில் 62% பேர் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ஆக இருப்பார் என்று நினைக்கிறார்கள் - அவர் கடந்த முறை தன்னை நிராகரித்த போதிலும்.

நேர்காணல் செய்யப்பட்ட டோரி உறுப்பினர்களில் மொத்தம் 31% பேர் தாங்கள் மட்டுமே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதே நேரத்தில் 25% பேர் எம்.பி.க்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதே எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இறுதி இரண்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இறுதிவரை தேர்வு செய்ய வேண்டும் - தற்போது போல் நடக்கும்.

வெள்ளிக்கிழமை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட குவாசி குவார்டெங்கால் மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மினி-பட்ஜெட் கொள்கைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் யூ-டர்ன் செய்வதாக   ஹன்ட் அறிவித்த நாளிலும் நாளிலும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது .

இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸால் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சர் குவாசி குவார்டெங்கால், தனது வரி குறைப்பு திட்டம் குறித்துப் பேசினார். அப்போது அவர், ``மக்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவது தொடர்பான பிரச்னையைச் சமாளிக்கவே நானும் அதிபரும் மிக அவசரமாக நடவடிக்கையை மேற்கொண்டோம். எங்களின் அவசரமான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, நாட்டில் இந்தச் சிக்கல் நிலவிவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் (Jஎரெம்ய் Hஉன்ட்), செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``நாட்டின் நீண்டகாலப் பொருளாதார வாய்ப்புகள் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு நம்பிக்கையும் ஸ்திரத்தன்மையும் தேவை. இங்கிலாந்து எப்போதும் அதன் தனிப்பட்ட வழியைப் பின்தொடரும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் இன்றைய நிலைக்கு ரஷ்ய, உக்ரைன்  போரும் ஒரு காரணம் என லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.மிகக் குறுகிய காலத்தினுள் கட்சிக்குள் செல்வாக்கை இழந்த  பிரதமரி லிஸ் ட்ரஸ்ஸின் அடுத்த காய் நகர்த்தல் இங்கிலாந்தின் தலைவிதியத் தீர்மானிக்கப்போகிறது.

 

No comments: