ஜெனிவாவில் உள்ள பிரித்தானியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் சைமன் மேன்லி இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார்.
“தீர்மானம் பெரும்பாலும் கடந்த ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாகக்
கொண்டது, ஆனால் கடந்த 18 மாதங்களில் இலங்கைக்கு மிகவும் வியத்தகு நேரத்தில் ஏற்பட்ட
சில முக்கிய முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது - பொருளாதார
நெருக்கடி, வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் அரசாங்கத்தில் மாற்றம். , இவை அனைத்தும் நாட்டின்
மனித உரிமை நிலைமையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று தூதுவர் மான்லி
கூறினார்.
“இங்கிலாந்து இலங்கையின் நெருங்கிய பங்காளியாகவும்
நீண்டகால நண்பராகவும் உள்ளது, நமது காலம் ஆழமாக ஓடுகிறது. தற்போதைய சவால்களை எதிர்கொள்ள
இலங்கைக்கு உதவுவதற்காகவும், நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில்
முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோம், ”என்று
அவர் கூறினார்.
ஐநாவில்
என்ன நடக்கும் அதற்கு எப்படிப் பதில் கொடுப்பது என்பதை இலங்கை முன் கூட்டியே வெளிப்படுத்திவிட்டது. "ஐநா எமக்குப் பாடம் புகட்ட வேண்டாம்"
என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உலக நாடுகள் உதவி
செய்யலாம். பொருளாதார சரிவால் நாடு தவிக்கும் போது கைகொடுத்து உதவலாம். ஆனால், இலங்கையில் நடைபெறும் எவற்றையும் தட்டி கேட்டக்
கூடாது. வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். மீறி எதாவது பேசிலால், இலங்கைக்கென
இறையாண்மை என ஒன்று உள்ளது. அதில் தேவையில்லாமல்
மூக்கை நுழைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை வெளிப்படும்.
இலங்கைகுத் தரவேண்டிய அனைத்தையும் தாருங்கள் தட்டிக் கேட்கக்கூடாது என்பதே இலங்கையின் கொள்கை. இலங்கையின் சமீபத்திய சம்பவங்கள் ஏற்கக்கூடியதாக இல்லை.குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் உலகளவில் பேசுபொருளானது.அதே வேளை, இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பல நீண்டகால பிரச்சினைகளைளும் கன் முன்னால் உள்ளது. கடந்த கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை, பல தீர்க்கப்படாத காணாமற்போதல் வழக்குகள், அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை தனது சொந்த கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம், அத்துடன் இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் உள்ளடக்கியது.
No comments:
Post a Comment