தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனின் மகள் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கான்சர் காரணமாக இறந்த அந்த சிறுமி டேவிட் மில்லரின் மகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
கிரிகெட்டர் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறுமியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்து, அந்த சிறுமி இறந்ததாக கேப்ஷனும் இட்டார். இந்த படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது. பலரும் அது டேவிட் மில்லரின் மகள் என்றும், அவருக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.
ஆனால் அவர் பதிவிட்ட அந்த சிறுமி, டேவிட் மில்லரின் மகள் இல்லை என்பதும், அந்த சிறுமி, டேவிட் மில்லரின் மிக பெரிய ரசிகை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த சிறுமி புற்றுநோயை எதிர்கொண்டு வந்ததும், அந்த சிறுமி இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
No comments:
Post a Comment