ஜெயலலிதாவின் ம் ரணத்தின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ச்சியடையத்தொடங்கியது, எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னிர்ச்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமையில் சகல தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது. ஒற்றைத் தலைமை விவகாரம் பதவி ஆசையை வெளிப்படுத்தியது.
பன்னீர்ச்செல்வத்தின்
தர்ம யுத்தம் காரணமாக ஜெயலலிதாவின்
மரணத்தின் மர்மத்தை வெளிப்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட ஆணையம் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தை கபளீகரம் செய்யும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்தபோது பல கதைகள் வெளியாகின. பொது மக்கள் மட்டுமன்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்புள்ள தலைவர்களும் வாய்க்கு வந்தபடி அறிவித்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர்
25ம் திகதி ஓய்வுபெற்ற நீதிபதி
ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு
ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் தீவிர விசாரணையில்
இறங்கினாலும், இழுபறியாக விசாரணை நீடித்து வருவதாக
குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்குள் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சியும் முடிந்துவிட, திராவிட முன்னேற்றக் கழகம்
அரியணை ஏறியது. ஜெயலலிதா
மயங்கி விழுந்தார், தலையில் மரக் கட்டையால்
அடிக்கப்பட்டது,படியால் உருண்டு விழுந்தார்,
சசிகலாவுக்கும் ஜெயலலிதவுக்ம் ஜெயலலிதாவும் இழுபறிப்பட்டனர் போன்ற கதைகள் பரவின.
சுமார் 5 வருடங்களுக்கு
பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை
முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஒப்படைத்தார்.இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை
அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை
தமிழக சட்டசபையில்
சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள
தகவல்கள் தமிழக அரசியலில் புயலை
வீச ஆரம்பித்துள்ளது.
சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது. 2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை, ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றெல்லாம் ஆணையம் புட்டு புட்டு வைத்துள்ளது. அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இப்படி ஒரு ஆணையம் வேண்டும் என்று ஓ.பன்னீர்ச்செல்வம் கேட்டதற்கு இணங்க எடப்பாடி பழனிச்சாமி ஆணையத்தை அமைத்தர். ஆணையத்தை நியமித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அதனைக் கிடப்பில் போட்டி விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ஆணையத்துக்கு புத்துயிர் கொடுக்கப்படும் என ஸ்டாலின் சூளுரைத்தர். திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஆணையத்தை கையில் எடுக்கும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.
மெல்லாக் கொல்லும் விஷம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஏற்கனவே அதிமுகவின் மனோஜ் பாண்டியன் கூறியிருந்தார். அவரது உடலில் விஷத்தின் தடயம் எதுவும் இல்லை என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமற்றது என்று நிராகரிக்கப்பட்டள்ளது. ஜெயலலிதாவை எவரோ மரக்கட்டையால் தாக்கியதால், அவர் மயங்கி விழுந்தார் என்று பொன்னையன் கூறியிருந்தார். ஆனால் அவரே வதந்திகள் அடிப்படையில் சொன்னதாக விசாரணையில் ஒப்புக் கொண்டார். பிறகு, ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்தபோது, அவரது முகத்தில் துளைகள் இல்லை என்று டாக்டர் சுதா சேஷையன் தெரிவித்துவிட்டார். உடல் ரீதியான வன்முறைக்கு எந்த தடயமும் காணப்படவில்லை என்பதையும் இந்த ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. ஒருபக்கம் கண்துடைப்புக்காக ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்தாலும், சில உண்மைகள் வெளிப்பட்டுள்ளதுடன், இந்த ஆணையமே இன்று அதிமுகவுக்கு இன்று செக் வைக்கும் அளவுக்கு போய்விட்டது என்கிறார்கள்.
விசாரணை
கமிஷன் அளித்த, 608 பக்க அறிக்கை, நேற்று
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.அதில்
கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா,
2011 நவம்பர் மாதம், சசிகலாவை தன்
போயஸ் கார்டன் வீட்டில் இருந்து
வெளியேற்றினார். அப்போது, பத்திரிகை ஆசிரியர் சோ உடனிருந்தார்சசிகலா மற்றும்
அவரது உறவினர்கள் மீது, ஜெயலலிதாவுக்கு சந்தேகம்
ஏற்பட்டதால், இளவரசி உள்ளிட்டோரையும் வெளியேற்றினார்
கடந்த 2012 ஜனவரியில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், 'சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்தார்சசிகலா வழங்கிய உறுதிமொழி கடிதம் அடிப்படையில், அவரை மட்டும் ஜெயலலிதா அனுமதித்தார் கிருஷ்ணபிரியா சாட்சியத்தின்படி, சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பது உறுதியாகிறது
ஜெயலலிதாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சேவை செய்ததால், சசிகலாவை மட்டுமே போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைய அனுமதித்ததாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஒப்புக் கொள்கிறார்.வீட்டை
விட்டு வெளியேறிய பின், மறைந்த முதல்வர்
தன்னுடன் பேசியது இல்லை என,
இளவரசி கூறுகிறார் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின், சசிகலாவின் உறவினர்களால்,
10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தனஜெயலலிதாவுக்கு உள்ள நோய்கள் குறித்து,
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலாவுக்கு தகவல் தெரிவித்தனர்
ஜெயலலிதா
இதயத்தில் 'வெஜிடேஷன், பெர்பொரேஷன் மற்றும் டயஸ்டாலிக்' செயல்
இழப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. இங்கிலாந்து
டாக்டர் ரிச்சர்ட் பீலே, அமெரிக்க மருத்துவர்
ஸ்டூவர்ட் ரஸ்ஸல், சமீன் ஷர்மா
ஆகியோர், 'ஆஞ்சியோ' மற்றும் அறுவை சிகிச்சையை
பரிந்துரைத்தனர். ஆனால், அவரது கடைசி
மூச்சு வரை ஏன் அது
நடக்கவில்லை?
இரண்டு
நுரையீரல்களில் இருந்தும், ஒரு நாளைக்கு 1 லிட்டர்
திரவம் வெளியேற்றப்படுவதை கருத்தில் வைத்தாவது, மருத்துவமனையில் ஆதரவாக, நெருங்கிய உறவினர்
இல்லாத ஜெயலலிதா மீது சில அனுதாபங்கள்
ஏற்பட்டிருக்க வேண்டும்
மருத்துவமனையால்
சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுவதை தவிர, வேறு எந்த
ஆதாரங்களும் அல்லது ஆவணங்களும், ஆணையம்
முன் வைக்கப்படவில்லை
டாக்டர்
ரிச்சர்ட் பீலே, மறைந்த முதல்வரை
சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல தயார்
எனக் கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?
டாக்டர் சமீன் ஷர்மா, 'ஆஞ்சியோ' செய்வது குறித்து விளக்கிய பின், அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017 பிப்., 11ல் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றை கருத்தில் வைத்து, சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர, வேறு எந்த முடிவுக்கும், ஆணையம் வர இயலாது
அனைத்து
கருத்துகளில் இருந்தும், சசிகலா, அவரது உறவினர்
டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,
அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆகியோர் குற்றம் செய்தவர்களாக, ஆணையம்
முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது
டாக்டர்
ஒய்.வி.சி.ரெட்டி,
டாக்டர் பாபு ஆபிரகாம் ஆகியோர்,
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் மும்பை, இங்கிலாந்து,
அமெரிக்கா மருத்துவர்களை அழைத்து, 'ஆஞ்சியோ' அல்லது அறுவை சிகிச்சை
செய்வதற்கான கருத்தை பெற்றுள்ளனர்.
ஆனால்,
ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தால், சட்ட
விரோதமாக இலக்கை அடைவதற்காக, அதை
செய்யவில்லை. எனவே, அவர்கள் மீதும்
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
அப்போதைய
தலைமைச் செயலர் ராமமோகன் ராவ்,
அரசு செயல்முறைகளுக்காக பல்வேறு நாட்களில், 21 படிவங்களில்
கையொப்பம் இடுவது குறித்து, அவர்
அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை.
இதை தவிர, ஆணையம் அவருக்கு
எதிராக குறைகள் எதையும் காணவில்லை.
நிச்சயமாக இது ஒரு முக்கியஸ்தரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றம். குறிப்பாக, இது ஒரு முதல்வரின் உயிர் தொடர்பானது என்பதால், அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார். எனவே, அவர் மீதும் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறதுஅப்பல்லோ மருத்துவமனை, உண்மைகளை தெரிவித்திருக்க வேண்டும். இதுவும் விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி
விசாரணை கமிஷன் பரிந்துரைகள் மீது
நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு
சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment