போதைவஸ்து பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் பாடசாலை மாணவர்களும் ,பல்கலைக் கழக மாண்வர்களும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 முதல்
30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த நோய் பரவுகிறது, இந்த ஆண்டின் முதல்
ஒன்பது மாதங்களில் இதுபோன்ற 50 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய STD மற்றும்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி
தெரிவித்தார்.இதனை வெறும்
செய்தியாகக் கடந்து போய்விட முடியாது.
பதினாறு பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று பள்ளி மாணவர்களும் பதிவான வழக்குகளில் அடங்குவதாக அவர் கூறினார். இலங்கையில் சுமார் 2,350 பேர் எச்ஐவிக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சமூகத்தில் சுமார் 3,750 எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையினாலும், குழுவாக கலந்துகொள்ளும் விருந்துகள் போன்ற சமூக நிகழ்வுகளினாலும் இந்நோய் தொற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இணயவழி கல்வியும் இதற்கு முக்கிய காரணம் என சமூக ஆ ர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர் இளையோர் தொடர்பில் கூடுதலாக தேடுவதில்லை. கல்வி நடவடிக்கைகளுக்கு அப்பாற் சென்று, தேவையற்ற காணொளிகளை பார்வையிட்டு, அதற்கு அடிமையாகின்றனர். இணைய வழியாக கல்வி கற்கும் போது, அதற்கு அப்பாற் சென்றும் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டும். சில பெற்றோருக்கு அது குறித்து ஆராய்வதற்கான புரிந்துணர்வு கிடையாது. இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், தொடர்ச்சியாக மருந்து அருந்த வேண்டும். அதையும் தவிர்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
போதையாலும்,
பால்வினை நோயாலும் இளைஞர்கள் பாதிக்கப்படும் போது அடுத்த தலைமுறையில் பாரிய தாக்கம் ஏற்படுவதைத்
தவிர்க்க முடியாது. பாடசாலையில்
ஆசிரியர்களும் ,வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறையுடன்
செயற்பட வேண்டும்.
எது
சரி. எது பிழை என்பதை
மானவர்களின் மனதில் புகுத்த வேண்டும்.
அந்தப் பொறுப்பில் இருந்து பெற்றோரும், ஆசிரியர்களும் ஒதுங்கக்கூடாது.
No comments:
Post a Comment