சுதந்திரப் போராட்டத் தியாகியான பசும்பொன் முத்துராமலிங்கதேவர் னது சொத்துகள் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே அளித்தார். அப்படிப்பட்ட தியாகியான தேவரை இன்று வரை அப்பகுதி மக்கள் சாமியாக பாவித்து வருகின்றனர்.
முக்குலத்தோர்
மக்களால் கடவுளாக கருதப்படுவர் முத்துராமலிங்க
தேவர் ஆவார். இவருக்கு ராமநாதபுரம்
மாவட்டத்தில் பசும்பொன்னில் நினைவிடம் உள்ளது. இவரது பிறந்த
நாளும், நினைவு நாளும் ஒக்டோபர்
30 என்பதால் தேவர் ஜெயந்தியும், குரு
பூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. தமிழக
அரையல்தலைவர்கள் அனைவரும் அந்த நாளில் தமது
மரியாதையைத் தெரிவிப்பார்கள்.
ஜெயலலிதா ஒரு
படி மேலே போய் முக்குலத்தோரின்
மனதில் இடம் பிடித்தார்.ஜெயலலிதா
முதல்வராக இருந்த போது கடந்த
2014-ஆம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை
பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு
சாத்தினார். இதன் மூலம் முக்குலத்தோரின்
மனதில் ஜெயலலிதா நீங்கா இடம் பிடித்தார்.
அதன் பின்னர் அந்த ஆண்டு,
அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற தேவர்
ஜெயந்தி மற்றும் தேவர் குரு
பூஜை விழாக்களில் அமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து
கொண்டார்.
இந்த
தங்க கவசம் ஆண்டுதோறும் தேவர்
குரு பூஜையின் போது வங்கியிலிருந்து எடுத்து
தேவருக்கு சார்த்தப்பட்டு பிறகு வங்கி பெட்டகத்திலேயே
வைக்கப்படும். ஆண்டுதோறும் அதிமுக பொருளாளரும், தேவர்
நினைவிட நிர்வாகியும் சேர்ந்து இந்த கவசத்தை எடுப்பது
வழக்கம். ஜெயலலிதா அப்போஒலோவில் இருந்தபோதும் பன்னீர்ச்செல்வம்
தேவர் ஜெயந்தியில்
கலந்து கொண்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இஅரண்டு பட்டிருப்பதால் தேஅவ்ரின் தங்கக் கவசத்தைப் பெறுவதற்காக எடப்பாடியும், பன்னீரும் முட்டி மோதினார்கள். இதற்குள் தினகரன் தர்ப்பும் தங்கக் கவசத்துக்காகபோராடியது. ஜெயலலிதாவின் தங்கக் கவசத்தைக் கைப்பற்றினால் கட்சியின் உரிமையைப் பெறலாம் என அரசியல்வாதிகள் கணக்குப் போட்டனர்.
ஜெயலலிதா
இல்லாததால் தங்க கவசத்தை யார்
எடுப்பது என்பதிலும் பிரச்சினை, மோதல் ஏற்பட்டது அம்மக்களிடையே
சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி
இரண்டாக பிளந்துவிட்டதால் கட்சியின் பொருளாளர் யார் என்பதில் சிக்கல்
ஏற்பட்டது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வமா
இல்லை எடப்பாடியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனா , இல்லை தினகரனால் நியமிக்கப்பட்ட
ரங்கசாமியா என்ற குழப்பம் நிலவியது.
பின்னர் ஒரு வழியாக துணை
முதல்வரும், தேவர் நினைவிட நிர்வாகியும்
கவசத்தை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போது தேவரின் தங்க கவசத்தை
எடுக்க டிடிவி தினகரன் தரப்பினரும்
வந்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக
பிளவுபட்டு இருப்பதால், வங்கியில் உள்ள தங்கக்கவசம் பெறுவதில்
சிக்கல் எழுந்துள்ளது. கட்சியின் சார்பில் வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை எடுக்க
உரிமை கோருவதில் பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் மாறி மாறி வேறுபட்ட
கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், தங்களுக்கு ஆதரவு தருமாறு தேவர்
நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் உரிமை
கோரினர். அதுபோல ஓபிஎஸ் தரப்பும்
ஆதரவு கோரியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேவர் பெருமகனாருக்கு பொருத்தப்படும் தங்க கவசம் வைக்கப்பட்டுள் வங்கி லாக்கர் சாவி என்னிடம் உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு இபிஎஸ் தரப்பில் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் தரப்பில் யாரும் தம்மை அணுகவில்லை. இரு நாட்களுக்கு முன் என்னிடம் வந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் இதற்கு முன் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்தவர்கள் தான். தற்போது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னையில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
தற்போது
பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் வேண்டாம். ஒருவரை
விட்டு ஒருவரை வைத்து எடுத்தால்
நன்றாக இருக்காது. அதே நேரத்தில் தேவர்
அனைவருக்கும் பொதுவானவர் என்பதாலும், இரு தரப்பும் சண்டையிட்டு
வருவதாலும், இரு தரப்பும் வேண்டாம்
என்றும் தாமே அதனைப் பெற்று
தேவருக்கு அணிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், ஜெயலலிதா தான் தங்க கவசம்
வழங்கினார். அதனால்
நானே எடுத்துச் செல்கிறேன் என்று கேட்கப் போகிறேன்
என்று தெரிவித்தார்.
இதற்கிடையில்,
பசும்பொன் தேவர் தங்க கவசம் விவகாரம்
தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்
செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்
செய்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு
வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை
கிளை நீதிபதி தங்க கவசத்தை
இரு தரப்பிடமும் தர மறுத்துவிட்டார். மேலும்,
ராமநாதபுரம் மாவட்ட
வருவாய் அலுவலரிடம் கவசத்தை
ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஜெயலலிதா
வழங்கிய தங்கக் கவசம் கைவிட்டுப்
போனதால் எடப்பாடியும், பன்னீரும் அதிர்ச்சியில் உள்ளனர். தேவர்
நினைவிடத்துக்குப் போகப்போவதாக அரிவித்த எடப்பாடி பின்னர் அந்த முடிவைக்
கைவிட்டார். பிற்படுத்தப்
பட்டோருக்கான ஒதுக்கீட்டால் முக்குல மக்கள் எடப்பாடியின் மீது
மிகுந்த கோபத்தில் உள்ளனர். அங்கு சென்ரால் உரிய
மரியாதை கிடைக்காது என்பதால் எடபாடி பின்வாங்கி விட்டார்.
ஜெயலலிதா
இருந்திருந்தால் இதுபோன்ற கோஷ்டி பூசல் நடந்திருக்காது
என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். அவர்
இல்லாமல் தேவர் ஜெயந்தியும் தேவர்
குருபூஜையும் கொண்டாடப்பட்டது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில்
நம் தேவருக்கு தங்க கவசம் அளித்த
தங்கத் தாரகை இல்லையே என்ற
எண்ணம் அவர்கள் மனதில் மேலோங்கி
இருந்தது.
இந்தப்
பிரச்சினைகளுக்கிடையில் தேஅவ் ஜெயந்தி விழாவில்
பிரதமர் மோடி கலந்துகொள்வார் என பாரதீய
ஜனதாக் கட்சி அறிவித்தது. ஒரு
வாரமாக பரபரப்பாகப் பேசபட்ட செய்தி பின்னர் வாபஸ்
பெறப்பட்டது.
தேவரின்
மீது மதிப்பு வைத்திருக்கும் மக்களின்
வாக்குக்காக தமிழக அரசியல் வாதிகள்
நடத்திய குடுமிப்பிடி சண்டை இப்போதைக்கு முடிவுக்கு
வந்துள்ளது.
No comments:
Post a Comment