நாடகத்திலும், திரைப் படத்திலும் என்.எஸ்.கிருஷ்ணன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்து புகழ் பெற்றவர் "குலதெய்வம்" ராஜகோபால். நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் பட்டப் பெயர் சூட்டி கெளரவப்படுத்துவது வழமையானது. ஒரு சிலர் நடித்த முதல் படத்தால் அடையளம் காணப்பட்டனர். ராஜகோபால் நடித்த முதலாவது திரைப்படம் "குலதெய்வம். அதனால் "குலதெய்வம்" ராஜகோபால் என அவர் அழைக்கப்பட்டார்.
1960-களில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் ‘குலதெய்வம்’ ராஜகோபால். நாடக நடிகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ராஜகோபால், கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களின் இயக்கத்திலே ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘குலதெய்வம்’ படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் அதுவரையிலே ‘ராஜகோபாலாக’ இருந்த அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குலதெய்வம்’
ராஜகோபால் ஆனார்.
சிறுவயது முதலே அவர் கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனின் மிகத் தீவிர ரசிகர். ராஜகோபால் நடித்த ‘எதிர்பாராதது’ என்ற நாடகம்
நாகர்கோவிலில் நடைபெற்றபோது அந்த நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த என்.எஸ்.கிருஷ்ணன் ராஜகோபாலின் நடிப்பைப் பாராட்டினார். என்.எஸ்.கிருஷ்ணனின் பாராட்டினால் ராஜகோபால் மகிழ்ச்சியடைந்தார். தனகு
மிகவும் பிடித்தமான என்.எஸ்.கிருஷ்ணனின் பாராட்டு அவருக்கு புதிய உற்சாகத்திக் கொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு
அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ராஜ்கோபாலுக்குக் கிடைத்தது. அவருடைய வாழ்க்கையில் பல முக்கியமான திருப்பங்களுக்குக்
காரணமானவர் கலைவாணர்தான். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ராஜகோபால் திரைப்படத்தில்
காலடி எடுத்து வைக்க என்.எஸ்.கிருஷ்ணந்தான் காரணம். "கலைவாணரது கடைசி மாணவன் நான்தான்” என்று ஒரு
கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ராஜகோபால், கலைவாணரைப் பற்றி பல அரிய தகவல்களை அந்தக்
கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கலைவாணருடன் பல நாடகங்களில் நடித்தவர் ராஜகோபால். நாடகம் முடிந்ததும் சகலருக்கும் உரிய பணம் கொடுக்கப்படும்.
கலைவாணரின் சம்பளம் ராஜகோபாலிடம் இருக்கும். யாராவது உதவி கேட்டு வந்தால் சம்பளப் பனத்தில்
இருந்து கொடுக்கச் சொல்வார். அதிகமான நாட்கள்
கலைவாணர் வெறும் கையுடன் வீடு திரும்புவார்.தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு
இல்லை என்று எப்போதும் சொல்லாத வள்ளல் அவர்.
திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத் தருவதில் கலைவாணருக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாது.
காத்தவராயன் கதையை ‘ஆர்யமாலா’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிட்ட பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு கலைவாணரைச் சந்தித்து ‘ஆர்யமாலா’ கதையைச் சொல்லிவிட்டு அந்தப் படத்தில் யாரை நடிக்க வைத்தால்
சரியாக இருக்கும் என்று அவரிடம் யோசனை கேட்டார்.
“படம் சக்சஸ் ஆகணும்னா கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், வில்லனாக பாலையாவையும் போடு” என்று கலைவாணர் சொன்னபோது ஸ்ரீராமுலு
நாயுடு அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.
ஏனென்றால் அந்த கால கட்டத்தில் பி.யு.சின்னப்பா திரைப்பட மார்க்கெட்டை
முற்றிலுமாக இழந்துவிட்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கப் போய்விட்டிருந்தார்.
டி.எஸ்.பாலையா அதற்கும் மேலே ஒரு படி சென்று சாமியாராக மாறிவிட்டிருந்தார். அவர் எங்கேயிருக்கிறார்
என்பதைப் பற்றி அவரது குடும்பத்துக்கே அப்போது தெரியாமல் இருந்தது. ஆகவே, கலைவாணர்
அவர்கள் இருவரது பெயரையும் சொன்னவுடன் ஸ்ரீராமுலு நாயுடு மிகப் பெரிய குழப்பத்துக்கு
ஆளானார்.
"குலதெய்வம்" ராஜகோபாலை . ’ ’சின்னக்கலைவாணர்’ என்றும் அழைப்பதுண்டு. 1961-ல் மதுரை ரசிகர்கள் அவருக்கு இந்தப்பட்டத்தை வழங்கினார்கள். 1956-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ”குலதெய்வம்” படத்தில் அறிமுகமானார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாடக்குழுவில் இருந்தவர். சித்தி, அவர் எனக்கே சொந்தம், சபாஷ் மீனா, ராஜா ராணி, திலகம், மன்னாதி மன்னன், குறவஞ்சி, எல்லைக்கோடு, நத்தையில் முத்து, நல்லதம்பி, கருந்தேழ் கண்ணாயிரம், இதோ எந்தன் தெய்வம், அருணோதயம், காவேரி, தாயே உனக்காக, ஆரத்தி எடுங்கடி, களத்தூர் கண்ணம்மா, காவல் தெய்வம், திருடாதே, வாழ வைத்த தெய்வம், கப்பலோட்டிய தமிழன், எங்கிருந்தோ வந்தாள் போன்ற 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இடைக்காலத்தில் படங்கள் குறைந்திருந்த காலத்தில் இவருக்கு மறுவாழ்வளித்தவர் இயக்குநர் கே.பாக்கியராஜ். கே. பாக்கியராஜின் எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ ஆகிய படங்களில் நடித்தார்.அவரது பெரும்பாலான படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.
கலைமணி நாடகக் குழு திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளத்தில் நாடகம்
போட ஒத்துக்கொண்டனர். ‘சர்வாதிகாரி’ நாடகத்தை ‘நீதியின் வெற்றி’ என்ற பெயரில் நடிக்க
ஏற்பாடு நடந்தது. குலதெய்வம் ராஜகோபால் கோஷ்டி அங்கு வந்து இறங்கிய பிறகுதான் தெரிந்தது.
இசைக்குழுவில் ஒரே ஒரு ஆர்மோனியக்காரர் மட்டும்தான் வந்திருந்தார். நடிகர்கள் ஒரு சிலர்
தான் வந்திருந்தார்கள். சர்வாதிகாரி நாடகமோ போடமுடியாது. பார்த்தார் குலதெய்வம் ராஜகோபால்.
கூடியிருந்தவர்களோ கிருத்தவர்கள். உடனே நாடகத்தின் சில காட்சிகளைத் தொடுத்து கிருத்தவ
நாடகமாகப் போட்டு பாராட்டும் பெற்று ஊர் திரும்பினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்டராமாணிக்கம் என்ற சிற்றூரில்
பிறந்து,சிறு வயது முதலே தெருக்கூத்துக்களில் நடிக்க ஆரம்பித்தார். லோகிதாசனாகவும்
பாலமுருகனாகவும் நடித்துப் புகழ்பெற்ற ராஜகோபால் பிறகு 12 வயதில் பாய்ஸ் நாடகக் கம்பெனியில்
சேர்ந்தார்.
பிறகு 16 வயதில் ஸ்த்ரீ பார்ட்டுகளை ஏற்று நடிப்பதிலும் தேர்ச்சி
பெற்று மதுரையில் பிரபலமான நாடகக் குழுவாக இருந்த கலைமணி நாடகக்குழுவில் சேர்ந்தார்.
மதுரையிலிருந்து ஒருமுறை சேலத்தில் நாடகம் நடிக்கச் சென்றிருந்தபோது முதல்முறையாகக்
கலைவாணரைச் சந்திக்கிறார்.
ராஜகோபாலின் நடிப்புத் திறனும் நகைச்சுவை உணர்வும் கலைவாணருக்குப்
பிடித்துப்போக “எனது கம்பெனியில் நடிக்க விரும்பினால் வாங்க மைனர்!” என்று கலைவானார்
அழைப்பு விடுகிறார். இதைவிடச் சிறந்த வாய்ப்பு அமையுமா என்ன? கலைவாணரின் நாடகக் குழுவில்
சிறப்பு மற்றும் சிரிப்பு நடிகராக மாறினார் ராஜகோபால். பிறகு கலைவாணர் திரைப்படங்களுக்கு
இடம்பெயர்ந்தபோது, ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள்.
அப்போதெல்லாம் கலைவாணர் தான் நடி "குலதெய்வம்" ராஜகோபால் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல சிறந்த குணசித்ர நடிகருமாவார். சினிமாவில் சம்பாதித்ததை சினிமா எடுக்க முயற்சித்து
நொடிந்தவர்களில் ஒருவர். படங்களிலேயே
அவருக்குப் பரிந்துரை செய்தார்.
No comments:
Post a Comment