மக்காபி ஹைஃபாவில் செவ்வாயன்று நடந்த ஜுவென்டஸ் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஏஞ்சல் டி மரியா வெளியேறியதைத் தொடர்ந்து, உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னதாக ஆர்ஜென்ரீனாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டி மரியா முதல் பாதியில் ஒரு பந்துக்காக ஓடிக்கொண்டிருந்தார், அப்போது
அவர் வலது தொடையின் பின்புறத்தை பிடித்து இழுத்து வலியில் துடித்தார். டி மரியாவின்
நிலை குறித்த விவரங்களை ஜுவென்டஸ் உடனடியாக வழங்கவில்லை.
கடந்த வாரம் ஜுவென்டஸ் ஹைஃபாவை 3௧ என தோற்கடித்த போது மூன்று கோல்களையும் அடிப்பதற்கு டி மரியா உதவினார்.
ரோமா அணிக்காக விளையாடும் போது சக அர்ஜென்டினா வீரர் பாலோ டிபாலா
காயமடைந்த சில நாட்களுக்குப் பிறகு இச் சம்பவம் நடந்துள்ளது.
லியோனல் மெஸ்ஸிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதால், செவ்வாயன்று சாம்பியன்ஸ்
லீக்கில் பென்ஃபிகாவுக்கு எதிரான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
கடாரில் நடைபெறும் போட்டியில் விருப்பமான அணிகளில் ஒன்றான ஆர்ஜென்ரீனா, நவம்பர் 22ம் திகதேதி சவுதி அரேபியாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது.சி பிரிவில் மெக்சிகோவையும், போலந்தையும் எதிர்கொள்கிறது.
No comments:
Post a Comment