அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 112 ஓட்டங்களை எடுப்பதற்கு 18.1 ஓவர் வரை சென்றதை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் நோக்குகின்றனர்.
பேர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணியில் இப்ரகிம் ஜடார்ன் 32 ஓட்டங்களும், உஸ்மான் ககானி 30 ஓட்டங்களும் எடுத்ததே அதிகபட்டச ஓட்டங்களாகும்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்
இழந்து 112 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
சிறப்பாக பந்துவீசியாக ஆல்ரவுண்டர் சாம் கரன் 5 விக்கெட்டை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ்
,மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
சொற்ப
ஓட்டங்களான 113 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின்
தொடக்க வீரர்கள் கப்டன் பட்லர் 18 ஓட்டங்களும் , அலக்ஸ் கெல்ஸ் 19 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மலான் நிதான ஆட்டத்தை
வெளிப்படுத்தி 30 பந்துக்களில் 18 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி
18.1 ஓவர்களில் 113 ஓட்டன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment