Sunday, October 9, 2022

இலங்கையைக் காப்பாற்றும் நட்பு நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை அமா்வில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம்  கடந்த வியாழக்கிழமை [6 ஆம்திகதி] நிறைவேற்றப்பட்டுள்ளதுஇறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர்  ஐநாவில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதம், பிரேரணை, வாக்கெடுப்பு என்பன தொடர்ச்சியாக நடை பெற்றுவருகின்றன.

இலங்கை விவகாரம் ஐநாவுக்குப் போகிறதுஇலங்கைக்கு கடிவாளம்  போடப்படும் என நம்பி இருந்த அப்பாவித் தமிழ் மக்கள் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து  போனார்கள்காரசாரமான விவாதங்கள், கடும் கண்டன அறிக்கைக்கள் என்பன அரங்கேறும். இறுதியில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படும். உலக அரசியல் இரண்டுபட்டுள்ளது. அமெரிக்காவும் நேச நாடுகளும் சொல்வதை எதிர்ப்பதற்கென்றே சில நாடுகள் ஐநாவில் கலந்துகொள்கின்றனபோதாக்குறைக்கு வீட்டோ அதிகாரம்  சிலவற்றுகுக்குத் தடை போடுகின்றன.

கடந்த மாதம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கையின் சமகால நிலைமைகள் மற்றும் கடந்த தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றாமை தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் 20 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன

தீர்மானத்திற்கு எதிராக விழுந்த வாக்குகளை விட ஆதரவாக விழுந்த வாக்குகள் அதிகம் என்பதால் இந்தத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து,ஜேர்மனி, மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனஇந்தியா ,ஜப்பான், நேபாளம், கட்டார் உள்ளிட்ட 20 நாடுகள் இதைப் புறக்கணித்தனசீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன.

 கடந்த ஆண்டும் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிராகக் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019 , 2021 ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 2015 தவிர அனைத்து முறையும் இது தனது இறையாண்மையை மீறுவதாக இலங்கை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ஐநாவின் தீர்மானத்தால் இலங்கைக்கு உடனடியாகாப் பாதிப்பு ஏற்படப்போவதில்லைமுன்னரும் இது போன்ர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இலங்கை தனது அரசியல் சாணக்கியத்தால் நீர்த்துப்போகச் செய்துள்ளது. இலங்கைக்கு உதவு நாடுகள் ஐநாவில் வெளிப்படையாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன

நடுநிலை வகிப்பதாகக்கூறும் இந்தியா  போன்ற நாடுகள், கடுமையான எதிர்ப்பதை தெரிவிக்காமையினால்    அவை தமக்குச் சாதகமாக  இருப்பதாக  இலங்கை தெரிவிக்கிறது. நடுநிலை என்பது  ஏதோ ஒரு அணிக்கு ஆதரவானது என்பதை  உலக நாடுகள்  புரிந்துகொள்ள வேண்டும்.

No comments: