Tuesday, October 4, 2022

தமிழக அரசுக்கு சவால்விடும் சம்பவங்கள்


 ஸ்டாலினின் தலமைமையில்  இயங்கும் தமிழக தமிழக அரசின்  பெயரைக் கெடுக்க ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.  தமிழக அமைச்சர்கள் சிலரும். சட்டசபை உறுப்பினர்களும் செய்யும் அடாவடிகள் தமிழக அரசுக்கு  தலைக்  குனிவை ஏற்படுத்துகின்றன.

தமிழ் நாட்டில் பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டது.அதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சட்டம் ஒழுங்கு சீர் குலையும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரனிக்குத் தடைவிதிக்கும் படி தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்தன. இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்ற உத்தரவு  மூலம் பேரணிக்கு  அனுமதி வாங்கியது.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த அனுமதிக்க கூடாது என்று கடந்த சில நாட்களாகவே கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால் சட்ட ஒழுங்கு கெடும் என்று பல்வேறு அமைப்புகள் விமர்சனங்களை வைத்து வந்தன.   தமிழ்நாடு அரசு இதில் முடிவு எதுவும் எடுக்காமல் இருந்தது. பேரணியை நடத்த வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கோரிக்கைக்கு ஆதரவாகவும் முடிவு எடுக்கவில்லை, அதற்கு எதிராகவும் முடிவு எடுக்காமல் இருந்தது.

தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கைதான் தற்போது நடக்கும் சர்ச்சைகள் அனைத்திற்கும் காரணம்.

இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் கோரிக்கை மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் சார்பில்   சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த அனுமதி வழங்கியது. ஆர்எஸ்எஸ் பேரணி அக்டோபர் 2ஆம் திகதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் திகதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊர்வலத்தில் சாதி, மதம், தனி நபர் குறித்து தவறுதலாக பேச கூடாது. மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட கூடாது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேச கூடாது. எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேசவே கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாடு காவல்துறை இந்த அனுமதி பற்றி முடிவே எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு பின்பாக இரண்டு விதமான மூவ்களை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதன்படி மொத்தமாக தமிழ்நாடு முழுக்கு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவு பிறப்பிக்காமல் மாவட்ட எஸ்.பி சார்பாக இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சட்ட ஒழுங்கு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதை அடிப்படையாக வைத்து மாவட்ட அளவில் எஸ்.பி சார்பாக ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது. எங்கு எல்லாம் தடை முதல் கட்டமாக திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வரும் நாட்களில் தடை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்ரம் அனுமதி கொடுத்தும் ஜெயலலிதா அதை அனுமதிக்கவில்லை. அதேபோல்தான் முதல்வர் ஸ்டாலினும் இந்த முறை அனுமதி கொடுக்காமல் தடை செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. அதன்படியே தற்போது ஆர்.எஸ். எஸ் பேரணிக்கு பல்வேறு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் திகதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்படவுள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் ஜனநாயக சக்திகள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அறப்போராட்டத்தை ஒரு முன்மொழிவாக அறிவித்து, பிற சனநாயக சக்திகள் யாவரும் இதில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சி சாரா அமைப்புகளும் மற்றும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், நாம் தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, சிபிஐ (எம்.எல்- விடுதலை), அ.தி்.ம.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் இந்த மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்கப் போவதாக அரிவித்துள்ளன. இந்தப் பேரனிக்கும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன.  இதில் சம்பந்தப்பட்ட சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். தமது காருக்கு தாமே தீவைத்ததும் விசாரனையின் போது  தெரியவந்துள்ளது.

  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளதை கண்டித்து, காவல்துறையினரின்  உத்தரவையும் மீறி  கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது முறையாக செவ்வாய்கிழமை 8 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகளான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள், பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த ராமலிங்கம், சசிகுமார், கர்நாடகாவை சேர்ந்த பிரவீன் நெட்டார் உள்ளிட்டோர் கொலை வழக்கில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததுடன், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நிதி வசூல் செய்ததன் காரணமாகவும், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, தேசிய மனித உரிமைக் கழக கூட்டமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளும் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த தடையை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினர் அறிவுறுத்தலையும் மீறி கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அருகே ஏராளமான இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து போராட்டம் நடத்திய  பெண்களிடம் ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தை கைவிடக்கோரி விளக்கம் அளித்தனர்.இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  அகிம்சாமூர்த்தியான காந்தி மகானின் பிறந்த தினமான ஒக்டோபர் 2 ஆம் திகதி   வன்முறையைக் கட்டவிழ்த்துவிட சிலர் முயற்சி செய்கின்றனர்.


No comments: