Wednesday, May 2, 2012

திரைக்குவராதசங்கதி34


சிட்டாடல்பிலிம்ஸ்தயாரித்தஇரவும்பகலும்என்றபடத்தின்மூலம்தென்னகத்துஜேம்ஸ்பொன்ட்எனவர்ணிக்கப்பட்டஜெய்சங்கரும்,வசந்தாவும்ஜோடியாகஅறிமுகமானார்கள்.சிறுவயதிலேயேநாட்டியம்பயின்றவர்வசந்தா.நாடகத்தில்நடிக்கவேண்டும்எனவிரும்பியஅவருக்குசேவாஸ்டேஎன்றநாடகக்குழுகைகொடுத்தது.அதன்பின்னர்டி.கே.எஸ்நாடகக்குழுவில்இணைந்தார்.டி.கே.எஸ்.நாடகசபாமேடையேற்றியராஜராஜசோழன்என்றநாடகத்தைதயாரிப்பாளரும்இயக்குநருமானஜோசப்தளியத்பார்த்தபோதுஅதில்நடித்தவசந்தாவைதனதுவிளக்கேற்றியவள்என்றபடத்தில்கதாநாயகியாகநடிக்கஒப்பந்தம்செய்தார்.விளக்கேற்றியவள்படப்பிடிப்புநடைபெற்றுக்கொண்டிருந்தஅதேவேளையிலேயேஅவருடையசிட்டாடல்பிலிம்ஸ்இரவும்பகலும்என்றபடத்தைத்தயாரித்தது.அப்படத்தில் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமானார். இரவும் பகலும் படத்துக்காக கதாநாயகிகளை தேடிய ஜோசப் தளியத் வசந்தாவையே இரவும் பகலும் என்ற தனதுபடத்தில்நடிக்கச் செய்தார்.விளக்கேற்றியவள் படத்துக்கு முன்னதாகவே இரவும் பகலும் படம் வெளியானது.இரவும் பகலும் படம் 100நாள்ஓடிஜெய்சங்கரையும்வசந்தாவையும்சிறந்தநடிகர்கள்எனவெளிச்சம் போட்டுக் காட்டியது.இரவும் பகலும் 1965 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அதே ஆண்டு ஏப்ரலில்விளக்கேற்றியவள்வெளியானது.அதேஆண்டுஇறுதியில்வசந்தாகதாநாயகியாகவும், கே.விஜயன்கதாநாயகனாகவும்நடித்தகார்த்திகைதீபம்வெளியானது,கதாநாயகனானவிஜயன்பின்னாளில்இயக்குனராகிதீபம்,தியாகம்,திரிசூலம்போன்றவெள்ளிவிழாப்படங்களைத்தந்தார்.அவருடைய மகன்சுந்தர்கே. விஜயன் சின்னத்திரையில் முத்திரைபதித்து வருகிறார்.வசந்தா மிகவும் பிஸியாக இருக்கிற நேரம்கே. பாலசந்தரின்பத்தாம்பசலிஎன்றபடத்தில்நடித்தார்.படப்பிடிப்புக்கு அன்று அவர்தாமதமாகச் சென்றார். இயங்குநர் கோபமாக இருக்கிறார் என்று கூட நடித்த நாகேஷ்கூறினார். தனதுகோபத்தைவெளிக்காட்டாத‌இயக்குநர்அன்றையகாட்சியைவிபரித்தார்.சுமார் 200 அடி நீளமான அந்தக் காட்சியைஒரே டேக்கில் நடித்து முடித்தார் வசந்தா.அப்போது நான் சொன்னேனே வசந்தா நாடத்தில் இருந்து வந்த பொண்ணு ஒரேடேக்போதும்இப்போதுகோபம் போய்விட்டதா''என்று சத்தமாக நாகேஷ் கேட்டார். பாலச்சந்தர் மெல்லிய புன்னகையை வெளிக்காட்டினார்.
            பாஞ்சாலிசபதம்என்றநாடகத்தில்வசந்தாபாஞ்சாலியாகநடித்தார்.அந்தநாடகத்தைப்பார்த்தஎம்.ஜி.ஆர்தன்னைவந்துசந்திக்கும்படிகூறினார்.வசந்தாவின்தமிழ்உச்சரிப்பைரசித்தஎம்.ஜி.ஆர்க‌ , ணவன்என்றபடத்தில்தங்கைவேடத்தில்நடித்கவசந்தாவைஏற்பாடுசெய்தார்.படப்பிடிப்புக்காகமேக்கப்போட்டுக்கொண்டுசத்யாஸ்டூடியோவில்காத்திருந்தார்வசந்தா.அப்போதுசீனியர்ந‌டிகைஒருவ‌ரும்அங்கேபடப்பிடிப்புக்குதயாராகஇருந்தார்.சீனியர்நடிகைவசந்தாவுடன்கதைத்தபோதுஎம்.ஜி.ஆரின்ஒரேஒருதங்கைக்காகஇருவர்மேக்கப்புடன்இருக்கும்விசயம்தெரியவந்தது.இந்தப்பிரச்சினைஎம்.ஜி.ஆரின்காதுக்குச்சென்றதும்இயக்குநரும்,கதாசிரியருமான சொர்ணத்தை அழைத்து இருவருக்கும் ஏற்றவகையில்கதையில்மாறுதல்செய்யும்படிகூறினார்.எம்.ஜி.ஆர்அழைத்தவசந்தாவும், தயாரிப்பாளர்ஒப்பந்தம்செய்தசீனியர்நடிகையும்ஏமாறக்கூடாதுஎன்பதற்காககதையில்மாற்றம்செய்யப்பட்டது.வசந்தாஒருநாள்மிகவேகமாககாரைச்செலுத்திக்கொண்டுசென்றார்.இதனைஎம்.ஜிஆர்பார்த்துவிட்டார்.வசந்தாவீட்டுக்குச்சென்றதும்சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆரைப் பார்க்கும்படிஅழைப்புவந்தது.கூடவேகாரைசாரதிதான்செலுத்திவரவேண்டும்என்றும்தெரிவிக்கப்பட்டது . மாலையில் சந்தியா ஸ்டூடியோவுக்கு சென்று எம். ஜி.ஆரைச் சந்தித்தார்வசந்தா.இந்தாம்மா உன்னை நம்பி எத்தனையோதயாரிப்பாளர் பணம் போட்டுபடம்எடுத்திருக்கிறார்கள்,சிலர்கடன் வாங்கி படமெடுக்கிறார்கள் . காரிலை நீ இவ்வளவு வேகமாகப் போய் உனக்கு ஏதாவது ஆகினால்அவர்களின் கதி என்ன? நீ கார் ஓட்டுவதானால்50 கி. மீற்றருக்கு மேல்போகக்கூடாதுஎன்று அன்புக் கட்டளையிட்டார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது வசந்தாவின்பெயரும் கலை மாமணிவிருதுக்குதெரிவானது.சிகிச்சைக்காகஎம்.ஜி.ஆர்அமெரிக்காசென்றதால்விருதுவழங்கும் விழாவில்அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று வசந்தாவுக்குத் தெரியவந்தது.அண்ணன் வருவார் என்றால் என் பெயரைச் சேருங்கள். அவர் இல்லைஎன்றால்என்பெயரைவிட்டுவிடுங்கள். அவர் இல்லாத விருது வழங்கும் விழாவில் நான்கலந்து கொள்ளமாட்டேன் என்று ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாகக்கூறினார்வசந்தா.கலைவாணர்அரங்கத்தில்வசந்தாவுக்குகலைமாமணி விருதைக் கொடுத்த எம்.ஜி.ஆர் ஏம்மா நான் இல்லையென்றால் விருதே வேண்டாம் என்றாயாமே? இப்போ சந்தோஷம் தானே எனக் கேட்டார்.
       தமிழகமுதல்வர்கலைஞர்கருணாநிதிக்குதமிழகக்கலையுலகம்கடந்தமாதம்பெருவிழாஎடுத்தது.அந்தவிழாவில்வசந்தாவும்கலந்துகொண்டார்.வசந்தாவைக்கண்டமுதல்வர்வாம்மாதமிழ்ச்செல்வம் என்றுஅழைத்தார்.தமிழ்செல்வம்என்றவார்த்தையைக்கேட்டவசந்தாஆச்சரியப்பட்டார்.முத்தமிழ்க்காவலர்கி.ஆ.பெ.விசுவநாதன்எழுதியதமிழ்ச்செல்வம்என்றநாடகத்தில்வசந்தாநடித்தார்.அந்த நாடகத்தை எம்.ஜி.ஆர்.பெ. விசுவநாதனுடன் கலைஞரும்பார்த்து ரசித்தார். வசந்தாவின் தமிழ் உச்சரிப்பைக் கண்டு வியந்த தி.ஆ.பெ தமிழ்ச்செல்வம் என்ற ட்டத்தைஅவருக்குவழங்கினார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய பட்டத்தைகலைஞர்நினைவுவைத்திருந்ததைக்கண்டுவியந்துநின்றார்வசந்தா.எம்.ஜி.ஆர்.,சிவாஜிஆகியோருக்கும்தங்கையாகநடித்தவசந்தா,ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு , ஸ்ரீதேவி, ராதா, பூர்ணிமாஆகியோருக்கும் அம்மாவாக நடித்தார்.செல்வி தொலைக்காட்சியில் வசந்தா இப்போது நடித்து வருகிறார்.
  ரமணி
மித்திரன்12/11/2006
93
 

Sunday, April 29, 2012

திரைக்குவராதசங்கதி33

கோவைத்தம்பிதயாரித்தஇரண்டாவதுபடம்"இளமைக்காலங்கள்'கதாநாயகன்மோகன்.நாயகிசசிகலா.இயக்கம்மணிவண்ணன்.பயணங்கள்முடிவதில்லைதந்தபெருவெற்றியின்பயனாகஅவரது
இரண்டாவதுபடமும்எதிர்பார்ப்பைஉண்டாக்கியது.கோவைத்தம்பியின்இரண்டாவதுபடமும்200நாட்களைக்கடந்துஓடியது.வெற்றிப்படத்தயாரிப்பாளர்என்றபெயர்கோவைத்தம்பியுடன்ஒட்டிக்கொண்டது.முதலாவது படம் பிரமாண்ட வெற்றி பெறகாரணகர்த்தாவாக இருந்த ஆர். சுந்தரராஜனின்இயக்கத்தில் நான் பாடும் பாடல் என்றபடத்தைத் தயாரித்தார் கோவைத்தம்பி.அப்படத்தின் காட்சிகள்யாவும்கன்னியாகுமரிமாவட்டத்தில்படமாக்கப்பட்டன.சிவகுமார்கதாநாயகனாகவும்அம்பிகாகதாநாயகியாகவும்நடித்தனர்.இசைவழக்கம்போல்இளையராஜாதான்.நான்பாடும்பாடல்படதத்தின் முடிவில் அம்பிகா இறப்பது போலவும் சிவகுமார்பொட்டுவைத்தநெற்றியைநெருப்புக்கட்டையால்அம்பிகாசுடுவதுபோலவும்இரண்டுகிளைமாக்ஸ்காட்சிகளைஇயக்குநர்வைத்திருந்தார். இரண்டுகிளைமாக்ஸ்களில்எதனைத்தெரிவுசெய்வதுஎன்பதில்தயாரிப்பாளரானகோவைத்தம்பியும்இயக்குநரானஆர்.சுந்தரராஜனும்குழம்பினார்கள்.கிளைமாக்ஸ்காட்சிஎதுஎன்பதனைத்தீர்மானிக்கும் முடிவை இளையராஜாவிடம்விடுவதென இருவரும் முடிவு செய்தார்கள்.இளையராஜா தெரிவு செய்த கிளைமாக்ஸேநான் பாடும் பாடல் படத்தில் இடம்பெற்றது.நான் பாடும்பாடல்25 வாரங்கள் ஓடிமதர்லாண்ட்பிக்ஸர்ஸின்பெயரைவெற்றிப்படதயாரிப்புநிறுவனம்என நிலை நிறுத்தியது. அதன் பின்னர் பிஸியான இயக்குநராகமாறிவிட்டார்ஆர்.சுந்தரராஜன்.
       மணிரத்தினத்தின் முதல் படம் இதயக் கோயில். அதனைத் தயாரித்தவர் கோவைத்தம்பி, மோகன், அம்பிகா, ராதாநடித்தஇப்படத்தின்மூலம்தான்கோவைத்தம்பிக்கும்இளையராஜாவுக்கும் பிரச்சினை உண்டானது.அப்படத்தின் கிளைமாக்ஸ்காட்சிக்காகஒருஇலட்சம்ரூபாசெலவில்கல்யாணமண்டபசெட்போடப்பட்டது.அந்தக்காலத்தில்ஒருஇலட்சம்ரூபாவிற்குசெட்போடுவதுமிகவும் அதிசயமானது.ஆனால்அந்தசெட்டில்படப்பிடிப்பைநடத்தமணிரத்தினம்மறுத்துவிட்டார்.விஜயஷேஸ்மகாலில்தான்படப்பிடிப்புநடக்கவேண்டும்என்றுஇயக்குனர்மணிரத்தினம்கூறினார்.புதியஇய‌க்குநரின்பிடிவாதத்தால்கோவைத்தம்பிமிகவும்வருத்தப்பட்டார்.வெற்றிப்படங்கள்பலவற்றைத்தந்ததயாரிப்பாளரைபுதியஇயக்குநர்இப்படிஆட்டுவிக்கிறாரேஎனக்கோபப்பட்டார்.இறுதியில்மணிரத்தினத்தின் விருப்பப்படி படப்பிடிப்பு நடந்தது.இதயக்கோவில்வெளிவரத்தாமதமானதால்திட்டமிட்டதைவிடஅதிகம்செலவானது.படத்தின்பின்னணிஇசைக்காகஇளையராஜாவைஅணுகியபோது,
"நான்கொடுத்தகால்ஷீட்டைஎல்லாம்வீணாக்கிவிட்டுவிட்டுஇப்போதுதொந்தரவுகொடுக்கிறீர்களேமற்றவர்களுக்குகொடுத்தகால்ஷீட்டைஎப்படிமாற்றித்தரமுடியும்என்றுகோபத்துடன்கேட்டார்.கோவைத்தம்பியையையும்இளையராஜாவையும்பிரிக்கவேண்டும்என்றுதிரையுலகைச்சேர்ந்தசிலர்திட்டமிட்டனர்.அவர்களுக்குஇச்சந்தர்ப்பம்வாய்ப்பாகஅமைந்தது.இதயக்கோவில்படத்தின்கிளமாக்ஸ்காட்சிரசிகர்களின்மனதைக்கவர்ந்தது.படம்வெற்றிபெற்றது.புதியஇயக்குநர்என்றாலும்அவரின்திறமையைகோவைத்தம்பிமெச்சினார்.இளையராஜாவின்நட்புமுறிந்தது.அவருக்குபெரியஇழப்புத்தான்.கோவைத்தம்பியின்அடுத்தபடமானஉயிரேஉனக்காக''வில்பிரபலஹிந்திப்படஇசையமைப்பாளரானலட்சுமிகாந்த்பியரிலால்ஒப்பந்தமானார்.மோகன்,நதியாநடித்தஇப்படம்100நாள்ஓடியது.பாடல்கள் வெற்றி பெற்றன.  ஸ்ரீதரின்கல்யாணப்பரிசுபடத்தைப்பலமுறைபார்த்துபரவசப்பட்டவர்கோவைத்தம்பி.அந்தஆதங்கத்தில்ஸ்ரீதரின்இயக்கத்தில்ஒருபடம்தயாரிக்கவிரும்பினார்.ஸ்ரீதரும்ஒப்புக்கொண்டார்.நடிகர்திலகம் அப்பாவாகவும் கமல் மகனாகவும்நடிப்பதாக ஏற்பாடாகி இருந்தது. கமல் பிஸியாக இருந்ததால் தயாரிப்பு வேலைகள்தாமதமானது.இறுதியில்அப்படம்தயாரிக்கமுடியாதநிலைஏற்பட்டது. ஸ்ரீதரரையும்நடிகர் திலகத்தையும் இழந்தது கோவைத்தம்பிக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருந்தது.இளம் இயக்குநர் னோபாலாவிடம்ல்லகதைகதைஒன்றுஇருப்பதாகஅறிந்தகோவைத்ம்பி அவரை அழைத்து கதையைக் கேட்டார். அவருக்கு கதை பிடித்து விட்டது. அவருக்கு கதை பிடித்து விட்டது. இப்படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.
தெலுங்குப்படத்தில்நடிப்பதற்காகஹைதராபாத்சென்றிருந்தநடிகர்திலகத்தைத்தேடிச்சென்றார்கோவைத்தம்பி.கோவைத்தம்பியின்வேண்டுகோளைக்கேட்டநடிகர்திலகத்துக்குகதைபிடித்துவிட்து. நான்நடிப்பது பற்றி அண்ணன் எம்.ஜி.ஆரிடம்சொன்னீர்களா? எனக் கேட்டார் நடிகர் திலகம்.மக்கள் திலகத்தின் அனுமதியுடன்தான்வந்திருப்பதாககோவைத்தம்பிகூறினார்.நடிகர்திலகம்நடித்த "மண்ணுக்குள்வைரம்'75நாட்கள்ஓடியது.நடிகர்திலகத்தைவைத்துப்படம்எடுத்தேன்என்றமனநிறைவுகோவைத்தம்பிக்குஉண்டானது.கோவைத்தம்பியின்படங்கள்தோல்வியைச்சந்தித்தன.இளையராஜாஇல்லாததால்தான்படம்தோல்வியடைகிறதுஎன்றஎண்ணம்அவருக்குஏற்பட்டது.தன்மனைவியையும்மகனையும்இளையராஜாவிடம்தூதுவிட்டார்.இளையராஜாகோவைத்தம்பிமீண்டுமஇணைந்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'சுமாராக ஓடியது. அடுத்த படமான ""செம்பருத்தி'' 200 நாட்களைக் கடந்து ஓடியது. பிரசாந்துடன் ரோஜா இப்படத்தில் அறிமுகமானார்
ரமணி
மித்திரன்29/10/2006
   92

புதுக்கோட்டையை கைப்பற்ற ஜெயலலிதா வியூகம்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலத்தை வெளிக்காட்ட புதுக்கோட்டைத் தொகுதியின் வேட்பாளரை அறிவித்து இடைத் தேர்தலைச் சூடாக்கியுள்ளார் ஜெயலலிதா. புதுக்கோட்டைத் தொகுதியின் சட்ட சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முத்துக்குமரன் கடந்த மாதம் 1 ஆம் திகதி வாகன விபத்தில் மரணமானார். காலியாகவுள்ள புதுக்கோட்øடத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு சில மணி நேரம் முன்பு வேட்பாளரை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார் ஜெயலலிதா.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் சங்கரன் கோவில் நகராட்சித் தலைவரை வேட்பாளராக்கி வெற்றிபெறச் செய்தது @பான்@ற தற்@பாது புதுக்கோட்டையிலும் நகராட்சித் தலைவரை வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.
புதுக்கோட்டைத் தொகுதியில் செல்வாக்குள்ளவரை வேட்பாளராக்கினால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறலாம் என்று கருதுகிறார் ஜெயலலிதா.
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டமான் பி.எஸ்.சி பட்டதாரி. இவரது தகப்பனான விஜய ரகுநாத தொண்டைமான் 1967, 1977, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவராகவும் புதுக்கோட்டை நகராட்சித் தலைவராகவும் கடமையாற்றுகிறார் கார்த்திக் தொண்டமான்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலைக் குறி வைத்து சமூக நலத்திட்டங்கள் பலவற்றைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் அச்சமூக நலத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும். பன்னீர்செல்வம், செங்கோட்டையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய அமைச்சர் பட்டாளம் புதுக்கோட்டையில் முகாமிட்டு இடைத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளது. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றின் பின் நடைபெற்ற சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. மின் கட்டண உயர்வுக்குப் பின்னர் நடைபெறும் புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் நம்பிக்கையில் உள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழக சட்ட சபைத்தேர்தலின்போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தது. கொம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கிய ஜெயலலிதா அதிரடியாக வேட்பாளரை அறிவித்து கொம்யூனிஸ்ட் கட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளார். புதுக்கோட்டைத் தொகுதியைத் தக்க வைக்க முடியாத நிலையில் இடைத்@தர்தலில் @பாட்டியிடுவதில்லை என முடிவு öŒ#துள்ளது கொம்யூனிஸ்ட் கட்சி.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்து மூக்குடைப்பட்டு நிற்கிறது கொம்யூனிஸ்ட் கட்சி. ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட கொம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதியிடம் ஆதரவு கேட்க முடியாத நிலையில் @பாட்டியிலிருந்து வாபஸ் பெற்றது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலின்போது தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிக்கு கொம்யூனிஸ்ட் ஆதரவு வழங்கவில்லை.
ஆகையினால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார் என்பதும், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி @பாட்டியிடாததற்கு காரணம் வைகோவுக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் புதுக்கோட்டையில் செல்வாக்கு இல்லை. ஆகையினால் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இருவரும் அதிக அக்கறை காட்டமாட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடும் பிரதான கட்சிக்கு ஆதரவு வழங்கவும் இவர்கள் முன்வரமாட்டார்கள். தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ள பாரதீய ஜனதா கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்பதை மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டின் பின்னர் அறிவிக்கும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் ஆதரவு வழங்கும். புதுக்கோட்டை சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியண்ணன் அரசு இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர். இடைத் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஆகையினால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் கருதுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருத்தால் ஜெயலலிதாவின் அனல் பறக்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத  நிலையேற்படும்.  ஆகையினால் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டையில் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்திலேயே கொம்யூனிஸ்ட் கட்சிக்கு தாரை வார்த்தது அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம். கொம்யூனிஸ்ட் கட்சியும் சந்தேகத்துடன் தான் தேர்தலைச் சந்தித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/04/12

காவியமா? நெஞ்சில் ஓவியமா?

""காவியமா? நெஞ்சில் ஓவியமா? அதன் ஜீவிதமான? தெய்வீகக் காதல் சின்னமா?''
காற்றினிலே மிதந்து வந்த அந்தப் பழைய பாடல் ராகேஷின் தூக்கத்தைக் கலைத்தது. கட்டிலின் இடதுபுறமாக இறங்கிய ராகேஷ் ஐந்து அடிகள் நடந்ததும் கையை மெதுவாக நீட்டி சுவரைத் தடவி திரைச் சீலையை இழுந்தான்.
திரைச்சீலையால் மறைக்கப்பட்ட அந்தப் பிரமாண்டமான படம் பளிச்செனத் தெரிந்தது. மூன்றடி பின்னே நகர்ந்து இரண்டு கைகளையும் மார்பிலே கூப்பியபடி கண்களைத் திறந்தான் ராகேஷ். காலையில் எழுந்ததும் சுவரில் உள்ளஅந்தப்படத்தை சுமார் பதினைந்து நிமிடங்கள் பார்த்தபின்பே தனது வழமையான பணிகளை அவன் ஆரம்பிப்பான்.
ராகேஷைத் தேடிவந்த அவனது நண்பன் நந்தன் ஜன்னலினூடாக அந்தக் காட்சியைக்கண்டதும் அப்படியே சிலையாக நின்றான். நந்தனின் கண்களில் நிறைந்த நீர் அவனை அறியாது கன்னத்தில் விழுந்தது.
சுவரில் இருந்த சித்திரத்தை வணங்கிய பின் நந்தனைக் கண்ட ராகேஷ் கதவைத் திறந்தான். கண்களைக் துடைத்தபடிராகேஷின் அறைக்குள் நுழைந்த நந்தன் அந்தக் சுவரோவியத்தைப் பார்த்து மானசீகமாக வணங்கினான்.
ராகேஷ் குளியறைக்குள் நுழைந்தான்.
இலங்கையில் மிகக் சிறந்த ஓவியர்களில் ராகேúம் ஒருவன். அவனுடைய ஓவியங் களை விலை கொடுத்து வாங்குவதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் போட்டிபோடு வார்கள்.
ராகேஷின் நண்பன் நந்தனும், ராகேஷும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள்.
கொழும்பிலே வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். வீடொன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் ஓவியம் வரைவதற்காக ராகேஷ் வெளியூர் போகும் போது நந்தனும் அவனுடன் செல்வான்.
இலங்கையின் பிரபலமான சஞ்சிகையில் வெளியாகும் தொடர் கதைக்கு ராகேஷின்ஓவியம் உயிர் கொடுத்துவருகிறது. அந்தத் தொடர் கதையின் நாயகனும், நாயகியும் பேராதனைப் பூங்காவுக்குச்செல்வதாகக் கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
நாயகனும், நாயகியும் சந்திக்கும் இடத்தைப் பார்த்து ஓவியம் வரைவதற்காக ராகேஷ் பேராதனைக்குச் சென்றான்.
நந்தனும் ராகேஷுடன் சென்றான். ராகேஷ் ஓவியம் வரையும் போது நந்தன் பூங்காவைச் சுற்றிப்பார்த்தான். பேராதனை யில் உள்ள ராகேஷின் நண்பன் ஒருவன் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஓவியம் வரைந்ததும் விருந்துக்குச் செல்வதாக இருவரும் தீர்மானித்திருந்தனர்.
ஓவியம் வரைவதில் ராகேஷ் மும்முரமாக இருந்தான். பூங்காவைச் சுற்றிப் பார்த்த நந்தன் தனக்குத்தலைவலிப்பதாகவும், விருந்துக்கு வராது அறையில் ஓய்வெடுக் கப் போவதாகவும் கூறிச்சென்றான்.
நந்தன் போவதைப் பார்த்துக் கொண்டிருந் தான் ராகேஷ்.
உண்மையிலேயே நந்தனுக்குத் தலையிடி இல்லை என்பதும் அவன் வேறு ஒரு ssஇடத்துக்குப் போகிறான் என்பதும் ராகேஷுக்குத் தெரியும். நந்தனைக் திருத்துவதற்கு ராகேஷ் எவ்வளவோ முயற்சி செய்தான். நந்தன் திருந்தக் கூடிய எந்தவிதமானஅறிகுறியும் அவனுக்குத் தெரியவில்லை.
நண்பனின் வீட்டில் விருந்துண்ட ராகேஷ் இரவு ஒன்பது மணிக்கு விடுதிக்குச் சென் றான். அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவன் எதிர்பார்த்தது போன்று நந்தன் இன்னமும் அறைக்குவரவில்லை என நினைத்தான். என்ன செய்வதென ராகேஷ்யோசித்துக்கொண்டிருக்கையில் அறைக்குள் யாரோ நடமாடுவது போன்ற சத்தம் கேட்டது.
ராகேஷ் கதவைதட்டிவிட்டு காத்திருந்தான். கதவைத் திறந்த நந்தன்,ராகேஷைக் கண்டதும் திகைத்து விட்டான். பத்துமணிக்குப் பின்னர் தான் ராகேஷ் வருவான் என்று நந்தன் எதிர்பார்த்திருந் தான். ஒன்பது மணிக்கு ராகேஷ் வருவான் என நந்தன் எதிர்பார்க்கவில்லை. வாசலை மறைத்துக் கொண்டு நந்தன் நின்றான்.
அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற ராகேஷ் அதிர்ச்சியில் உறைந்தான்.
அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் குளியறைக் குள் ஓடி ஒளிந்தாள். அரை குறைஆடையுடன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை ராகேஷ் கண்ட தில்லை. தன் அந்தரங்க லீலையை ராகேஷ் கண்டு விட்டான் என்ற கலகத்தில் செய்வதறியாதுதவித்தான் நந்தன். எதுவும் பேசாது அறைக்கு வெளியே சென்று மாடிப்படி அருகே நின்றான் ராகேஷ். தனக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் ஓசைராகேúக்குக்கேட்டது.
அந்தச் சத்தம் மாடிப் படியில் இறங்கும் என்று எதிர்பார்த்தான் ராகேஷ். ராகேஷுக்குப் பின்னால் நின்ற அந்தக் காலடிச் சத்தம் தொடரவில்லை சுமார் ஒரு நிமிடத்தின் பின் திருப்பிப் பார்த்தான் ராகேஷ். அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் மலங்க மலங்க முழித்தபடி நின்றாள். அந்தப் பெண்ணின் கண்களைப்பார்த்தான் ராகேஷ். அந்தக் கண்களில் ஆயிரம் ஓவியங்கள் தெரிந்தன. கற்பனையில் மிதந்த ராகேஷ் தன்னிலை அடைந்தபோது எதிரே அப்பெண் இல்லை. சற்று தூரத்தில் நந்தன் நின்றான்.
சுதாகரித்துக்கொண்ட ராகேஷ் மாடிப் படியால் விறுவிறு என இறங்கினான்.
ராகேஷின் நடவடிக்கையால் அதிர்ச்சிய டைந்த நந்தன், ராகேஷைத் தொடர்ந்துசென்றான். அந்தப் பெண்ணைத் துரத்திச் சென்ற ராகேஷ் அவளிடம் ஏதோ கூறினான்.
அவள் பலமாக தலையை ஆட்டி மறுத் தாள். கெஞ்சுவது போல் ராகேஷ் ஏதோ கூறினான்.
சில நிமிடங்களில் சம்மதத்துக்கு அறிகுறியாக தலையை மேலும் கீழும்ஆட்டினாள் அவள். இந்தக் காட்சியைத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நந்தன் பதற்றமடைந்தான்.
பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீன மானவன் நந்தன் . பெண்களுக்கு மிகவும்மரியாதை கொடுத்து அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவன் ராகேஷ்.
இப்படிப்பட்ட ராகேஷ் ஒரு விபச்சாரி யிடம் கெஞ்சிக் கதைத்ததை நம்ப முடியாது பார்த்தான் நந்தன். ராகேஷ் முதுகில் தட்டியதும் சுயநினைவு அடைந்த நந்தன். அவனிடம் பலகேள்விகளைக் கேட்டான். அந்தப் பெண்ணுடன் கதைத்த விசயம் ஒன்றையும் ராகேஷ் வெளிப்படுத் தவில்லை. அன்று இரவு வழமைக்கு மாறாக ராகேஷ் நேரத்துடன் படுத்துவிட்டான். தூக்கம் வராது புரண்டுபடுத்த நந்தன், நிம்மதியாக உறங்கும் ராகேஷைப் பார்த்தான்.
கொழும்புக்குச் செல்வதற்காக ராகேஷும், நந்தனும் தமது பொருட்களுடன் தயாராகும் போது அழைப்புமணி அடித்தது. கதவைத் திறந்த நந்தன் சிலையாக நின்றான். அவன் எதிரில் அந்தப் பெண் அவளின் கையில் ‹ட்கேஸ், தோளிலே ஒரு பை.
""நேற்று இரவு உனக்குத் தரவேண்டிய காசைத் தந்துவிட்டேன். இப்போ ஏன்வந்தாய்'' என்று கோபமாகக் கேட்டான் நந்தன். மெல்லிய புன்னகை ஒன்றுஅவளிடமிருந்து பதிலாக வந்தது.
""நான் தான் வரச் சொன்னேன்'' நந்தனின் பின்னால் நின்ற ராகேஷ் உறுதியாகக் கூறினான்.
"உனக்கென்ன பைத்தியமா? "ராகேஷின் மீது சீறிப் பாய்ந்தான் நந்தன்.
இவளைப் பற்றிய சகல விசயங்களும் தெரிந்து கொண்டுதான் வரச் சொன்னேன். இப்போ இவளுக்கு நான் வைத்த பெயர் வதனி. எங்களுடன் கொழும்புக்கு வருகிறாள்.
லேடீஸ் ஹொஸ்டல் ஒன்றில் இவளைச் சேர்க்கப் போகிறேன். என்று நிதானமாகக்கூறினான் ராகேஷ்.
அவளைக் கூட்டிக்கொண்டு போகக் கூடாது என்பதற்கான பல காரணங்களைக் கூறினான் நந்தன். அவை ஒன்றையும் ராகேஷ் ஏற்றுக் கொள்ளவில்லை. வதனியை கொழும்புக்கு கூட்டிச் செல்வதில் உறுதியாக இருந்தான் ராகேஷ். ராகேஷ், நந்தன், வதனிமூவரும் கொழும்பு நோக்கிச் சென்றனர். பிரயாணத்தின்போது வழிநெடுக கலகலப் பாக இருந்தது. நந்தன் அன்று அமைதியாக இருந்தான். எப்பவும் அமைதியாக இருக்கும் ராகேஷ் கலகலப்பாக இருந்தான். ஒவ்வொரு இடத்தையும் அருகே இருந்த வளிடம் விளக்கமாகக் கூறினான். அவன் கூறிய பல விடயங்கள் வதனிக்குப் புதியனவாக இருந்தன.
கொழும்பு பஸ் நிலையத்தில் இறங்கிய நந்தன் வீட்டுக்குச் சென்றான். ராகேஷ், வதனியை ஹொஸ்டலில் சேர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.
ராகேஷ்! வழமையை விட உற்சாகமாக இயங்கினான். ஏதோ கடமைக்காக நந்தனின் அன்றைய பொழுது கழிந்தது. ராகேúடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. ராகேஷ் அந்தப் பெண்ணைக் கொழும்புக்கு கூட்டி வருவதற்கு தனது சபலம்தான் காரணம் என்ற குற்ற உணர்வு நந்தனை வாட்டியது. இரவு முழுவதும் நித்திரையின்றித் தவித்தான். எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக தூங்கினான் ராகேஷ்.
வழக்கத்துக்கு மாறாக அதிகாலை யில் எழுந்தான் ராகேஷ். ராகேஷின் செயல்களைபார்த்தபடி கட்டிலில் படுத்தி ருந்தான் நந்தன். சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்று வந்து அவர்களு டைய வீட்டு வாசலில் நின்றது. ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தாள் வதனி. வதனியைக் கண்டதும் நந்தனின் மனம் பதைபதைத்தது.
இந்த வேளையில் இவள் ஏன் வந்தாள்? என்று அவன் மனம் கேட்டது. வதனி உள்ளே வரமுன்னர் "நான் வெளியே போகிறேன். திரும்பி வரத் தாமதாகும்' எனக்கூறிவிட்டு நந்தனின் பதிலுக்கு காத்திருக்காது வெளியே சென்றான் ராகேஷ்.
தினமும் காலையில் வதனியுடன் செல்லும் ராகேஷ் சில நாட்கள் நள்ளிரவு வீட்டுக்குத் திரும்புவான். இதைப்பற்றி நந்தன் பேச முற்பட்டபோது உரிய பதிலளிக்காது கதையை வேறு திசைக்கு மாற்றுவான் ரா@கஷ். ராகேஷின் சம்மதத்துக்காக அவனது முறைப்பெண் ஊரிலே காத்தி ருக்கிறாள். சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட பெண்னுடன் ராகேஷ் இரவு பகலாக சுற்றித் திரிகிறான். இதனை தினமும் காணும் நந்தன் இவ்வளவுக்கும் காரணம் தான் என்பதால் மனதளவில் கூனிக்குறுகினான்.
ராகேஷின் ஓவியக் கண்காட்சி முடிந்ததும் "ராகேஷின் வீட்டாருக்கு உண்மையைக் கூறிவிடவேண்டும்" என்று முடிவெடுத்தான் நந்தன்.
ராகோஷின் ஓவியக் கண்காட்சியைக் காண்பதற்கு நாட்டின் பல இடங்களிலிருந் தும் ரசிகர்கள் குவிந்தனர். ஓவியத்துறை விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மண்டபத்தை நிறைத்தனர். நந்தன் மனக் கசப்புகளை மறந்து முழுமூச்சுடன் செயற்பட்டான்.
கண்காட்சியைப் பார்ப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்றாள் வதனி. நடமாடும் ஓவியம் போல் இருந்த வதனியை இரண்டாவது முறை பார்க்காதவர்கள் இல்லை. பொன்மானை நோக்கும் சீதை, அரச சபையில் நீதி கேட்கும் கண்ணகி, கண்ணன்மேல் காதல் கொண்ட கோதை, துஷ்யந்தனின் மோதிரத்தைத் தொலைத்து விட்டுப் பதறும் சகுந்தலை, சாஜகானின் காதல் மனைவியாள்மும்தாஜ் ஓவியங்கள் பார்ப்பவரின் மனதை சுண்டி இழுத்தன.
அத்தனை ஓவியங்களுக்கும் மொடலாக வதனி நின்றதை அறிந்த நந்தன்ஆச்சரி யப்பட்டான்.
ராகேúம் வதனியும் அடிக்கடி தனியே சென்றது இப்படங்களை வரைவதற்கே என்பதை அறிந்த நந்தன் மிகுந்த ஆச்சரியப்பட்டான். ராகேஷையும்,வதனியையும் தப்பாக இணைத்து நினைத்ததையிட்டு வருத்தப்பட்டான். ராகேஷின் ஓவியங்களைப் பார்வையிட்ட வர்கள் ஓவியங்களையும் வதனியையும் ஒப்பிட்டு பார்த்து ஆச்சரியப்பட்டனர். அதிகமான ஓவியங்கள் அன்றே விலைப்பட்டன.
கலண்டர் நிறுவனங்கள் ராகேஷுடன் ஒப்பந்தம் செய்தன.
ஓவியக்கண்காட்சி முடிந்து மூன்றாம் நாள் ராகேஷ் திடீரென மயங்கி விழுந்தான். அருகில் உள்ள தனியார் வைத்திய சாலையில் ராகேஷை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்றான் நந்தன். மிக நீண்ட நேரமாக ராகேஷை பரிசோதனை செய்த பின்னர் நந்தனை அழைத்து அவனுக்கும் ராகேஷுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ராகேஷ் குடும்பத்தைப்பற்றியும் விசாரித்தார்கள்.
வைத்திய நிபுணர்கள் கேட்ட கேள்வி களால் ஏதோ ஒரு விபரீதம் நடைபெற்றதைநந்தன் உணர்ந்து கொண்டான்.
ராகேஷின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. இருதயத்தை மாற்ற வேண்டும். உடனடியாக இந்தியா வுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வைத்தியர்கள் கூறிய ஒவ்வொரு வசனமும் நந்தனின் மனதில் சம்மட்டியால் அடித்தது போல் பதிந்தது. ராகேஷுக்கு தனது உடல் நிலைபற்றி நன்கு தெரியும்.
இதனால்தான் திருமணத்தைத் தவிர்த்தான் என்ற உண்மையையும் நந்தன் அறிந்து கொண்டான். ராகேஷின் வைத்தியத்துக்காக உதவி செய்யப் பலரும் முன்வந்தார்கள். ஆனால் இதயத்தைக் கொடுக்க எவருமே இல்லை.
இந்தியாவில் உள்ள பிரபல வைத்திய சாலையில் ராகேஷ் அனுமதிக்கப்பட்டி ருந்தான். விபத்தில் இறப்பவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்துள்ளது. ஆகையால் ராகேஷுக்கு யாராவது இருதயத்தை தானமாகக் கொடுப்பார்கள் என்று வைத்தியர்கள் ராகேஷின் தகப்பனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
ராகேஷ் இந்திய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மூன்றாம் நாள் யாரும்எதிர்பார்க்காத வேளையில் வதனி வைத்திய சாலைக்குச் சென்றாள். ராகேஷûக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுடன் நீண்ட நேரம் தனியாக ஆலோசனை நடத்தினாள். பின்னர் ராகேஷிடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு மீண்டும் வைத்தியர்கள் இருக்கும் அறைக்குச் சென்றாள். தலைமை வைத்திய அதிகாரியுடன் ராகேஷின் வைத்தியர்கள் ஆலோசனை செய்வதாகவும் ஆலோசனை முடிந்த பின் வதனி சந்திக்கலாம் என்று அவளுக்கு கூறப்பட்டது.
தலைமை வைத்திய அதிகாரியிடம் கொடுக்கும்படி ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு அங்கே இருந்து அமைதியாக வெளியேறினாள் வதனி. சுமார் அரைமணி நேரத்தின் பின் வதனியின் கடிதம் தலைமை வைத்திய அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. வதனியின் கடிதத்தை படித்த தலைமை வைத்திய அதிகாரி அலறியபடி ஆசனத்தை விட்டு எழுந்தார். சக வைத்தியர்கள் செய்வதிறியாது குழம்பினர்.
அந்த வைத்தியசாலைக்கு அருகே உள்ள ஹோட்டலின் 30ஆவது மாடியிலிருந்து ஒருபெண் குதித்து தற்கொலை செய்ததாக அறிந்த வைத்திய நிபுனர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். இரத்த வெள்ளத்தில் வதனி சடலமாகக்கிடந்தாள்.
பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்ட தலைமை வைத்தியர் வதனியைப் பற்றிக் கூறினார்.
சட்டப்படி சகலதும் மளமளவென நடைபெற்றன. வதனியின் விருப்பப்படி அவளுடைய இதயம் ராகேஷின் உடலில் பொருத்தப்பட்டது. ராகேஷ் உயிர் பிழைத்தசந்தோசத்தைக் கொண்டாட முடியாது வதனியின் தியாகம் ராகேஷின் குடும்பாத் தாரை வாட்டியது.
குளியலறையில் இருந்து வெளியே வந்த ராகேஷ் வதனியின் படத்துக்கு முன்னால்கண்களை மூடிக் கொண்டு மானசீகமாக வணங்கினான்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 29/04/12


Friday, April 27, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 30

குழந்தைக்கு ஆசைப்பட்டவள் இன்னொருவருடன் படுக்கையைப் பகிர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்த ஒருவளின் கதைதான் பூட்டாத பூட்டுகள். ஆண் எத்தனை பெண்களுடனும் தொடர்பு கொள்ளலாம். பெண் என்பவள் கணவனைத் தவிர வேறு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது என்ற யதார்த்தத்தை உடைத்தெறிந்த படம் தான் 1980ஆம் ஆண்டு வெளியான பூட்டாத பூட்டுகள்.
காட்டுப்புத்தூர் என்ற அக்கிராமத்தில் தேநீர்க்கடை நடத்திவரும் தம்பதி ஜெயன், சாருலதா மிக நீண்ட காலமாக இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஜெயன் பல பெண்களுடன் தொடர்புகொண்டு உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தான். குழந்தை இல்லாத ஏக்கத்தில் தினமும் வாழ்ந்தாள் சாருலதா. அந்த ஊரில் வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்கள் தேநீர் கடையில் அறிமுகமாகி ஜெயனின் வீட்டிற்கு சாப்பிடச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவன் பெண் பித்தன்.
குழந்தை இல்லாது தவிக்கும் சாருலதாவைத் தன் வலையில் வீழ்த்த முயற்சிக்கிறான். தான் தாயாக வேண்டும் என்ற ஆசையில் பெண் பித்தனின் வலையில் வீழ்கிறாள் சாருலதா. தனக்கொரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகப் பெண் பித்தனுடன் சோரம் போகிறாள் சாருலதா. சாருலதாவுக்கும் பெண் பித்தனுக்கும் இடையிலான திருட்டு உறவு ஊருக்குத் தெரிகிறது. பல பெண்களுடன் தன் மனைவி படுக்கையைப் பகிர்ந்ததை ஏற்றுக்கொள்ளாது அவளை வீட்டை விட்டு விரட்டுகிறான்.
கணவனால் விரட்டப்பட்ட சாருலதா பெண் பித்தனின் வீட்டைத் தேடிப்போகிறாள். சாருலதாவிடம் தன் காமப்பசியைத் தீர்த்துக் கொண்டவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். வேறு வழியின்றி கூலி வேலை செய்கிறாள் சாருலதா. சாருலதாவை விட்டுப் பிரிந்த ஜெயன் நோயாளியாகி படுக்கையில் விழுகிறான். ஜெயன் நோயாளியானதை அறிந்த சாருலதா அவனைத் தேடிச் செல்கிறாள். தன் தவறை உணர்ந்த ஜெயன் சாருலதாவை மன்னித்தான்.
குழந்தை இல்லாத ஜெயனின் சொத்தை அபகரிக்க அவனது தம்பி பஞ்சாயத்தைக் கூட்டி முயற்சிக்கிறான். ஜெயன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறான். பஞ்சாயத்தின் தீர்ப்பின்படி ஜெயனையும் சாருலதாவையும் ஊர் ஒதுக்கி வைக்கிறது. தன் மனைவி இன்னொருவனின் குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரிந்தும் வேறு ஊருக்குச் சென்று சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறான் ஜெயன்.
மலையாளப் பட உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயன் கதாநாயகனாக நடித்த ஒரேயொரு தமிழ்ப்படம் பூட்டாத பூட்டுகள். இப்படம் வெளியான பின் ஹெலிகொப்டர் விபத்தில் ஜெயன் இறந்து விட்டான். நடன இயக்குனர் அறிமுகமானார். பஞ்சு அருணாசலத்தின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
பிரபல எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற குறுநாவலையே மகேந்திரன் இயக்கினார்.
ரமணி
மித்திரன்29/04/12

Thursday, April 26, 2012

திரைக்குவராதசங்கதி32







நல்லதிரைப்படங்களைதயாரித்ததில்கோவைத்தம்பியின்மதர்லாண்ட்பிக்ஸர்ஸம்ஒன்று.பாடசாலையில்படித்துக்கொண்டிருந்தபோதுஎம்.ஜி.ஆரின்மலைக்கள்ளன்படம்வெளியானது.அன்றிலிருந்துஎம்.ஜி.ஆரின்ப‌ரமரசிகராகிவிட்டார்கோவைத்தம்பி.கோவைத்தம்பிபடித்தகல்லுரியில்ஒருநாள்எம்.ஜி.ஆர்சென்றுஉரையாற்றினார்.அன்றிலிருந்துஎம்.ஜி.ஆரின்மீதுபைத்தியமாகிவிட்டார்கோவைத்தம்பி.பேரறிஞர்அண்ணா,கலைஞர்கருணாநிதிபேராசிரியர்அன்பழகன்,சொல்லின்செல்வர்,.வி.கே.சம்பத்,நாவலர்நெடுஞ்செழியன்,நாஞ்சில்மனோகரன்ஆகியோர்எங்குஉரையாற்றினாலும்அங்குமுதல்ஆளாகச்சென்றுவிடுவார்கோவைத்தம்பி.திராவிடமுன்னேற்றக்கழகத்திலிருந்துஎம்.ஜி.ஆர்.விலக்கப்பட்டபோதுஎம்.ஜி.ஆருடன்வெளியேறிஅவர்ஆரம்பித்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக்க‌ழகத்தில்இணைந்தார்.எம்.ஜி.ஆரின்தயவினால்தமிழகசட்டமன்றஉறுப்பினரானார்.அரசியல்வாதியானகோவைத்தம்பிசினிமாவுக்குள்கால்பதிக்கதுண்டியவர்இயக்குநர்ஆர்.சுந்தரராஜன்.சனிமாமூலம்ஆட்சியைப்பிடித்தஎம்.ஜி.ஆர்.ஆட்சிபீடமேறியதும்நடிக்கமுடியாதநிலைஏற்பட்டது.முழுநேரஅரசியல்வாதியானகோவைத்தம்பிக்குசினிமாஆசையைஊட்டியவர்ஆர்.சுந்தரராஜன்.நாங்கள்ஒருகதையைவைததிருக்கிறோம்.அதனை நீங்கள் சினிமாப்படமாகத்தயாரித்தால்நன்றாக இருக்கும் என்று ஆர்.சுந்தரராஜனும், அவரதுஉதவியாளரான சிறுமுனகரவியும் கூறினார்கள். பொதுவாழ்க்கைக்குவந்ததலைவர்எம்.ஜி.ஆர்.சினிமாவைத்துறந்துவிட்டார்.பொதுவாழ்க்கையின்மூலம்பிரபலமானநான்சினிமாதயாரிக்கலாமாஎன்றசந்தேகம்எழுந்தது.அரசியலிலும்,சினிமாவிலும்அகலக்கால்பதித்தஅன்றையஅமைச்சரின்அரங்கண்ணலிடம்ஆலோசனைகேட்டார்கோவைத்தம்பி.அரங்கண்ணல்பச்சைக்கொடிகாட்டினார்.அரங்கண்ணலிடமேகதையைக்கூறும்படியும்அவருக்குக்கதைபிடிததிருந்தால்படத்தைத்தான்தயாரிப்பதாகவும்கே.சுந்தரராஜனிடம்கூறினார்கோவைத்தம்பிபடத்தைத்தான்தயாரிப்பதாகவும்கே.சுந்தரராஜனிடம்கூறினார்கோவைத்தம்பி.
அரங்கண்ணலுக்குகதைபிடத்துவிட்டது.அதன்பின்னர்படத்தைத்தயாரிக்கமுடிவுசெய்துவிட்டார்கோவைத்தம்பி.பயணங்கள்முடிவதில்லைஎன்றுபடத்துக்குப்பெயர்வைக்கப்பட்டது.படத்தின்இசைமிகமுக்கியமானதுஆகையினால்இசைஞானிஇசைஅமைத்தால்சிறப்பாகஇருக்கும்எனநினைத்தகோவைத்தம்பிஇசைஞானியைஅணுகினார்.கதைபிடித்தால்இசையமைப்பதாகக்கூறினார்இசைஞானி.இசைஞானிக்குகதகூறஆர்.சுந்தரராஜன்தயாரானார்.எத்தனைமணித்தியாலயத்தில்சுருக்கமாககதையைக்கூறமுடியும்எனஇசைஞானிகேட்டதற்குஅரைமணிநேரம்போதும்என்றார்ஆர்.சுந்தரராஜன்.கதையிலேலயித்தஇசைஞானிக்குநேரம்போனதேதெரியவில்லை.இரண்டுமணித்தியாலயம்கதையைக்கேட்டபின்னர்பயணங்கள்முடிவதில்லைஎன்றபடத்துக்குஇசையமைக்கஒப்புதல்வழங்கினார்இசைஞானிஇளைய‌ராஜா.12மணித்தியாலயத்தில்30ரியூன்களைப்போட்டுக்கொடுத்தார்இசைஞானி.காட்சிக்குத்தேவையானதைஎடுத்துக்கொள்ளுங்கள்னஇசைஞானிகூறகாட்சிகளைவிளக்குகிறேன்டிய10ரியூன்களைநீங்க‌ளேதெரிவுசெய்யுங்கள்என்ஆர்.சுந்தரராஜன்கூறினார்.
பயணங்கள்முடிவதில்லைவெற்றிக்குஇசையும்முக்கியகாரணம்என்பதுமறுக்கமுடியாதஉண்மை.1982ஆம்ஆண்டு13இலட்சம்ரூபாவில்நானகுமாதங்களில்தயாரிக்கப்பட்டபடம்பயணங்கள்முடிவதில்ல.புதியநடிகர்களைவைத்தேபடத்தைத்தயாரிக்கவிரும்பினார்கோவைத்தம்பி.அவர்அரசியல்வாதிஎன்பதாலும்இயக்குநர்புதியவர்என்பதாலும்புதியவர்கள்எவரும்முன்வரவில்லை.நெஞ்சத்தைக்கிள்ளாதேபடத்தில்நடித்தமோகனின்தோற்றமும்நடிப்பும்கோவைத்தம்பிக்குபிடித்துவிட்டது.மஞ்சவிரிச்சபூக்கள்எனறமலையாளப்படத்தில்நடித்தபூர்ணிமாவைகதாநாயகியாக்கினார்.தனதுமுதலாவதுபடத்தைதலைவர்பார்க்கவேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.அரங்கண்ணலின்ஆண்டாள்பிரிவிய10தியேட்டரில்மக்கள்திலகத்துக்காகவிஷேடகாட்சிநடை5பற்றது.மனைவிஜானகியுடன்படம்பார்த்தமக்கள்திலகம்படம்முடிந்ததும்எதுவும்பேசாதுகாரில்ஏறினார்.தலைவரின்நம்பிக்கையைபெறுவதற்காககாததிருந்தகோவைத்தம்பிநொறுங்கிப்போனார்.தலைவருக்குபடம்பிடிக்கவில்லைஎன்றுஅருகில்நின்றவர்கள்கூறினார்கள்.சிறிதுதுரம்சென்றதும்கார்நின்றது.பாதுகாப்புஅதிகாரிஇறங்கிவந்துகோவைதம்பியைதலைவர்அழைப்பதாகக்கூறினார்.இந்தப்படத்தின்மூலம்இன்னும்ஒருவாரத்தில்புகழின்உச்சிக்குப்போய்விடுவாய்.படம்சிறப்பாகஉள்ளது.புகழைக்காப்பாற்றிக்கொள்வதுஉனதுபொறுப்புஎனக்கூறினார்.கோவைத்தம்பியின்மனம்அதன்பின்னர்தான்அமைதியானது.ஒரேததின்மூலம்கோவைத்தம்பிபுகழின்உச்சிக்குப்போய்விட்டார்.படத்தின்கதாசிரியரும்இயக்குநருமானஆர்.சுந்தரராஜனுக்கும் புகழ் சேரத் தொடங்கியது. மோகன், பூர்ணிமா ஆகியோரும் பாத்திரத்தைஉணர்ந்து நடித்திருந்தனர்.திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர்களிலும் 100 நாளைத் தாண்டியது. முக்கிய ந‌கரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழாகொண்டாடியது. சென்னை லிட்டில் ஆனந்த்தியேட்டரில் 425 நாட்கள் ஓடி சாதனைபடைத்தது.

மித்திரன்
22/10/2006
91









Saturday, April 21, 2012

புதுக்@காட்டை இடைத்@தர்தலில்ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்?

கோட்டையில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதற்கு புதுக்கோட்டை இடைத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்தில் இரண்டு இடைத் தேர்தல்களில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி தான் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போன்று இவ்வளவு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகளும் கட்டுப் பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு வெற்றியை அல்லது அதற்கு அதிகமான வெற்றியை புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதா குறியாக உள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் வீதி விபத்தில் அகால மரணமானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்துக்குமரன். முத்துக்குமரன் மரணமான துயரத்தில் இருந்து புதுக்÷காட்டை மக்கள் விடுபட முன்னரே இடைத் தேர்தலுக்கான பிரசார வேலையை ஆரம்பித்து விட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. புதுக்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடுவது யார் என்பதில் குழப்ப நிலை உள்ளது.
ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காக சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கிய விஜயகாந்த் மூக்குடைந்தார். புதுக்கோட்டைத் தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்காக ஒதுக்கினார். ஜெயலலிதா புதுக்கோட்டைத் தொகுதியில் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் வெற்றி பெற்று கட்சிக்குப் பெருமை சேர்த்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் முன்னரே கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்த ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தலின்போது அத்தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்கமாட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கூட்டணி முடிந்து விட்டது என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி தமிழக சட்ட மன்றத்தில் ஒரு ஆசனத்தை நிரந்தரமாக இழந்துள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர வேறு கட்சிகள் எவையும் அதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை. விஜயகாந்தை நம்பித்தான் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட்டன.
விஜயகாந்துக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தில் விரிசல் விழுந்துள்ளது. ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது விஜயகாந்தின் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து இடதுசாரிகள் வேட்பாளர்களை நிறுத்தியதனால் புதுக்கோட்டையில் கொம்யூனிஸ் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் சாத்தியக் கூறு குறைவு.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கிய இடதுசாரிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கமாட்டாது. இடதுசாரிகளின் முதலாவது அரசியல் எதிரி காங்கிரஸ். ஆகையினால் காங்கிரஸும் இடதுசாரிகளை கைவிட்டுவிடும்.
கருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் கொம் யூனிட் கட்சி வெற்றி பெற முடியாது. ஆகையினால் இடைத் தேர்தல் அறிவிப் புக்கு முன்னரே கொம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி உறுதியாகியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெரியண்ண அரசு போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக அரசின் அசுர பலத்தின் எதிரில் காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து வெற்றி பெறுவது முடியாத காரியம். இக் கட்சிகளுடன் விஜயகாந்தும் இணைந்தால் ஜெயலலிதாவைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாம்.
புதுக்கோட்டைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்தால் விஜயகாந்தின் ஆதரவு எளிதாகக் கிடைக்கும். தனது பலத்தை ஜெயலலிதாவுக்கு வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் விஜயகாந்துக்கும் கிடைக்கும். இந்திய நாடாளுமன்றக் கூட்டணி முன்னோடியாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் அமையும் சாத்தியக் கூறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
கருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு புதிய கூட்டணி அமைத்தால் ஜெயலலிதா சற்று திணர @வண்டிய நிலை ஏற்படும். விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் ஏற்கனவே ஆர்வம் காட்டினார்கள். புதுக்கோட்டை இடைத் தேர்தல் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதா அல்லது தொடர்ந்தும் அவர் வெற்றி பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளன.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு22/04/12