Sunday, January 18, 2015

அவுஸ்திரேலியாவுக்கு இந்தியா, தென்ஆப்பிரிக்கா சவாலாக இருக்கும் இயன்சப்பல்




அவுஸ்திரேலிய முன்னாள் கப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான  இயன்சப்பல் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உலக  கிண்ண   போட்டியில் அவுதிரேலியாவுக்கு இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

சொந்த மண்ணில் விளையாடுவதால் அவுஸ்திரேலியா எல்லா வகையிலும் மேன்மையானதாக இருக்கிறது. ஆனால் இந்தியா பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து வகையிலும் சிறந்தது. இதனால் இந்த இரு அணிகளும் அவுஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக விளங்கும்.

மேலும் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து உள்ளது. அந்த அணியின் கேப்டன் மேக்குல்லம் ஆக்ரோஷம் நிறைந்தவர்.

உலக கோப்பை போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி தேர்வு சில கேள்விகளை எழுப்பி உள்ளது. மிகப் பெரிய போட்டிக்கு எலக்ஸ் பின்னரை தேர்வு செய்யாதது தவறான முடிவாகும். சுமித்தை துணை கேப்டனாக நியமிக்காததும் சரியான முடிவு அல்ல. காலக் கெடுவுக்குள் கிளார்க் உடல் தகுதி பெறுவது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து முன்னாள் பிரபல வீரர் ரிச்சர்டு ஹேட்லி கூறும்போது, உலக கோப்பையில் விளையாட இருக்கும் நியூசிலாந்து நல்ல நிலையில் உள்ளது என்றார்.

உலக கோப்பை போட்டியை 23 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தும் ஆஸ்திரேலியா 4 தடவை (1986, 1999, 2003, 2007) சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. நியூசிலாந்து இதுவரை இறுதிப் போட்டி வரை நுழைந்தது கிடையாது.

உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்றவர் தெண்டுல்கர். அவர் 9 முறை மேன்ஆப் தி மேட்ச் விருதை பெற்றுள்ளார்.

78 வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த விருதை பெற்றுள்ளனர். 7–வது வீரர் அடித்த அதிக ரன் 77 ரன் ஆகும். 1983–ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சதீத் மெக்பூர் இலங்கைக்கு எதிராக இந்த ரன்னை எடுத்தார்.

உலக கோப்பை போட்டியில் அதிக எக்ஸ்ட்ராக்களை கொடுத்த அணி ஸ்காட்லாந்து ஆகும். 1999–ம் ஆண்டு உலக கோப்பையில் அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிராக 59 ரன்களை எக்ஸ்ட்ரா மூலம் கொடுத்தது.

உலக கோப்பை போட்டி 1975–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. ஆனால் அதற்கு 2 வருடங்களுக்கு முன்பே 1973–ல் பெண்கள் உலக கோப்பை போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து வென்றது.

உலககிண்ணப் போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் ட்ராவிட்

11-வது உலக கிண்ண  கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் அடுத்த மாதம் (பெப்ரவரி) 14ஆம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டியில் சமீபத்தில் செய்யப்பட்ட விதிமுறை மாற்றங்கள் உலக கிண்ணப் போட்டியில் முதல் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் உலக கிண்ணப்  போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கப்டன் ட்ராவிட் இணைய தளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 

புதிய விதிமுறையின் படி இன்னிங்சின் எல்லா ஓவர்களிலும் கண்டிப்பாக 5 பீல்டர்கள் 30 அடி வட்டத்துக்குள் நிற்க வேண்டும். முதல் 10 ஓவர்களில் 2 பீல்டர்கள் மட்டுமே 30 அடி உள்வட்டத்திற்கு வெளியில் நிற்க முடியும். 40 ஓவர்களுக்கு முன்பு பேட்டிங் அணி எடுக்கும் பவர்பிளேயின் போது 3 பீல்டர்கள் தான் 30 அடி உள்வட்டத்திற்கு வெளியில் நிற்கலாம். 

இதனால் ஆட்டவியூகத்தை அமைப்பது எல்லா அணிக்கும் சவாலானதாக இருக்கும். ஒரு இன்னிங்சில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவதும், ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருப்பதும் ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பு நிறைந்ததாக மாற்றும். இது கேப்டன்களுக்கு சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

5 பீல்டர்களை உள்வட்டத்துக்குள் நிறுத்தி விட்டு பகுதி நேர பவுலரை பயன்படுத்துவது கடினமான காரியமாகும். இதனால் 5 சிறப்பு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்த தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தாவிட்டால் அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை வெற்றி இலக்காக எதிர்கொள்ள வேண்டியது வரும். இந்த போட்டி நீண்ட காலம் நடப்பதால் பிட்ச்சின் தன்மை மாறக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் அனுகூலம் கிடைக்கும். 

Saturday, January 17, 2015

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: யூனுஸ்கான் சபதம்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு  படைக்கப்போவதாக பாகிஸ்தான் அணியின் யூனுஸ்கான் தெரிவித்தார்.

இந்திய பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவது வழமை. இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனையாகிவிடும். பல இலட்சக்கணக்கான  ரசிகர்கள் தொலைக்காட்சியில் போட்டியை பார்ப்பார்கள்.

உலகக்கிண்ண தொடரில் பெப்ரவரி 15ஆம் திகதி அடிலெய்டில் இடம்பெறும் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்கின்றன.
இப்போட்டி தொடர்பாக யூனுஸ்கான் தெரிவிக்கையில்,

பெப்ரவரி மாதம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி கொண்டதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வகையில் இந்தியாவை வீழ்த்துவோம்.

தற்போதைய சூழ்நிலையில் பாக்கிஸ்தான் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படும் நேரத்தில் அடிலெய்டில் நடைபெறும் உலகக்கிண்ண  போட்டியில் இந்தியாவை வீழ்த்த முடியும்.

அண்மையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் நான் ஆடியபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதே ஆச்சரியம் இந்த உலக்கிண்ணப் போட்டியிலும் ரசிகர்களிடையே எழும். நல்ல போர்மிலுள்ள வீரர்கள் நிறைய பேர் எங்கள் அணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் திறமையாகவும் பொறுப்பாகவும் விளையாடினால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்திவிடலாம்.
ஆனால், இந்த முறை யார் சம்பியனாவார்கள் என்று  குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனெனில் சமீப காலங்களாக ஒருநாள் போட்டிகளின் நிலை மாறிவிட்டன. எனவே இந்தமுறை யார் வேண்டுமானாலும் சம்பியனாக முடியும்.

விதிமுறைகள் மாறியிருப்பது பலம்வாய்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கிறது. நீங்கள் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை கூட நினைக்கலாம். அவை இரண்டுமே இந்த போட்டியை நடத்தும் நாடுகள்.

இதுதவிர, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகளை எதிர்பார்க்கலாம். ஆனால், அவற்றைகூட சாதகமாக சொல்ல முடியாது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி இப்போது நான் சிந்திக்கவில்லை. நான் இன்னும் விளையாடுவதை ரசிக்கின்றேன்.

என்னுடைய வாழ்க்கையில் இன்னும் சிறந்த காலங்கள் இருக்கிறது. சர்வதேச போட்டியில் சாதனை படைக்கும் வாய்ப்பை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஓய்வு பெறுவது எனது தனிப்பட்ட முடிவு என்றார்.
 

Friday, January 16, 2015

லிங்கா லாப நஷ்டக்கணக்கு

ரஜினியின் படம் என்றால் விநியோகஸ்தர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ரஜினியின் பெயரைச்சொன்னாலே லாபம்தான். ஆனால் அண்மையில் ரஜினியின் படங்கள் சொல்லும்படியான லாபத்தைக்கொடுக்கவில்லை. கோ ச்சடையான் நஷ்டம் என்பதை ரஜினியே ஒப்புக்கொண்டார். லிங்கா லாபத்தைக்கொடுக்கவில்லைஎன்று விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
திரைப்படங்களின் வெற்றியை கொண்டாடும் விதிமுறை இப்போது மாறிவிட்டது. வெள்ளிவிழா,   என்பது எட்டாக்கனவாக உள்ளது. 100 நாள் ஓடிவிட்டால் அது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. டீசரை அதிகம்பேர் பார்த்தால் படம் வெற்றியடைந்ததுபோல் விளம்பரம் செய்யப்படுகிறது. பாடல் வெளியிடுவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. தயாரிக்கப்பட்ட படம் மிகப்பெரிய  வெற்றியடைந்துவிட்டது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.  அந்த மாயைமறைவதற்குமுன் அதிக  லாபத்துடன் விற்கப்படுகிறது. இறுதியில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் தலையில் கையை வைக்கும் நிலை ஏற்படுகிறது.  
இந்தியாவில் 600 தியேட்டர்கள், வெளி நாட்டில்  1000 தியேட்டர்கள்  என கணக்கு காட்டுவார்கள் இறுதியில் நஷ்டம் என்று போராட்டம் நடத்துவார்கள். முதல் முன்று நாட்கள் கூட்டம் அலைமோதும். பாலாபிஷேகம்,கற்பூர ஆராதனை  போன்ற கேலிக்கூத்துகளும் அரங்கேறும்.
லிங்கா படத்தால் தமக்கு நஷ்டம் என தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உட்பல பலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் செய்தனர்.லிங்காவால் நஷ்டம் இல்லையென்று வேந்தர் மூவீஸ்  சிவா   கூறியுள்ளார். இதனால் ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.  கோச்சடையான் பட விவகாரத்தால் லதாவின் சொத்து வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் படத்துக்கு  மட்டுமல்லாது  ஏனைய நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும் இதே நிலைதான். நஷ்டக்கண‌க்கு காட்டி  நஷ்ட ஈட்டுக்காக விநியோகஸ்தர்கள் கையை நீட்டுவார்கள்.

கையை கடிக்காத வகையில் முதலீடுசெய்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்காது. நட்சத்திர நடிகர்கள் தமது சம்பளத்தை  பாதியாக குறைத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

Thursday, January 15, 2015

பலோன் டிஓ விருது வென்ற ரொனால்டோ


ரொனால்டோ, மெஸி, மனுவல் நொயர் ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர். ரொனால்டோவுக்கும் மெஸிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. உலகக்கிண்ண இறுதிப்போட்டி வரை தனது அணியை அழைத்துச் சென்றவர் ஆர்ஜென்டீனா அணியின் மெஸி. ரொனால்டோவுக்கும் மெஸிக்குமிடையேயான போட்டியில் ரொனால்டோ வெற்றி பெற்றார். பலோன் டிஓ விருதை 2008ஆம் ஆண்டு ரொனால்டோ பெற்றார். 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மெஸி பெற்றார். 2013ஆம் ஆண்டு மீண்டும் ரொனால்டோ விருதை தட்டிச்சென்றார். தொடர்ந்து. இந்த ஆண்டும் விருதை தக்க வைத்துக்கொண்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக ரொனால்டோவும் மெஸியும் இந்த விருதை பங்கு போட்டு வருகின்றனர். ரொனால்டோ, நாட்டுக்காகவும் கழகத்துக்காகவும் 61 கோல்கள் அடித்துள்ளார். சம்பியன் லீக், கோபாகப், லாலிகா ஆகிய போட்டிகளில் 9 கோல்கள் அடித்துள்ளார். டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலையமைப்புகள் மூலம் 142 மில்லியன் விசிறிகள் இவரை பின்தொடர்கின்றனர். சிறந்த வீராங்கனைக்கான விருதை ஜெர்மனியின் நாடின் கெப்லர் தட்டிச்சென்றார். ஆண்டின் சிறந்த கோல் அடித்த வீரருக்கான விருதை கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வென்றார். சிறந்த பயிற்சியாளர் விருதை உலக கிண்ண சம்பியனான ஜெர்மனி அணியின் ஜோச்சிம் லோவ் கைப்பற்றினார். 


பிபா– 2014 உலக லெவன் அணி கோல்கீப்பர் மானுவல் நொயர் (பேயர்ன் முனிக் கிளப், ஜேர்மனி) தற்காப்பு வீரர்கள் - செர்ஜியோ ரமோஸ் (ரியல் மாட்ரிட்,, ஸ்பெயின்), டேவிட் லூயிஸ் (செல்சி, பாரிஸ் செயின்ட், பிரேசில்) தியாகோ சில்வா (பாரிஸ் செயின்ட், பிரேஸில்), பிலிப் லாம (பேயர்ன் முனிக்,ஜெர்மனி). மத்திய கள வீரர்கள் - இனியஸ்டா (பார்சிலோனா, ஸ்பெயின்), ஏஞ்சல் டி மரியா (ரியல் மாட்ரிட், மான்செஸ்டர், அர்ஜென்டினா), டோனி குரூஸ் (பேயர்ன் முனிக், ரியல் மாட்ரிட், ஜேர்மனி) முன்கள வீரர்கள் - அர்ஜென் ராபென (பேயர்ன் முனிக், நெதர்லாந்து), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட், போர்ச்சுகல்), மெஸ்சி (பார்சிலோனா, அர்ஜென்டினா).  ரியல் ஹீரோ கடந்த 2014இல் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி முதல் சுற்றுடன் நடையைக்கட்டியது. இதில், ரொனால்டோ ஒரு கோல் மட்டுமே அடித்தார். அதேநேரம், தான் விளையாடிய ரியல் மாட்ரிட் கிளப் அணியின் ஹீரோவாக அவர் ஜொலித்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில், ரியல் மாட்ரிட் அணி 10ஆவது முறையாக கோப்பை வெல்ல கைகொடுத்தார். தவிர, கடந்த ஆண்டில் நடந்த 'சூப்பர் கோப்பை' கிளப் அணிகளுக்கான உலக கோப்பை போன்றவற்றில் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். 
தமிழ்மிரர்

Tuesday, January 13, 2015

பெடரர் 1000


ரென்னிஸ் உலகின் சக்கரவர்த்தியான ரொஜர் பெடரர் 1000 ஆவது போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஏரிபி ரென்னிஸ் போட்டியில் விளையாடிய ரொஜர் பெடரர் தன்னை எதிர்த்து விளையாடிய மிலோஸ் ரொனிக்கை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப் படைத்துள்ளார்.

ஜிம்மி கோனோஸ் 1253 போட்டிகளிலும், இவான்லென்டி 1071 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 1000 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரனாக பெடரரின் பெயர் பதியப்பட்டுள்ளது. ஏடிபி போட்டியில் முதன் முதலாக சம்பியனாகியுமுள்ளார்.

பால்மணம் மாறாத பாலகனாகத் தோற்றமளித்த பெடரர் 1998 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் முதலாவது வெற்றியைப் பெற்றார்.

21 வயதில் 100 ஆவது வெற்றியைப் பெற்றார். எதிராளியைக் கலங்கடிக்கும் உத்தி அவருக்கு பெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. 17 கிராண்ட்ஸ்லாம் விருதுகளின் சொந்தக்காரனான பெடரர் தன்னை எதிர்த்து விளையாடிய அனைவரையும் தோல்வியடையச் செய்தார்.

பெடரரை எதிர்த்து விளையாடுபவர்கள் கொஞ்சம் அசந்தால் தோல்வியடைவது நிச்சயம். 2003 - 2004 ஆண்டு தோல்வியடையாது 36 போட்டிகளில் வெற்றிபெற்றார்.

1000 போட்டிகளில் 737 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 706 போட்டிகளில் வெற்றிபெற்று நடால் இரண்டாவது இடத்தில் உள்ளார். 125 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். 83 போட்டிகளில் சம்பியனானார்.

அன்டிமுரேயை அதிகபட்சமாக 21 முறை தோல்வியடையச் செய்துள்ளார். அடுத்த இடத்தில் இவானோவிச் உள்ளார். இவர் 19 முறை தோல்வியடைந்துள்ளார். 22 போட்டிகளில் ஐந்து செற்களில் விளையாடி வெற்றிபெற்றார். 737 முறை நேர் செற்களில் வெற்றி பெற்றார்.

2007 ஆம் ஆண்டு டேவிட் பெரரை வீழ்த்தி 500 ஆவது வெற்றியைப்பெற்றார். 210 அமெரிக்க வீர்ரர்களையும், 111 பிரான்ஸ் வீரர்களையும் தோல்வியடையச்செய்தார். புற்தரை மைதானத்தில் 131 வெற்றியைப் பெற்றுள்ளார்.

Sunday, January 11, 2015

ஜனநாயகத்தை நிலைநாட்டிய வாக்காளர்கள்

  இலங்கை அரசியல் களத்தில்  அசைக்க முடியாத தலைவராக மிளிர்ந்த மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித்தேர்தலில் எதிர்பாரதவிதமாகதோற்ற்கடிகப்பட்டார். மஹிந்தவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் திராணி யாருக்கும் இல்லை  என்றநிலையை எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று மாற்றிக்காட்டி உள்ளன. 2005 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவிடமிருந்து ஜனாதிபதிப்பதவியைப் பொறுப்பேற்றபின் அவரின் வெற்றிக்கொடி உயரத்தில் பறக்கத்தொடங்கியது.

மஹிந்த ராஜபக் ஷ்வின்  வெற்றியிலும் தோல்வியிலும் வடக்கு கிழக்கு மக்களின் பங்களிப்பு மிக அதிகம் 2005 ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிக்காது மகிநதவை ஜனாதிபதியாக்கிய தமிழர்கள் 2015 ஆம் ஆண்டு வாக்களித்து அவரைத்தோல்வியடையச்செய்தார்கள்.மகிந்தவை எதிர்த்து ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதுவித செல்வாக்கும் இல்லை.மஹிந்தவுக்கு எதிரான வாக்குகளே மைத்ரியை ஜனாதிபதி ஆக்கியது. தமிழிழவிடுதலைப் புலிகள அழித்ததனால் சிங்கள மக்களின் மீட்பராக அவர் கருதப்பட்டார். தேர்தலில் தோல்விகிடையாது என்ற எண்ணமே  மூன்றாவதுமுறை ஜனாதிபதியாகும் ஆசையை அவருக்கு அருக்கூட்டியது.

சகல அதிகாரங்களும் கையில் இருந்ததனால் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகும் திட்டத்தை வகுத்தார். அதற்கானதடைக்கற்கள் எல்லாவற்றையும் நிறைவேற்று முறை ஜனாதிபதி என்றதோரணையில் அகற்றினார்.காலம் கனிந்து வரும் வேளையில் அவரின் ச்சல்வைக்குள் பத்திரமாக இருந்த மைத்திரி வெளியேறினார்.சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் ஆகியோருடன் மைத்திரி கை கோர்த்ததால் மஹிந்தவின் தோல்விப்பாதை ஆரம்பமகியது.

 மஹிந்தவின் வெற்றிக்கணக்கு அழிக்கப்பட்டு தோல்விக்கணக்கு எழுத ஆரம்பிக்கப்பட்டதும்  அவருடன் கூட இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறத்தொடங்கினர். அரசாங்கத்தில் இருந்து வெளியேறுபவர்களி முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அன்றைய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். அவர்களை புனிதர்களாக கருதிய எதிரணி  பதிலடி கொடுத்து ஏற்றுக்கொண்டது.  குடும்ப அரசியலுக்கும்,ஊழலுக்கும் எதிராக போரடப்போவதாக அணிமாறியவர்கள் அறிக்கை விட்டார்கள். ஒப்பந்தம் எதுவும் இலலாமல் இவர்கள் அணிமாறி இருக்க மாட்டார்கள் என்பது வெளிவராத இரகசியம்
மகிந்தவை அதிகாரத்தில் இருந்து இறக்கவேண்டும் என முடிவெடுத்த ஜேவிபி எதிரணிகளுடன் எதுவித ஒப்பந்தமும் இன்றி மறைமுக ஆதரவு தெரிவித்தது.இலங்கை அரசியலில் கிங்மேக்கராக ஒருகாலத்தில் விளங்கிய ஜேவிபி மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக ஒதுங்கி நின்று தனியாகப்பிரசாரம் செய்தது.அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த ரிஷாட்  அரசியல் நிலவரத்தை உணர்ந்து எதிரணிக்குத்தாவினார். ரிஷாட்டைஎதிர்த்து அக்கட்சியில் இருந்து முதலில் வெளியேறியவரை எதிரணி நடுத்தெருவில் விட்டு விட்டது. 

 தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் முடிவெடுகாது காலத்தைக்கடத்தின. தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும்  யாருக்கு வக்களிக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டனர். வாக்காளரின்  ம்னநிலையை தலைமைகளும் உணர்ந்து கொண்டன  மக்களின் மன நிலைக்கு அவர்களும் பச்சைக்கொடி காட்டினர். இந்தத் தேர்தல் முடிவுக்கு முற்று முழுதாக மக்கள்தான் பொறுப்பு  அரசியல் வாதிகள் மக்களின் பின்னால் போய் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக தமிழ்மககள் எதுவித ஒப்பந்தமும் இன்ன்றி வாக்களித்துள்ளனர்.தமிழ் மக்களின்மீது முன்னைய அரசாங்கம்  அடக்குமுறையைபிரயோகித்தபோது முஸ்லிம் மக்கள்  மெளனமாக அங்கீகரித்தனர். மசூதிகள் தகர்க்கப்பட்டபோதுதான் தமிழர்களின் வலியை அவர்கள் உணர்ந்தார்கள். முன்னைய அரசின் செல்லப்பிள்ளையான பொதுபலசேனாவின் கொடூரம் முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டியது. முஸ்லிம் தலைவர்கள் சற்று தாமதமாக முடிவெடுத்தார்கள்.

ஆட்சிமாறிவிட்டது  காட்சிகள் மாறத்தொடங்கிவிட்டன. செயலாளர்கள்  மாறுகின்றனர், அரசதிணக்கள தலைவர்கள் மாறுகின்ற்னர். சிலர் இராஜினாமச் செய்துவிட்டனர்.  சிலர் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் சில்ர் தப்பி ஓடிவிட்டதாக வதந்தி பரவுகிறது.எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி  மைத்திரியை ஜனாதிபதியாக்கிய தமிழர்களுக்கு  அவர் என்ன செய்யப்போகிறார். அவருடைய 100 நாள்  வேலைத்திட்டத்தில்  தமிழ்மக்களுக்கு சாதகமான செய்திகளெவையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது மஹிந்த சொன்னவற்றையே கிளிப்பிள்ளைபோல் மைத்திரி திருப்பிக்கூறினார்.  போர்க்குற்ற விசாரணை  இல்லை.வடக்கில் இருந்து இராணுவம்  குறைக்கப்படமாட்டாது இதை எல்லாம் தெரிந்து  கொண்டுதான் தமிழ்மககள் மைத்திரியைத்தேர்வு செய்தார்கள். நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்திய மஹிந்தவுக்கு உரிய கெளரவம் வழங்கப்படும் என ரணில் அறிவித்துள்ளார். அதை எல்லாம் பொருட்படுத்தாது எதிர்ப்புக்க்காட்டி உள்ளனர் தமிழ் மக்கள்.

ஜனாதிபதி மைத்திரியின் முன்னால் பல பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. ஊழல்,அதிகாரதுஷ்பிரயோகம்,போதைவஸ்து வியாபாரம்,விலைவாசி என்பன் அவருக்குமுன்னல் உள்ள பொதுவான பிரசினைகள்.

அதிஉயர் பாதுகாப்பு என்றபெயரி சுவீகரிகப்பட்ட தமிழ்மக்களின்  நிலம்,வெற்றிக்கொண்டாட்டத்தின் நினைவுச்சின்னங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, குற்றம் சுமத்தப்படாது சிறையில் வாடும் கைதிகளுக்கு நிவாரணம், பொதுமக்களின் இடங்களில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவமுகாம்கள்,,புற்றீசல்கள்போல் முழைத்துள்ள விகாரைகள் இவற்றுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.இறந்தவர்களை நினைத்து அழுவதற்குக்கூட மஹிந்த அரசு அனுமதிக்கவில்ல. 

வடக்கு மாகாண்சபை இயங்குவதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டை நீக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு இவற்றுக்கெல்லாம் புதிய ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை அறிய உலகம் ஆவலாக உள்ளது. முகாம்களில் வாடுபவர்கள்  தாம் சொந்த இடத்துகுச்செல்லும் நாளை ஆவலுடன் எதிபார்த்துள்ளனர்.

தமிழ்மககளால் தோற்கடிக்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.  தனிச்சிங்கள் வாக்குக்களால் மூன்றாவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறலாம் என்று நினைத்த மஹிந்தவுக்கு  தமிழ்,முஸ்லிம் வாக்குகள் பதிலடி கொடுத்துள்ளன.எங்களை அரவணைத்தால் ஆட்சியில் இருக்கலாம் என்பதை தமிழ்,முஸ்லிம் மக்கள்  பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா,சீனா,இந்தியா ரஷ்யா போன்ற உலக நாடுகள் இலங்கைக்கு உதவிசெய்தாலும் வாக்களிப்பது இலங்கை மக்கள்தான் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி உள்ளது.