Sunday, October 31, 2021

மக்கள் மனதை கவர்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்


 

48 இலவச பள்ளிக்கூடங்கள் ,

 

26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,

 

16 முதியோர் இல்லங்கள் ,

 

 சுமார் 1800 மாணவ, மாணவியரின் கல்வி என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுடைய பயனுக்காகவும் வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார்.


கன்னட திரை உலகரசிகர்களின் மனதில் இடம் பிடித்த புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானதால் கன்னடா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.   சூப்பர் ஸ்டார் என கன்னட ரசிகர்களால் கொண்டாடப்படும் புனித் ராஜ்குமார் தனது வருமானத்தில் அதிக தொகையை சமூக சேவைக்காகச் செலவிட்டார். தனது  இரண்டு கண்களையும் தானம் செய்த புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பின்னரும் உகலத்தை காணும் பாக்கியம் பெற்றுள்ளார். 

நடிகர் புனித் ராஜ்குமார் காலையில்  உடற்பயிற்சி செய்யும்போது மயங்கியதால்   பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல் நிலை மிகவும்  ஆபத்தான நிலையில்  இருந்ததால் தீவிர சிகிச்சையலிக்கப்பட்டது.  ஐசியூவில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்  மதியம் காலமானார். 

புனித் ராஜ்குமாரின் மரணத்தால் கர்நாடகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள் அவரது மரணம்  தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

நடிகர்கள் ராஜ்குமார், பர்வதம்மா தம்பதியருக்கு 5வது மகனாக சென்னையில் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். புனித் ராஜ்குமாருக்கு முதலில் லோகித் என பெயர் வைத்தனர்.   இவர் தான் வீட்டின் கடைக்குட்டி. 6 வயதாக இருக்கும் போது இவர்களின் குடும்பம் சென்னையில் இருந்து மைசூருக்கு சென்றது. ராகவேந்திர ராஜ்குமார், சிவ ராஜ்குமார் என இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், அதே போல லக்ஷ்மி, பூர்ணிமா  என இரண்டு சகோதரிகள் உள்ளனர். 

புனித் ராஜ்குமார் ,  6 வயதாக இருக்கும் போதே நடிகர்களான தந்தையுடனும், சகோதரர்களுடனும் சேர்ந்து சினிமா செட்களுக்கு செல்வார். புனித் ராஜ்குமார் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைப்படத்தில் தோன்றினார் என்பது பலருக்கும் தெரியாது. 1976 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமதா கனிகே' என்னும் திரைப்படத்தில் அவரது தந்தை ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.  6 வயதாக இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத்  தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 10 வயதில் தேசிய விருதும், அடுத்தடுத்து இரண்டு மாநில விருதுகளையும் வென்றுள்ளார். 14 வயது முடிவதற்குள் 14 படங்களில் நடித்திருந்தார்.

ஷெர்லி எல் அரோராவின் 'என்ன அப்புறம் ராமன்?' நாவலை அடிப்படையாகக் கொண்டு என்.லட்சுமிநாராயண் இயக்கிய 'பேட்டடா ஹூவு' திரைப்படத்திற்காக புனித் ராஜ்குமார் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதைப் பெற்றார். அப்படத்தில் அப்பாவி ராமுவாக புனித் நடித்திருந்தார்.

புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல. இவர் பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமாரைப் போலவே ஒரு நல்ல பாடகர். இவர் ஆறு வயதாக இருக்கும் போதே, பிரபல இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த 1982ம் ஆண்டு  வெளியான பாக்யவந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற "பானா தாரியல்லி சூர்யா" என்ற தனது முதல் பாடலைப் பதிவு செய்தார்.


புனித் ராஜ்குமார் 1982-83 இல் வெளியான 'சாலிசுவ மொதகலு' திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக தனது முதல் கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

 2002ம் ஆண்டுஅப்புஎன்ற படத்தில் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் அவரை செல்லம்மாக அப்பு என்றே அழைக்கத்தொடங்கினர். பின்னர் தனது நடிப்பாற்றலால் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தார்அவரின் மூத்த சகோதரர்களைக் காட்டிலும் அவரின் செல்வாக்கு  அதிகமாகியது. 

ஆனால் புனித், தன்னுடைய அப்பாவின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட 13 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 'பெட்டடா ஹுவு' என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரம் என்றால் ஐந்தாறு வயதில் நடிப்பர். ஆனால், புனித் ராஜ்குமாரோ ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே திரையில் வந்துவிட்டார்.


'அப்பு' என்ற படத்தில் நாயகனாக சான்டல்வுட்டுக்கு அறிமுகமானார். படம் பெரு வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக்தான் தமிழில் சிம்பு நடித்த 'தம்'.  நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்று நினைக்காமல் வருடத்திற்கு ஒரு படம், இரண்டு படம் என கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார், புனித்.

'அபி', 'வீர கன்னடிகா', 'மயூரா', 'ஆகாஷ்', 'அரசு', 'மிலானா', 'வம்சி', 'ராம்', 'ஜாக்கி', 'ஹுடுகரு', 'பவர்', 'ரணவிக்ரமா' என இவரது பல படங்கள் 100 நாள்களைத் தாண்டி திரையரங்குகளில் களைகட்டியிருக்கின்றன. மகேஷ்பாபு நடித்த 'ஒக்கடு' தமிழில் விஜய் நடிப்பில் 'கில்லி'யாக ப்ளாக்பஸ்டரானது. அதன் கன்னட ரீமேக்கான 'அஜய்'யில் நடித்தது புனித் ராஜ்குமார்தான்.

'நாடோடிகள்', 'போராளி', 'இவன் வேற மாதிரி', 'பூஜை' ஆகிய தமிழ் படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்திருக்கிறார். 'போராளி' படத்தின் கன்னட ரீமேக்கை சமுத்திரக்கனியே இயக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தமிழ்த் திரையுலகை கவனித்தும் தமிழ் இயக்குநர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்திருக்கிறார் புனித். இவரது அப்பா பெயரில் இவர் நடித்த 'ராஜ்குமாரா' என்ற படம் வசூலில் சாதனை செய்தது.

கடைசியாக 'யுவரத்னா' என்ற படத்தில் சாயிஷாவுடன் நடித்திருந்தார். 'புட்டபொம்மா' பாடலை போலவே இருக்கும் அந்தப் படத்தின் ஒரு பாடல் கொண்டாடப்பட்டது. சண்டை, நடனம் இரண்டிலும் புனித் கில்லாடி. தற்போது 'ஜேம்ஸ்', 'த்வித்வா' என இரண்டு படங்கள் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. 46 வயதேயான இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது கன்னட சினிமா உலகம் மட்டுமன்றி இந்தியா சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

  புனித் ராஜ்குமாரின் அண்ணணும், பிரபல கன்னட நடிகருமான சிவ ராஜ்குமாரின் பஜ்ரங்கி 2 படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா  அவர் மரணமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. இந்த விழாயில் யாஷ், புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார் உள்பட 3 பேரும் பங்கேற்றனர். இதில் மூன்று பேருமே மகிழ்ச்சியுன் கட்டிப்பிடித்தபடி பேசி சிரித்து ஆடி பாடி மகிழச்சியுடன் இருந்தனர். இறுதியாக தனது அண்ணணுடன் சேர்ந்து புனித் ராஜ்குமார் நிகழ்ச்சியில் நடனமும் ஆடினார். 

பஜ்ரங்கி 2 படம் வெளியானதை ஒட்டி, படக்குழுவை வாழ்த்தி புனித் ராஜ்குமார் ட்வீட் போட்டார்.  காலையில் ட்வீட் போட்டவர் மதியம் உயிருடன் இல்லை என்பதை ரசிகர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. 

1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புனித் ரஜ்குமாரின் குடும்பம் முழுவதுமே திரைத்துறையில் தான் உள்ளனர். சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்களாக உள்ளனர். மேலும் இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் குடும்பத்தில் புனித் ராஜ்குமாருடன் சேர்த்து 12 பேர் திரைத்துறையில் நடிகர்களாகவும், இயக்குமர்களாகவும், நடிகையாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரே வருடத்தில் கன்னட திரையுலகில் இரண்டு பெரும் நட்சத்திரங்கள் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட உலகில் கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் ஏற்படும் இரண்டாவது பெரிய மரணம் ஆகும் இது. கடந்த வருடம் பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். இவர் பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவிற்கு கடந்த ஜூன் 6ம் திகதி மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் அன்றைய தினமே மரணம் அடைந்தார். இவரின் மரணத்திற்கும் கார்டியாக் அர்ரெஸ்ட் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். நல்ல உடற்கட்டு கொண்ட, பிட்டான நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் மரணம் அடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயது என்ன சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்த போது அவருக்கு வயது   35தான். இந்த நிலையில்தான் 46 வயதே நிரம்பிய புனித் ராஜ்குமாரும் கார்டியாக் அர்ரெஸ்ட் காரணமாக மரணம் அடைந்துள்ளார். 

கன்னட திரையுலகில் அப்பு மற்றும் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர்  நடிகர் மட்டுமில்லாமல், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என்று பன்முகத் திறமைக்கொண்டு விளங்கி இருக்கிறார். இவ்வளவு சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் இடம் பெற்ற புனித் ராஜ்குமார்  இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும், இவரது நினைவுகள் என்றும் மக்கள் மனதில் அழியாது நிலைத்திருக்கும்.

No comments: