Sunday, July 10, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 26

 ஹிந்தி  திரை உலகின் கனவுக்கன்னி ஹேமமாலி.1970 களில்  ஹேமமாலி தர்மேந்திரா ஜோடி ஹிந்தி திரை உலகை வசப்படுத்தியது. ஹிந்தியில் மட்டுமல்லாது  இந்தியா முவுவதும் இந்த ஜோடியைக் கொண்டாடியது. கடல் கடந்து இலங்கையிலும் ஹேமமாலி தர்மேந்திரா ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது.

திரையில் இணைந்த ஹேமமாலி தர்மேந்திரா ஜோடி நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்தது.  அவர்களுடைய திருமணம் திரைப்படம்போல் விறுவிறுப்பாகபோய் கடைசியில் எதிர் பாராத கிளைமேக்ஸ் காட்சியாக  முடிவடிந்தது. இந்த காதல் ஜோடிக்கு வில்லனாக இன்னொரு கதாநாயகன் ஜிதேந்திரா இடையில் புகுந்தார்.

ஹேமமாலினியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம். அப்பாவுக்கு வேலை டெல்லியில் என்பதால் 12 வயதுவரை அவர் டெல்லியில் வளர்ந்தார். அதன் பிறகு சென்னைவாசம். சின்ன வயதிலிருந்து நடனம் கற்று வந்ததால் 1963 இல் ஜிஎன் வேலுமணியின் சரவணா பிக்சர்ஸ் தயாரித்த, இது சத்தியம் படத்தில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் அசோகன், சந்திரகாந்தா நடித்திருந்தனர்.

இயக்குநர் ஸ்ரீதர் தனது வெண்ணிற ஆடை படத்தில் ஹேமமாலினியை நாயகியாக அறிமுகப்படுத்த விரும்பி மேக்கப் டெஸ்ட் எடுத்து, ஒரு பாடல் காட்சியையும் ஹேமமாலினியை வைத்து படமாக்கினார். அப்போது அவர் ஒல்லியாக இருந்ததால் அவரை மாற்றி ஜெயலலிதாவை நாயகியாக்கினார். 

1965 இல் பாண்டவ வனவாசம் தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு ஹேமமாலினி நடமாடினார். 1968 இல் இந்தியில் ராஜ் கபூரின், சப்னோம்கி சவுதாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். படம் சுமாராகப் போனாலும் ஹேமமாலினியின் தோற்றமும், வனப்பும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. 1970 இல் தர்மேந்திராவுடன் முதல்முறையாக ஜோடியாக நடித்தார். அந்த வருட இறுதியில் தேவ் ஆனந்துடன் நடித்த, ஜானி மேரா நாம் திரைப்படம் அவரை இந்தியின் கனவுக் கன்னியாக உயர்த்தியது.

1970 க்குப் பிறகு வருடத்துக்கு இரண்டு படங்களாவது தர்மேந்திரா - ஹேமமாலினி ஜோடியின் நடிப்பில் வெளியானது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தர்மேந்திராவும், ஹேமமாலினியும் காதலிக்க ஆரம்பித்தனர். ஹேமமாலினியின் பெற்றோருக்கு இந்த காதலில் விருப்பமில்லை. எப்படி தர்மேந்திராவை கழற்றிவிடுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

இந்த காலகட்டத்தில் ஹேமமாலினியுடன் ஜிதேந்திராவும் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அவருக்கு ஹேமமாலினி மீது ஒருதலைக் காதல் உண்டானது. இதனை  அறிந்த ஹேமமாலினியின் பெற்றோர், தர்மேந்திராவுக்குப் பதில் ஜிதேந்திராவை   ஹேமமாலினிக்கு திருமனம்  செய்து வைக்க விரும்பினர்கள்.  ஜிதேந்திராவும் முன்னணி நடிகர், முக்கியமாக திருமணம் ஆகாதவர். தனது பெற்றோருக்கும் அதில் சம்மதம் என்பதால் ஹேமமாலினியும் அரைகுறையாக ஒப்புதல் அளித்தார்.

மும்பையில் திருமணத்தை நடத்தினால் பிரச்சனையாகும் என சென்னையில் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இதனை அறிந்த தர்மேந்திரா உடனடியாக சென்னைக்கு பறந்து சென்தார்.  தர்மேந்திரா தனியாகச் செல்லவிலை. ஷோபா எனும் விமானப் பணிப்பெண்ணை கூட்டிச் சென்றார்.   ஷோபாவை ஜிதேந்திரா காதலித்து வந்தார். ஹேமமாலினியை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்ததும் ஷோபாவை உதறிவிட்டு வந்திருந்தார்.

 தர்மேந்திரா ஷோபா என்ற காதல் அஸ்திரத்துடன் வந்ததால் ஹேமமாலினி, ஜிதேந்திரா திருமணம் தடைபட்டது. 1980 இல் ஹேமமாலினியை தர்மேந்திரா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் இஷா தியோல் மணிரத்னத்தின் ஆய்தஎழுத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார்.

 ஜிதேந்திரா தான் காதலித்த  ஷோபாவை திருமணம் செய்தார். இதில் சுவாஸியமான இன்னொரு விஷயம் ஹேமமாலினி தர்மேந்திராவை திருமணம் செய்த கொண்ட பின்பும் ஜிதேந்திராவுடன் பல படங்களில் ஒன்றாக நடித்தார். இவர்கள் கதையை சினிமாவாக எடுத்தால் 100 கோடி வசூலை எதிர்பார்க்கலாம்.

நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக் கலைஞர், அரசியல்வாதி  என பலமுகம் கொண்டவர்

ஹேமமாலினி. துவக்க காலத்தில் “கனவுக் கன்னி என அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம மாலினி, 1977இல் அதே பெயருள்ள (டிரீம் கேர்ள்) திரைப்படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஹேம மாலினி சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். 150 திரைப்படங்களுக்கும் கூடுதலாக நடித்துள்ளார். தனது திரைப்பட வாழ்க்கையில், ஹேம மாலினிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பதினோரு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்; 1972இல் ஒருமுறை வென்றுள்ளார். 2000இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இந்திய அரசின் பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார். 2012இல் சேர் பதம்பத் சிங்கானியா பல்கலைக்கழகம் ஹேம மாலினிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். 2006இல் சோபோரி இசை மற்றும் நிகழ்த்து கலை அகாதமியிலிருந்து விடாஸ்டா விருது பெற்றுள்ளார்.

2003 முதல் 2009 வரை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2014இல் மதுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல அறக்கட்டளைகள் மற்றும் சமூகத் தாபனங்களுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்.

ஹேம மாலினி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் தமிழ்-பேசும் ஐயங்கார் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை சக்கரவர்த்தி, தாயார் ஜெயா சக்கரவர்த்தி. இவரது அன்னை திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

1999இல் ஹேம மாலினி பஞ்சாபின் குர்தாசுபூர் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் இந்திப்பட நடிகர் வினோத் கண்ணாவிற்காக பரப்புரையில் ஈடுபட்டார். 2004ஆம் ஆண்டு பெப்ரவரியில் அலுவல்முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2003 முதல் 2009 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 2010இல் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014இல் மக்களவை பொதுத் தேர்தலில் மதுராவிலிருந்து 3,30,743 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.

ஹேம மாலினி விலங்குரிமை அமைப்பான விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் இந்தியக் குழுவின் ஆதரவாளர். 2009இல் மும்பையின் நெருக்கடிமிக்க சாலைகளில் குதிரை வண்டிகள் இயக்கப்படுவதை தடை செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார். 2011இல் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு காளையை அடக்கும் போட்டிகளை (ஏறுதழுவல்) தடை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார். அவ்வாண்டின் “வருடத்து பீட்டா நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாவர உணவாளராக “எனது உணவு விருப்பங்கள் புவிக்கும் விலங்குகளுக்கும் உதவுவதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது எனக் கூறியுள்ளார்.

ஹேம மாலினி தமிழ் திரைத்துறையில் தன் திரைப்பயணத்தை தொடங்கி ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனர், எழுத்தாளர் என பணியாற்றியுள்ளார். மேலும் இவர் அரசியலிலும் பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

சென்னையின் ஆந்திர மகிள சபாவில் வரலாற்றுப் பிரிவில் கல்வி கற்றார். பின்னர் பள்ளியிறுதிக் கல்வியை தில்லியின் மந்திர் மார்கிலுள்ள பள்ளியில் முடித்தார்.

 1963ம் ஆண்டு இது சத்தியம் என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார். 1968ம் ஆண்டு சப்னோ கா செளடாகர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். அதன் பின்னர் எண்ணற்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக திகழ்ந்தார். 2003 முதல் 2009 வரை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக சார்பில் அவர் ராஜ்யசபாவுக்குச் சென்றார். 2014ம் ஆண்டு ஹேமமாலினி லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: