திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம்
பொன் விழா கொண்டாட்டத்தின் போது சீல் வைக்கப்பட்டது. தலைமைத்துவப் போட்டி இருக்கக்
கூடாது என்பதற்காக இரட்டைத் தலைமையுடன் இயங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஒற்ற்றைத் தலைமைக் குரல் ஓங்கி ஒலித்தது.
ஒற்றைத் தலைமையை ஓ. பன்னீர்ச்செல்வம், விரும்பவில்லை. பன்னீருக்குத்
தெரியாமல் ஒற்றைத் தலைமைகான ஏற்பாடுகள் அனைத்தையும்
பூர்த்தி செய்த பின்னர் தனது ஆதரவாளர்கள் மூலம்
ஒற்றைத் தலைமைக் கோஷத்தை முன் வைத்தார் எடப்பாடி.
எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் பணபலம் பன்னீரின் பின்னால் நின்றவர்களை மாற்ரியது. பன்னீரின் பக்கம் நின்ற ஆதரவாளர்கள் மூன்று நாட்களில் எடப்பாடியின் பின்னால் சென்றனர்.
இதனால் பன்னிர அதிர்ச்சியடைந்தார்.
கழகப் பொதுச் செயலாளராக
எடப்பாடிக்கு முடி சூட்டிய வேளை, பன்னீர்ச்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு
பூதம் போல் பாதுகத்தவர்களுக்கும் பன்னீரின் ஆதராளர்களுகு இடையி மோதல் நடைபெற்றது. கல்வீச்சு,
அடிதடி, மணடை உடைப்பு என அங்கு நடந்த களேபரங்கள் தொலைக் காட்சிகளுக்குத் தீனியாகின.சட்டம்
ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பொருலளராகத் தெரிவு செய்யபட்ட எடப்பாடியால்
வெற்றிச் சிரிப்புடன் அலுவலகத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள 'சீல்' அகற்றப்பட்டு, மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்த வழக்கில், உடனடியாக விசாரிக்க அவசரமில்லை என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு எண் பதிவு செய்து, வரிசைப்படி வரும்போது விசாரிப்பதாக, நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றகழக ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்ததால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சி பொதுக்குழுக் கூட்டம், 11ல், சென்னை வானகரத்தில் நடக்கும் என, பழனிசாமி தரப்பு அறிவித்ததும், அதற்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடையில்லை எனக் கூறி, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றகழக பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி
நடந்தது. இதில், ஏற்கனவே இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து
செய்யப்பட்டன.
பழைய முறைப்படி மீண்டும் பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டது.
பொதுச் செயலர் தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் உள்ளிட்ட
நான்கு பேரை, கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நேரத்தில்,
பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்துக்கு
சென்றார். அவர் வந்தால் தடுப்பதற்கு, பழனிசாமி தரப்பினரும் ஆட்களை நிறுத்தி இருந்தனர்.
அதனால், அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர்; கட்டையால் தாக்கினர்.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அப்பகுதியே போர்க்களமாக மாறியது. கல் வீச்சில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி
நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மோதல் தொடர்வதை தடுக்க, அப்பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி, 'சீல்' வைக்கப்பட்டது.
அலுவலகம் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது தொடர்பாக, வரும்
25ம் திகதி நேரில் ஆஜராகி, இருவரும் விளக்கம் அளிக்க, கோட்டாட்சியர் சார்பில் 'நோட்டீஸ்'
அனுப்பப்பட்டு உள்ளது.
தலைமை அலுவலகத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை
உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
'இந்த வழக்கை அவசர வழக்காக, விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என, நீதிபதி
என்.சதீஷ்குமாரிடம், இரு தரப்பு வழக்கறிஞர்களும் முறையிட்டனர். ஆனால், இந்த வழக்குகள்
நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இதையடுத்து, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்
முகமது ரியாஸ் ஆஜராகி, 'வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப் படாததால், அவசர வழக்காக விசாvvvரணைக்கு
எடுத்து கொள்ள வேண்டும்' என, முறையிட்டார்.
இதற்கு நீதிபதி, 'எம்.பி., - எம்.எல்.ஏ., தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு
எடுக்க, தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும்; அதற்குரிய நடைமுறை முடிந்ததும்,
வழக்கமான வரிசை முறைப்படி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்' என்றார்.
இதேபோல, 'பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு வழக்கு எண் பதிவு நடைமுறை முடிந்த பின், விசாரணைக்கு பட்டியலிடப்படும்' என்றும், நீதிபதி தெரிவித்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் தொடங்கப்பட்டு 50வது ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது.
பொன்விழா ஆண்டான 2022-ல் அக்கட்சியில் பெரும் பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு
அலுவலகமும் சீல் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது அக்கட்சிக்கு புதிதல்ல.
அக்கட்சியின் வரலாற்றில் அதிமுக அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ சீல் வைக்கப்படுவது இது
மூன்றாவது முறை.
ராயப்பேட்டையில் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தை எம்ஜிஆரின் மனைவி
ஜானகி 1957-ம் ஆண்டு வாங்கினார். அதை 1987-ம் ஆண்டு தன் கணவரான எம்ஜிஆரிடம் கொடுத்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகி தலைமையில் ஜா அணி
மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஜெ அணியாக அதிமுக பிரிந்தபோது யார்
தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவது எனப் போட்டி நிலவியது. எம்ஜிஆர் மறைவிற்குப் பின்
ஜானகி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்
தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட 15 நாள்களில் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக அலுவலகம்
சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி சீல் வைக்கப்பட்டது.
அதன் பின் நீதிமன்ற வழக்குகள் மூலமாக ஜானகி அணிக்குச் சாதகமாகத்
தீர்ப்பு வந்தபோது இரு அணிகளும் ஒன்றிணைந்து கட்சி, தலைமை அலுவலகம் இரண்டுமே ஜெயலலிதாவின்
கட்டுப்பாட்டிற்குச் சென்றிருந்தது. அதன் பின்பு ஜெயலலிதா அக்கட்சியின் பொதுச்செயலாளர்
ஆனதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அதே போல் 1990-ம் ஆண்டு சு.திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தைக்
கைப்பற்ற முயன்றபோது அவர்களுக்கும் ஜெயலலிதா ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதன் காரணமாக மீண்டும் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையேயான பிரச்சினையால் மூன்றாவது முறையாக
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பிரச்சினை நீதிமன்றம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தன் அனுமதி இல்லாமல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதால் அதை
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என எடப்பாடி நியமித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு எதிராக தேர்தல்
ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல்
ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்
தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்றும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும்
இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமையன்று எடப்பாடி பழனிச்சாமி துணை பொதுச்செயலாளர்களாக
கேபி.முனுசாமி நத்தம் விஸ்வநாதன், 11 அமைப்புச்
செயலாளர்கள்., பொன்னையனை எம்ஜிஆர் மன்ற செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் ஒரு கடிதம்
எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், சட்ட விதிகளுக்கு எதிராக இந்த நியமனங்கள் இருப்பதாகவும்
இதற்கு தேர்தல் ஆணையம் எந்த ஒரு அங்கீகாரமும் வழங்க கூடாது என்றும் ஏற்கனவே நீதிமன்றத்திலும்
இது குறித்து வழக்குகள் இருப்பதால் இந்த நியமனம் செல்லாது என குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்திலும், தேர்தலாணையமும் விசாரித்து தீர்ப்பு சொல்லும்
வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஜெயலலிதா வகித்த பொதுச்
செலலாளர் பதவியை ஏனையவர்கள் வகிக்கக்கூடாது என்ற சட்டத்தை பதவி ஆசை பிடித்த எடப்பாடி மாற்றியமைத்துள்ளார்.பதவி
வகிக்கப் போகும் நிர்வாகிகளும் அவருக்குத் துணை போகிறார்கள்.
No comments:
Post a Comment