இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்பட்ட கோலியின் துடுப்பாட்டம் மிக மோசமாக உள்லது. இந்திய வெற்ரிக்கு பெரும் பங்காற்ரியவர். இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது வெற்றிக் கனியைப் பரித்துக் கொடுப்பவர். ஆக்ரோஷக் கோலி காணாமல் போய்விட்டார்.
கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தினம் தோறும் கடுமையான
விமர்சனங்களை சந்தித்து வரும் விராட் கோலி
அதற்கு முற்றுப்புள்ளி
வைப்பார் என்று ரசிகர்கள் ஏட்கத்
தொடங்கிவிட்டனர். கடைசியாக
கடந்த 2019இல் சதமடித்திருந்த அவரை
பெரிய பெயரை வைத்துக் கொண்டு
எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல்
இருப்பீர்கள் என்று கபில் தேவ்
உட்பட பலர் விமர்சித்ததுடன்
அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
70 சதங்களை அடித்து 20000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை
குவித்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக
நிரூபித்துள்ள அவருக்கு கிரேம் ஸ்வான், கெவின்
பீட்டர்சன் உட்பட நிறைய வெளிநாட்டு
வீரர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த
சோதனை காலங்களிலும் இடையிடையே 40, 50 போன்ற ஓட்டங்களை அடித்து
வரும் அவர் தனது தரத்திற்கேற்ப
செயல்படவில்லையே தவிர பார்ம் அவுட்
இல்லை என்று அவரது ரசிகர்கள்
புள்ளிவிவரங்களை காட்டி வருகின்றனர்.
இவ்வளவு
எதிர்ப்பையும் மீறி ஏராளமான ஆதரவையும்
வாய்ப்புகளைப் பெற்று வரும் அவர்
சமீப கால்ங்களில் அதற்கேற்றாற்போல் கணிசமான ரன்களைக் கூட
அடிக்காமல் முன்பை விட மோசமாக
செயல்படத் துவங்கியுள்ளது வேதனையாக அமைகிறது. ஆம் தன்னுடைய கடைசி
5 ஒருநாள் போட்டிகளில் 8, 18, 0, 16, 17 என சொற்ப ஓட்டங்களில்
வெளியேறிய அவர்
எந்த ஒரு போட்டியிலும் 20 ஓட்டங்களைத்
தாண்டவில்லை. கடந்த 2008இல் அறிமுகமாகி 14 வருடங்களில்
ஏராளமான சாதனைகள் படைத்துள்ள விராட் கோலி தன்னுடைய
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி முதல் முறையாக
தொடர்ச்சியாக 5 போட்டிகளில் 20 ஓச்சங்களை
கூட தாண்ட முடியாமல் மாபெரும்
வீழ்ச்சியை சந்தித்துள்ளார்.
கோலி ஒரு
தொடரில் 4-வது முறையாக குறைந்தபட்ச
ஸ்கோர் பதிவு செய்துள்ளார். அந்த
பட்டியல்:
1. 13, பாகிஸ்தானுக்கு எதிராக,
2012
2. 26, வெஸ்ட்
இண்டீசுக்கு எதிராக, 2022
3. 31, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2013
4. 33, இங்கிலாந்துக்கு எதிராக,
2022*
2022இல் 8 ஒருநாள்
இன்னிங்ஸ்சில் வெறும் 2 அரைச் சதங்களுடன் 175 ஓட்டங்கள்
எடுத்துன்களை 21.87 என்ற மோசமான சராசரியில்
எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment