Tuesday, July 12, 2022

புவனேஸ்வர் குமார் புதிய உலக சாதனை

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டி20 போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.

இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி    20 ஓவர்களில் 170 ஓட்டங்கள் எடுத்தது. 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது நான்கு ஓவர்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே வழங்கி மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிறப்பான பந்துவீச்சு காரணமாக வெற்றிக்கு வித்திட்ட புவனேஸ்வர் குமார் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்நிலையில், இந்த போட்டியின் போது மற்றொரு முக்கிய சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார். சர்வதேச ரி20 போட்டிகளில் பவர்பிளேவில் 500 டொட் போல்களை வீச்சிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார். 383 டொட் போல்களை வீசி இரண்டாவது இடத்தில் மேற்கு இந்திய தீவுகள் பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி வீசியுள்ளார். நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 368 டொட் பந்துகளை வீசி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

No comments: